ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கோவிட் 19 - இரண்டாம் அலை - ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள்...
9 பேர் கொண்ட குழுவில் தொடக்க அல்லது நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உறுப்பினராக செயல்படுவர்...
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கோவிட் 19 - இரண்டாம் அலை - ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள்...
9 பேர் கொண்ட குழுவில் தொடக்க அல்லது நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உறுப்பினராக செயல்படுவர்...
கொரோனா தனிமை மையங்களில் கல்வி அதிகாரிகளுக்கு பணி...
>>> கொரோனா தடுப்பு பணி - வட்டாரக் கல்வி அலுவலர்கள் நியமனம் : மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்...
கொரோனா தடுப்பு பணி - பொறுப்பு அலுவலர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் நியமனம் : மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்...
ஆணை :
திருச்சிராப்பள்ளி மாவட்டம் , திருவெறும்பூர் வட்டம் , துவாக்குடி கிராமம் , தேசிய தொழில்நுட்ப மைய வளாக மாணவ மாணவியர் விடுதியில் COVID - 19 தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பணிபுரிய கீழ்கண்டவாறு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது . கீழ்காணும் அலுவலர்கள் தங்களுக்கு சுழற்சி முறைகளில் மேற்கண்ட கொரோனா சிகிச்சை மையத்தில் ஆஜரில் இருந்து பணிபுரிய வேண்டும் . மேலும் , உள்ளாட்சித்துறை அலுவலர்களான திரு.குமரேசன் , நகர திட்டமிடல் செயலாக்க அலுவலர் மற்றும் கார்த்திகேயன் , வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பொறுப்பு அலுவலர்கள் ஆவார்கள்.
>>> திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்...
ஈரோடு மாவட்டம் - கொரோனா தடுப்பு மருத்துவ மையங்களில் உணவு, குடிநீர், முக கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் கண்காணிப்பு அலுவலர்களாக ஆசிரியர்கள் நியமனம்...
>>> ஈரோடு மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள் ந.க.எண்: 8100/2020/பே.மே., நாள்: 26-05-2021...
கரோனா தடுப்புப் பணியில் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கட்டாயப்படுத்தக் கூடாது. விருப்பமுள்ளவர்கள் தன்னார்வலராகப் பணியாற்றலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், செ.ராமலிங்கம், எஸ்.சண்முகம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை க.அன்பழகன், க.அண்ணாதுரை, என்.அசோக்குமார், டிகேஜி.நீலமேகம், எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மருத்துவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர்.
இறுதியாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கருத்துரை வழங்கியபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதர மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பரவல் குறைவாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பல்வேறு வகையில் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுவதால், இதன் முடிவுகள் கவனமாகக் கையாளப்பட்டு வருகின்றன. கரோனா பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தவரை விரைந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களைவிட ஆக்சிஜன் படுக்கை அதிக அளவில் தயாராக உள்ளது. 15 நாட்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு தயார் நிலையில் உள்ளோம். ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் போதுமானதாக உள்ளன. இருப்பினும் மாநில சுகாதாரத் துறையிடம் பேசி, மாவட்டத்துக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், படுக்கை வசதிகள் பெறப்படும்.
தனியார் மருத்துவமனையில் இதர நோய்களுக்குக் காப்பீடு கிடைக்கவில்லை எனப் புகார்கள் வருகின்றன. இது தொடர்பாகத் தனியார் மருத்துவமனைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தில் அறிவுரைகள் வழங்கப்படும்.
கரோனா தடுப்புப் பணியில் ஆசிரியர்களைப் பயன்படுத்துவது தொடர்பாக சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகப் புகார்கள் வந்தன. அதில் விருப்பமுள்ள ஆசிரியர்களை, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.
கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ள ஏதுவாக கூடுதல் தடுப்பூசியை மாநில சுகாதாரத் துறையிடம் கேட்டுள்ளோம். விரைவில் அவை கிடைத்துவிடும்''.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கொரோனா களப்பணிக்கு சுய விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றலாம் - வீட்டு வசதித்துறை அமைச்சர் பேட்டி...
வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகள் உள்ளதா என கண்டறியும் களப்பணியில் ஈடுபட ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று தொற்றுக்கான அறிகுறிகள் குறித்து கண்டறிய வேண்டும் என ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வித் துறை மூலம் ஆசிரியர்களுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது:
500 ஆசிரியர்கள் உயிரிழப்பு
மாநிலம் முழுவதும் தேர்தல் பணி மற்றும் பாடப் புத்தக விநியோகத்தில் ஈடுபட்டதன் விளைவாக, கரோனா தொற்றுக்கு ஆளாகி 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் செவிலியர் செய்யக்கூடிய தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மற்றும் அறிகுறிகளைக் கண்டறியும் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆசிரியர்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். எவ்வித பயிற்சியும் இல்லாமல், ஆசிரியர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் கரோனா பரவும்.
கடந்த ஆண்டு கரோனா பரவலின்போது, ஆசிரியர்கள் மருத்துவமற்ற பணிகளில் மட்டும் ஈடுபடுத்தப்பட்டனர். அதே நடைமுறையை இந்த ஆண்டும் பின்பற்ற வேண்டும்.
தவிர்க்க இயலாத சூழலில் ஆசிரியர்களுக்கு களப்பணி வழங்கப்பட்டால், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கூடாது. ஆசிரியர்களை நேரடி களப்பணியாளர்களாக நியமிக்கும் முன்பாக, அவர்களை முன்களப் பணியாளர்களாக கருதி அரசாணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்தகோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு மனுவும் அனுப்பியுள்ளார்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு கரோனா அறிகுறிகள் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட களப்பணியை ரத்து செய்ய வேண்டும். தேவைப்பட்டால் களப்பணி அல்லாத இதர பணிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.
இறந்த ஆசிரியைக்கு பணியாணை
ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ஆசிரியை மணிமேகலை நேற்று முன்தினம் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கும் கரோனா தொற்றை கண்டறியும் பணியில் ஈடுபட, பணியாணை வழங்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 20 மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, தொற்று பரவல் கட்டுப்பாட்டு பணிகளை ஒருங்கிணைத்திட அமைச்சர்கள் நியமனம்...
செய்தி வெளியீடு எண்: 135, நாள்: 22-05-2021...
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள 14 மாவட்டங்களில் தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க 20 அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்...
இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் விவரம்:
*கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விவாதிக்கப்பட்டது. அப்போது, கரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை தொடா்பான பணிகளை ஒருங்கிணைக்க மாவட்டந்தோறும் அமைச்சா்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 14 மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகளைக் கண்காணிக்கவும் சிகிச்சை தொடா்பான பணிகளை ஒருங்கிணைக்கவும் 20 அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
*1. சென்னை மாவட்டம் - சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு.*
*2. செங்கல்பட்டு மாவட்டம் - ஊரகத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்.*
*3. கோயம்புத்தூா் மாவட்டம் - உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, வனத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன்.*
*4. திருவள்ளூா் மாவட்டம் - பால்வளத் துறை அமைச்சா் சா.மு. நாசா்.*
*5. மதுரை மாவட்டம் - வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.*
*6. தூத்துக்குடி மாவட்டம் - சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன், மீன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.*
*7. சேலம் மாவட்டம் - மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.*
*8. திருச்சி மாவட்டம் - நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ்.*
*9. திருநெல்வேலி மாவட்டம் - கூட்டுறவுத் துறை அமைச்சா் இ.பெரியசாமி, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு.*
*10. ஈரோடு மாவட்டம் - வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி.*
*11. காஞ்சிபுரம் மாவட்டம் - பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு.*
*12. திருப்பூா் மாவட்டம் - செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.*
*13. வேலூா் மாவட்டம் - நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி.*
*14. விழுப்புரம் மாவட்டம் - உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்.*
மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...