கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதலமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒன்றிய நிதியமைச்சருடன் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு – வழங்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன?



நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சந்திப்பு – வழங்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன?


மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை இன்று (27.05.2026) புதுதில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.


இச்சந்திப்பின் பொழுது, விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்றும், இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்பதால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.


தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை (Institutes of National Importance) தமிழ்நாட்டில் நிறுவிடவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ இரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு



 அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் - முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் 


ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுடன் சந்திப்பு 


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக மனு அளித்ததும், கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உறுதி 


முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுள்ள துறைகள்

 


முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தனிச் செயலாளர்களான செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோருக்கான துறைகள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது ;


திரு. செந்தில்குமார் , இ.ஆ.ப.


நிதித்துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, நகராட்சி நிர்வாகம், நீர் வழங்கல் துறை, எரிசக்தி துறை, தொழில்துறை, முதலீட்டு மேம்பாடு, வர்த்தகத் துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, பொதுப்பணித்துறை, விஜிலென்ஸ் கமிஷன்,


திருமதி. லஷ்மி பிரியா, இ.ஆ.ப.


முதலமைச்சர் அலுவலக நிர்வாகம், முதலமைச்சர் நியமனம், பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பஞ்சாயத்து ராஜ் துறை, சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,


திரு. அண்ணாதுரை, இ.ஆ.ப.


இயற்கை வளங்கள் துறை, நீர்வளத் துறை, விவசாயிகள் நலத்துறை, கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சமூக சீர்திருத்தத் துறை, கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை, போக்குவரத்துத் துறை, சட்டத் துறை, சட்டமன்ற செயலகம், மனிதவள மேலாண்மைத் துறை, தமிழ் அபிவிருத்தி, தகவல் துறை,


திரு. விஷ்ணு, இ.ஆ.ப.


வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை, சுற்றுலாத்துறை, கலாச்சாரம் மற்றும் சமய அறக்கட்டளை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, சிறப்பு முயற்சிகள் துறை


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Office Order No.01. Dated: 15.05.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




CHIEF MINISTER'S OFFICE, 

SECRETARIAT, CHENNAI-2


Office Order No.01. Dated: 15.05.2026


Sub: Chief Minister's Office Allocation of subjects of the Departments among Secretaries to Chief Minister and Additional Secretary to Chief Minister Orders issued Regarding.


Ref: 1. G.O.(Rt) No.1654, Public (Special-A) Department, Dated 10.05.2026. 2. G.O. (Rt) No.1671, Public (Special-A) Department, Dated 12.05.2026.


The following allocation of subjects of the Departments among the Additional Chief Secretary / Secretary-I to CM/Secretary-II to CM/Secretary-III to CM and Additional Secretary to CM are made with effect from 12.05.2026:-


1. Dr. P. Senthilkumar, I.A.S.,

Additional Chief Secretary / Secretary-I to Chief Minister


1. Finance Department


2. Home, Prohibition and Excise Department


3. Public and Rehabilitation Department (all sections including IAS & SC)


4 Municipal Administration and Water Supply Department


5 Energy Department


6 Industries, Investment Promotion and Commerce Department


7. Highways and Minor Ports Department


8. Health and Family Welfare Department 8


9 Public Works Department


10 Vigilance Commission



2. Tmt G. Laxmi Priya, I.A.S., Secretary-II to Chief Minister


1. Chief Minister's Office over all Administration


2 Chief Minister Appointment (Non-Political) / Tour arrangement/Government Protocol


3 Environment, Climate Change and Forests Department


4 Higher Education Department


5 School Education Department


6 Revenue and Disaster Management Department


7 Rural Development and Panchayat Raj Department


8 Housing and Urban Development Department


9 Social Welfare and Women Empowerment Department


10 Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department 


11. Adi Dravidar and Tribal Welfare Department


12 Welfare of Differently Abled Persons Department



3. Dr. A. Annadurai, I.A.S., Secretary-III to Chief Minister


1 Natural Resources Department


2 Water Resources Department


3 Agriculture Farmers Welfare Department


4 Animal Husbandry, Dairying, Fisheries and Fishermen Welfare Department


5 Co-operation, Food and Consumer Protection Department


6 Social Reforms Department


7 Handlooms, Handicrafts, Textiles and Khadi Department


8 Transport Department


9 Law Department


10 Legislative Assembly Secretariat


11 Human Resources Management Department


12 Tamil Development and Information Department



4. Thiru V. Vishnu, I.A.S.,

Additional Secretary to Chief Minister



1 Commercial Taxes and Registration Department


2. Tourism, Culture and Religious Endowments Department 


3 Micro, Small and Medium Enterprises Department


4 Information Technology and Digital Services Department


5 Youth Welfare and Sports Development Department


6 Labour Welfare and Skill Development Department


7 Planning and Development Department


8 Special Programme Implementation Department


9 Special Initiatives Department


G. LAXMI PRIYA, 

SECRETARY-II TO CHIEF MINISTER


Dr. P. Senthilkumar, I.A.S., Additional Chief Secretary/Secretary-1 to Chief Minister, Chennai-9.


Tmt G. Laxmi Priya, I.A.S., Secretary-II to Chief Minister, Chennai-9. Dr. A. Annadurai, I.A.S., Secretary-III to Chief Minister, Chennai-9. Thiru V. Vishnu, I.A.S., Additional Secretary to Chief Minister, Chennai-9.


Copy to: The Chief Secretary to Government, Secretariat, Chennai-9.


All Additional Chief Secretaries / Principal Secretaries/Secretaries to Government, Secretariat, Chennal -9. SF/SC.


/FORWARDED BY ORDER/


DEPUTY SECRETARY 

CHIEF MINISTER'S OFFICE


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் - செய்தித்துறை கடிதம் வெளியீடு



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை கடிதம் வெளியீடு


TN Chief Minister Official Photo



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டிய  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் வெளியீடு



மின்னஞ்சல் வாயிலாக


தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நிர்.4)த்துறை, தலைமைச் செயலகம் சென்னை-09.


கடித எண் e 14048542 / நிர்4 / 2026, நாள். 14.05.2026


அனுப்புநர்

திரு.வே. ராஜாராமன் இ.ஆ.ப.,

அரசுச் செயலாளர்


பெறுநர்

அனைத்து துறைச் செயலாளர்கள்

அனைத்து துறைத் தலைவர்கள்

அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் (இணைப்புடன்)


ஐயா/அம்மையீர்.


பொருள்: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் - அனுப்பி வைத்தல் - தொடர்பாக 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் அனைத்து அரசு அலுவலகங்கள் / தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் /தமிழ்நாடு அரசின் தன்னாட்சி அமைப்புகள் / ஏனைய அரசு கட்டடங்களில் உரிய முறையில் காட்சிப்படுத்த ஏதுவாக இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்ள பணிக்கப்பட்டுள்ளேன்.


தங்கள் உண்மையுள்ள,

அரசு செயலாளருக்காக



நகல்

அனைத்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள்

(உரிய தொடர் நடவடிக்கைகாக)


கேரள மாநில முதலமைச்சராக வீ.டி.சதீசன் தேர்வு




கேரள மாநில முதலமைச்சராக வீ.டி.சதீசன் தேர்வு


கேரள முதலமைச்சராக திரு.வி.டி.சதீஷன் அவர்களை தேர்வு செய்தது காங்கிரஸ் கட்சி.


தேர்தல் முடிவு வெளியாகி 11 நாட்களாக முதலமைச்சரை தேர்வு செய்ய திணறி வந்த நிலையில் சதீஷனை தேர்வு செய்துள்ளது.


2026 மே 14 நிலவரப்படி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி. சதீஷன் (V. D. Satheesan) கேரளாவின் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 


இவர் முன்னதாக பரவூர் தொகுதியில் இருந்து பலமுறை கேரள சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.


