கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு எப்பொழுது செய்யலாம்? தெளிவான விளக்கம்...




இரண்டு அரசாணைகளைக் குறிப்பிட்டு E.L.சரண்டர் விண்ணப்பிக்கலாம் என்று மீண்டும் தற்போது வாட்சப்களில் தகவல் பகிரப்படுகிறது. 


அதனைத் தொடர்ந்து ஒரு விளக்கம்: நாள் 27.4.2020 ல் அரசாணை 48 - ன் மூலம் சரண்டர் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  மேலும் விடுப்பு விதிகளுக்கென தனியாக தமிழ்நாடு விடுப்பு விதிகள், 1993  என தனியாக விதிகள் தொகுப்பும் உள்ளது. சரண்டர் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தகவலை தமிழ்நாடு விடுப்பு விதிகளில் குறிப்பிடுவதற்காக ( திருத்தம்) Amendment to Tamilnadu Leave Rules,1993 எனக் குறிப்பிட்டு அரசாணை 12 நாள்: 8.2.2021 வெளியிடப்பட்டது. இவைகளில் அரசாணை வெளியிடப்படும் போது சரண்டர் requests மற்றும் சரண்டர் bills pending இருந்தாலோ process தொடரக்கூடாது ( sanction of  disbursement shall not be processed) என உள்ளது. மேலும் அரசாணை நாளில் சரண்டர் ஆணை வழங்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்து ஊழியரின் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் ( they shall be cancelled and earned leave recredited to the leave account to the Government servant) என்று உள்ளது. 


💥 இத்தகவல் நிறுத்திவைப்பு மற்றும் தமிழ்நாடு விடுப்பு விதிகளில் திருத்தம் என்பதற்காக வெளியிடப்பட்ட இரு அரசாணைகளிலும் இடம்பெற்றிருக்கிறது. 


 தற்போது cancelled, recredited என்ற வார்த்தைகளின் வரிகளை தவறான அர்த்தம் கொண்டு, ஓராண்டு காலம் போக, மீதியுள்ள கால விடுப்புகளை கணக்கில் கொண்டு மே முதல் விண்ணப்பிக்கலாம் என ஒரு வாட்சப் தகவல் ஆங்காங்கே பகிரப்பட்டு வருகிறது. 



இதனால்  ஆசிரிய நண்பர்கள் குழம்ப வேண்டாம். EL சரண்டர் மீண்டும் வழங்க தனியாக அரசாணை வெளியிடப்படும் போது மட்டுமே பெற முடியும்.


 சம்பந்தப்பட்ட அரசாணைகளையும் இத்துடன் பதிவிடப்பட்டுள்ளது...


>>> Click here to Download G.O.Ms.No: 48, Dated: 27-04-2020...


>>> Click here to Download G.O.Ms.No: 12, Dated: 08-02-2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Centennial Schools - District wise

  நூற்றாண்டு பள்ளிகளின் பட்டியல் - மாவட்ட வாரியாக  List of Centennial Schools - District wise  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவு...