கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொய் சொல்ல வேண்டாம்; புகழ்ச்சி வேண்டாம்; உண்மையை சொல்லுங்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்...

 தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், பொய் சொல்ல வேண்டாம்.. புகழ்ச்சி வேண்டாம்.. உண்மை நிலவரத்தை சொல்லுங்கள், முழு உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம் என்று தெரிவித்தார்.



இதனால் திகைத்துப்போன அதிகாரிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உண்மை நிலவரத்தை விவரித்துள்ளார்கள். அவர்களிடம் ஆக்ஸிஜன் தேவைகள் குறித்தும், படுக்கை வசதிகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், மேல் அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் மிக மோசமாக பரவி வரும் இந்த இக்கட்டான நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின், முதல் நாளிலேயே அதிரடியாக பல்வேறு விஷயங்களை செய்துள்ளார்.


ஸ்டாலின் கலெக்டர்களுடன் மீட்டிங்

கொரோனா முகாமிற்கு சென்று நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் சென்னையின் கொரோனா பாதிப்பு நிலவரத்தையும் கேட்டறிந்தார். அதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நியமிக்கப்பட்டுள்ள 9 ஐஏஏஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 ஸ்டாலின் பேச்சு - திமுக மீது நம்பிக்கை

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் 'நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். மக்களின் உயிர்காக்கும் உன்னத பணியில் அரசோடு நீங்கள் தோளோடு தோள் கொடுத்து நிற்பீர்கள் என்று நம்புகிறேன்.


தினசரி பாதிப்பு - படுக்கைகள் தேவை

தற்போது தினசரி பாதிப்பு 25,000 ஆக உள்ள நிலையில் அந்த பாதிப்பு உயர உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அதற்கு ஏற்றவகையில் மருந்துகள்,ஆக்ஸிஜன் இருப்பு, படுக்கைகள் உள்ளிட்டவற்றின் தேவை இனி அதிகரிக்கும். ஆகையால் அதற்கு உரிய நடவடிக்கைகளை நாம் போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.


அவசர அவசிய தேவை - கொரோனா இறப்பு குறைப்பு

கொரோனா இறப்புகளை குறைத்திட கடந்த ஓராண்டாக மருத்துவத்துறை கொடுத்த அர்ப்பணிப்புமிக்க உழைப்பு தொடர்ந்திட வேண்டும். கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுங்கள். மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசர, அவசியத்தேவை எழுந்திருக்கிறது.



உண்மை சொல்லுங்கள் ; ஒளிவு மறைவு வேண்டாம்

கொரோனா பாதிப்பு  அதிகமுள்ள மாவட்டங்களில் ஏற்படும் கொரோனா பாதிப்பை குறைக்க அந்தப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த கூட்டமெல்லாம் நமக்கு நாமே ஆறுதல் அடைகிற கூட்டமல்ல. உண்மையை நேருக்கு நேராக சந்தித்தால் மட்டுமே நமது பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். ஆகையால் அதிகாரிகள் ஒளிவு மறைவு இல்லாமல் செயலாற்றுங்கள். புகழுரையோ, பொய்யுரையோ எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. முழு உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம்' இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


>>> முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடிப்பீர் - முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் - சிறப்பு காணொளி...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 : Literary Clubs & Quiz Competitions - Topics & Guidelines - DSE Proceedings

  2025-2026 : Literary Clubs & Quiz Competitions - Topics & Guidelines - DSE Proceedings , Dated : 17-07-2025 2025-2026 : தமிழ் இலக்...