முக்கியத் தகவல்கள்:

பதவி: கேரள முதல்வர் (2026 மே முதல்).

கட்சி: இந்திய தேசிய காங்கிரஸ்.

தொகுதி: பரவூர், கேரளா.

முந்தைய பொறுப்பு: கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் (2021-2026).


கேரளா: காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக தேர்வாகியுள்ள வி.டி.சதீஷன், ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.



தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள்
















 தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் 


முன்னாள் துணை முதலமைச்சரும் , தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்தார்


Chief Minister Mr. Joseph Vijay met DMK leader and former Chief Minister Mr. M.K. Stalin.












மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதலமைச்சர் விஜய் அவர்கள் 












தமிழ்நாடு முதலமைச்சராக திரு.ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்றவுடன் கையொப்பமிட்ட கோப்புகள்



தமிழ்நாடு முதலமைச்சராக திரு.ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்றவுடன் கையொப்பமிட்ட கோப்புகள்


முதல் கையெழுத்து - 200 யூனிட் இலவச மின்சாரம்.


2 மாதங்களில் 500 யூனிட்களுக்கு உள்ளே மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட்கள் இலவசம் - முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் 


சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார்.


போதை பொருட்களை ஒழிக்க மாநிலம் மற்றும் மாவட்டம் தோறும் தனிப்படைகள் அமைப்பு.


10-05-2026 காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சராக திரு.ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்பு

 


இன்று 10-05-2026 காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சராக திரு.ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்பு.


Rajendra Vishwanath Arlekar

Governor of Tamil Nadu

Dated: 09.05.2026

ORDER

I, Rajendra Vishwanath Arlekar, Governor of Tamil Nadu, hereby appoint Thiru C. Joseph Vijay, as the Chief Minister of the State of Tamil Nadu, under Article 164 of the Constitution of India.


RAJENDRA VISHWANATH ARLEKAR


ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

தமிழ்நாடு ஆளுநர்

தேதி: 09.05.2026

ஆணை

நான், ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு ஆளுநர், இதன் மூலம் இந்திய அரசியலமைப்பின் 164வது பிரிவின் கீழ், தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராக திரு சி. ஜோசப் விஜய் அவர்களை நியமிக்கிறேன்..


ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்



வரும் 13-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் - ஆளுநர் அர்லேகர் அவர்கள்



Press Release No. 36

Dated :9.5.2026

LOK BHAVAN, TAMIL NADU - PRESS RELEASE

Thiru C. Joseph Vijay, called on the Hon'ble Governor of Tamil Nadu today (9.5.2026) at Lok Bhavan and submitted a letter informing about his election as the leader of the Tamilaga Vettri Kazhagam Legislature party. He has also submitted the letters received from the Indian National Congress, Communist Party of India, Communist Party of India (Marxist), Viduthalai Chiruthaigal Katchi and Indian Union Muslim League, extending their support to form the Government under his leadership.

The Hon'ble Governor of Tamil Nadu has appointed Thiru C. Joseph Vijay as the Chief Minister of Tamil Nadu and invited him to form the Ministry.

The Hon'ble Governor has directed the Chief Minister designate to seek the vote of confidence of the Assembly on or before 13th May 2026.

The swearing-in ceremony will be held at Nehru Stadium,Chennai on 10th May 2026 at 10 A.M.

Lok Bhavan, Chennai - 22.

Dated : 09.05.2026

Sd/-

Public Relations Office


செய்திக் குறிப்பு எண் 36

தேதி :9.5.2026

லோக் பவன், தமிழ்நாடு 


பத்திரிக்கை அறிக்கை

திரு சி. ஜோசப் விஜய், இன்று (9.5.2026) லோக் பவனில் மாண்புமிகு தமிழக ஆளுநரைச் சந்தித்து, தமிழக வெற்றி கழக சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த கடிதத்தைச் சமர்ப்பித்தார். மேலும், அவரது தலைமையில் அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளிடமிருந்து பெறப்பட்ட கடிதங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள், திரு சி. ஜோசப் விஜயை தமிழ்நாடு முதலமைச்சராக நியமித்து, அமைச்சரவையை அமைக்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மாண்புமிகு ஆளுநர் அவர்கள், நியமனம் செய்யப்படவுள்ள முதலமைச்சர், 2026 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சட்டமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பதவியேற்பு விழா 2026 மே 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை நேரு மைதானத்தில் நடைபெறும்.

லோக் பவன், சென்னை - 22.

தேதி : 09.05.2026

ஒப்பம்/-

மக்கள் தொடர்பு அலுவலகம்



போர்ச்சூழல் - முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் குறித்த வலைதள பதிவு



போர்ச்சூழல் -  முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் குறித்த வலைதள பதிவு 


அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்  இன்று விரிவாக ஆய்வு செய்தேன்.


தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.


இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.


குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன்.


- முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதள பதிவு


விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி - முதலமைச்சர் அறிவிப்பு

 


விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி! - முதலமைச்சர் அறிவிப்பு


இது குறித்து முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவு


கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.


நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!


இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 


5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், 


பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.


அதுமட்டுமின்றி,


மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.


இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் - 


தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்! 


#வெல்வோம்_ஒன்றாக!



ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை



CM Speech @ JACTTO GEO Conference


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை - செய்தி வெளியீடு எண்: 320, நாள் : 08-02-2026


Speech delivered by the Hon'ble Chief Minister of Tamil Nadu at the vote of thanks conference organized by JACTTO GEO - Press Release No: 320, Date: 08-02-2026


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதங்கள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முழு உரை 


முதலில் உங்களிடம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், நன்றி சொல்லி, நமக்கான உறவை தூரமாக்கிவிடாதீர்கள்! உங்கள் வியர்வைத் துளிகள் மதிக்கப்பட வேண்டும். கண்ணீர்துளிகள் துடைக்கப்பட வேண்டும் என்றுதான், உங்களின் கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்!*

மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் நாங்களும், அரசு ஊழியர்களாக மக்களுக்காகப் பணியாற்றும் நீங்களும் சேர்ந்துதான், அரசாங்கம்! ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும், அமைச்சரவையையும், அரசு ஊழியர்களையும் ஒருசேர பார்ப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!*

இந்த மகிழ்ச்சி, எனக்குள் மட்டுமல்ல; உங்களுக்குள்ளேயும் இருப்பதை, உங்கள் முகங்களை பார்க்கும்போதே தெளிவாகத் தெரிகிறது! நம்முடைய திராவிட மாடல் அரசு, அரசு ஊழியர்களின் அரசாக இருப்பதுதான், இந்த மகிழ்ச்சிக்கு காரணம்! இது, தமிழினத் தலைவர் கலைஞர் வகுத்துத் தந்த பாதை!*

கலைஞர் ஆட்சிக்காலம் என்பது, அரசு ஊழியர்களின் - ஆசிரியர்களின் - அரசுப் பணியாளர்களின் நலன் காக்கும் பொற்காலமாக இருந்தது! ”நிலம் நனைக்கும் வான் போல” அரசு ஊழியர்களுக்காக தலைவர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளையும், சீர்திருத்தங்களையும் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஒரு மாநாடு போதாது! எனவே, அந்த சாதனைகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் விரிவாக அல்ல. விளக்கமாக அல்ல. தலைப்புச் செய்திகளாக நான் சொல்ல விரும்புகிறேன்.*

மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் நாங்களும், அரசு ஊழியர்களாக மக்களுக்காகப் பணியாற்றும் நீங்களும் சேர்ந்துதான், அரசாங்கம்! ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும், அமைச்சரவையையும், அரசு ஊழியர்களையும் ஒருசேர பார்ப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!*

இந்த மகிழ்ச்சி, எனக்குள் மட்டுமல்ல; உங்களுக்குள்ளேயும் இருப்பதை, உங்கள் முகங்களை பார்க்கும்போதே தெளிவாகத் தெரிகிறது! நம்முடைய திராவிட மாடல் அரசு, அரசு ஊழியர்களின் அரசாக இருப்பதுதான், இந்த மகிழ்ச்சிக்கு காரணம்! இது, தமிழினத் தலைவர் கலைஞர் வகுத்துத் தந்த பாதை!*

கலைஞர் ஆட்சிக்காலம் என்பது, அரசு ஊழியர்களின் - ஆசிரியர்களின் - அரசுப் பணியாளர்களின் நலன் காக்கும் பொற்காலமாக இருந்தது! ”நிலம் நனைக்கும் வான் போல” அரசு ஊழியர்களுக்காக தலைவர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளையும், சீர்திருத்தங்களையும் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஒரு மாநாடு போதாது! எனவே, அந்த சாதனைகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் விரிவாக அல்ல. விளக்கமாக அல்ல. தலைப்புச் செய்திகளாக நான் சொல்ல விரும்புகிறேன்.*

இப்படி, அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து நன்மையை மட்டுமே செய்த ஆட்சிதான், தலைவர் கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சி! அரசியலில் கொள்கைப் பிடிப்போடு இயங்கும் நாங்கள், மக்கள் நலனுக்காக உருவாக்கும் திட்டங்களை, வெற்றிகரமாக அவர்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் பெருங்கடமையை செய்பவர்கள், அரசு ஊழியர்களான நீங்கள்தான்!*

அதேபோல், ஆசிரியர்கள் செய்வதை பணி என்று சொல்ல மாட்டேன்! நீங்கள் செய்வது தொண்டு! உங்களால்தான், இந்தியாவில் பள்ளிக்கல்வியில் இரண்டாவது சிறந்த மாநிலமாக, நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக்கொண்டு இருக்கிறது*

நீங்கள் பாடுபட்டு உருவாக்கியவர்கள்தான், உலகம் முழுவதும் நல்ல பணிகளிலும், பொறுப்புகளிலும் இருந்து நமக்கும், தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறார்கள்! இப்படி, இந்தியாவின் எதிர்காலமான மாணவர்களை உருவாக்கக்கூடிய, உருவாக்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் நலனைப் பாதுகாக்கும் அரசுதான், திராவிட முன்னேற்றக் கழக அரசு!*

நம்முடைய திராவிட மாடல் அரசில், நாட்டிற்கே முன்னோடியான முத்திரைத் திட்டங்களை செயல்படுத்திகொண்டு இருக்கிறோம். இங்கு நண்பர்கள் குறிப்பிட்டு சொன்னார்கள்*

இந்த திட்டங்களால் திராவிட மாடல் அரசுக்கு நற்பெயரும், செல்வாக்கும் கிடைத்திருக்கிறது என்றால், அந்தப் பெருமையில் பெரும்பங்கு அரசு ஊழியர்களான உங்களுக்குதான் இருக்கிறது! அதற்கான எங்களின் நன்றியை சொல்வதற்கான வாய்ப்பாக, இந்த மாநாட்டை நான் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறேன்! இந்த மேடையில் நின்று, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், நன்றியை நான் மீண்டும், மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்!*

அரசின் கண்களாக, கரங்களாக செயல்பட்டு வரும் உங்களுக்காக, நம்முடைய திராவிட மாடல் அரசில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால்,*

கோவிட் பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை, 2022 முதல், ஒன்றிய அரசுக்கு இணையாக உயர்த்தி வழங்கியதுடன், ஒன்றிய அரசுக்கு இணையாக காலதாமதமின்றி அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

உங்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், அரசுப் பணியாளர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து, பணமாக பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தியிருக்கிறோம்.

நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத புதிய திட்டமாக அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் பத்து இலட்சம் ரூபாயும் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கிகொண்டு இருக்கிறோம்!*

பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு, ஐந்து இலட்சம் ரூபாய் முதல், பத்து இலட்சம் ரூபாய் வரை திருமணச் செலவிற்கான உதவியாகவும், மேலும், உயர்கல்வி பயில 10 இலட்சம் ரூபாய் வரை நிதியுதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம், பத்தாயிரம் ரூபாயிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம்.

அரசுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி முன்பணம் – தொழிற்கல்விக்கு ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து, ஒரு இலட்சம் ரூபாயாகவும் - கலை மற்றும் அறிவியல் கல்விக்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியிருக்கிறோம்!*

அனைத்து மாநிலங்களைக் காட்டிலும், அதிகமாக, தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம், 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிகொண்டு இருக்கிறோம்*

ஒழுங்கு நடவடிக்கைகளால் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளன்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படும் சூழ்நிலையை அகற்றி, அரசுப் பணியாளர்களை ஓய்வுபெற அனுமதித்து ஆணையிட்டிருக்கிறோம்.*

ஓய்வூதியப் பணிக்கொடையை 20 இலட்சம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்.

ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு உதவி 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், அவர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்!*

பெண் அரசு அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதங்களிலிருந்து, 12 மாதங்களாக உயர்த்தியிருக்கிறோம்.*

பெண் அரசு ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் மகப்பேறு விடுப்பில் செல்ல நேர்ந்தால், அந்தக் காலத்தையும் தகுதிகாண் பருவமாக கருத வேண்டும் என்று ஆணை வெளியிட்டிருக்கிறோம்.

சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களின் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி இருக்கிறோம்.*

குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வனக்களப் பணியாளர்களின் பணி நிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை, ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்!*

=அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.*

சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வனக்களப் பணியாளர்கள் உள்ளிட்ட, இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து நூறு ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.*

சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் இந்தப் பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்கு செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது."*

நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்காக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது.*

இது எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டுவது போன்று, உங்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய, புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை” செயல்படுத்தியிருக்கிறோம*

இந்த அறிவிப்பு வெளியான அன்று கோட்டையில் நாம் இனிப்புகள் பரிமாறிக் கொண்ட, அந்த பாசக் காட்சி, தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை பார்க்காத காட்சி! இவ்வளவு பெரிய திட்டத்தை, எப்படிப்பட்ட சூழலில் நிறைவேற்றியிருக்கிறோம் என்று மற்ற எல்லோரையும்விட உங்களுக்கு நன்றாகத் தெரியும்!*

ஒவ்வொரு ஆண்டும், நமக்கான வரிப்பகிர்வை ஒன்றிய அரசு குறைத்துகொண்டே இருக்கிறது! ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியை கூட குறைத்துகொண்டு இருக்கிறார்கள்! அந்த நிதியையும் முறையாக வழங்குவதில்லை! ஜி.எஸ்.டி மாற்றங்களால் மாநிலத்தின் வரி வருவாய் குறைந்துகொண்டே வருகிறது! இப்படிப்பட்ட சூழலில், எல்லா துறைகளிலும் நலத்திட்டங்களை செய்தாக வேண்டும்!*

வருமானம் குறைவு - செலவு அதிகம், இதுதான் நம்முடைய நிலை! பேரறிஞர் அண்ணாதான் சொன்னார். பெட்டி இருக்கிறது! பூட்டு இருக்கிறது! சாவி இருக்கிறது! ஆனால், பெட்டி காலியாக இருக்கிறது என்று சொன்னார். திட்டமிட்டு செயற்கையாக இந்த நிதி நெருக்கடியை உருவாக்குகிறார்கள்! அரசியல் ரீதியாக மட்டுமல்ல, நிர்வாகரீதியாகவும் அவர்களை வெற்றிகரமாக சமாளித்துதான், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றிகொண்டு இருக்கிறோம்!*

பழைய ஓய்வூதியம் குறித்த கோரிக்கையை 22 ஆண்டுகளாக நீங்கள் வைத்துகொண்டு இருக்கிறீர்கள்! யார் ஆட்சியில் இந்த உரிமை பறிக்கப்பட்டது? அ.தி.மு.க. ஆட்சியில்! அப்போது, நீங்கள் நடத்திய போராட்டங்கள் சாதாரணமானதா? வியர்வைத்துளி சிந்தி உழைத்த உங்களுக்கு இரத்தக்கண்ணீரை வர வைத்ததுதான், கருணையில்லா அ.தி.மு.க. ஆட்சி! ஆனால், இது அனைவரையும் அரவணைக்கும் கருணையே வடிவான தி.மு.க. ஆட்சி!*

அதனால்தான், உங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை வழங்குவதற்கான, தகுந்த பரிந்துரைகளை வழங்க, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்*

ககன்தீப் சிங் பேடி அவர்கள் தலைமையில், ஒரு குழுவை அமைத்தோம். அவர்களும் அறிக்கை அளித்தார்கள். தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உங்களிடம் உட்கார்ந்து தொடர்ந்து பேசினார்கள்.*

உங்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், தமிழ்நாட்டின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்தவித தடைகளும் இல்லாமல் முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு என்று எல்லாவற்றையும் பரீசிலனை செய்துதான், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை” அறிவித்தோம்!*   இந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில், 50 விழுக்காடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு, பணியாளர்களின் 10 விழுக்காடு பங்களிப்புடன், ஓய்வூதிய நிதியத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்!*

50 விழுக்காடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு, ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை, அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான, அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.*

ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு, அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 விழுக்காடு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்!*

அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கு ஏற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல், பணிக்கொடை வழங்கப்படும்.*

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல், பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.*

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர், இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். இனி, இதை கருணை ஓய்வூதியம் என்று சொல்லாமல், உங்களின் உழைப்பிற்கான உரிமைத்தொகை என்றே வழங்குவோம்!*

இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு தமிழ்நாடு அரசு கூடுதலாக 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும், சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயை அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்! இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும்.*

*இப்போது தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்று, இப்போது சொன்ன அத்தனை செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன்!

இந்த ஓய்வூதியத் திட்டம் எவ்வளவு சிறப்பானது என்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சோமசுந்தரம் அவர்கள் உள்ளிட்ட பலரும் பேட்டிகளை கொடுத்திருந்தீர்கள்! அதையெல்லாம், நீங்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி அவர்கள், ஆட்சியில் இருந்தபோது, அரசு ஊழியர்களை எப்படி எல்லாம் கொச்சைப்படுத்தி பேசினார்? இங்கு குறிப்பிட்டுச் சொன்னார்களே… எப்படி எல்லாம் விளம்பரம் கொடுத்தார்கள் என்பதையெல்லாம் நான் அதிகம் நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை! ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக கூட்டணி அமைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஆதரவாக இருப்பார்களா? சிந்திச்சுப் பாருங்கள்! ஆனால், நாங்கள் அப்படி இல்லை!*

*எங்களை பொறுத்தவரைக்கும், சொன்னதைச் செய்வோம்! சொல்வதைத் தான் செய்வோம்! செய்து, உங்களின் பாராட்டுகளை பெறுவோம்! நான் உறுதியாக சொல்கிறேன். உங்களின் கோரிக்கைகள் - கனவுகள் - எதிர்ப்பார்ப்புகளை நாங்கள் நிச்சயம் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடர்ந்து நிறைவேற்றுவோம்! அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள்! உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம்.


IUML மாநாட்டில் 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர்



கும்பகோணம் IUML மாநாட்டில் 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 


1. வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற உலமாக்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் ரூ.5000 ஆக உயர்வு.


2. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கக்கூடிய 10 உருது மொழி ஆசிரியர் காலிப் பணியிடம் நிரப்பப்படும்.


3. சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் வக்ஃப் வாரியம் அமைக்கப்படும்.


4. உலமாக்களில் முதல்கட்டமாக 1,000 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் ரூ.50 ஆயிரம் ஆக உயர்வு


5. கல்லறைத் தோட்டம், கபரஸ்தான் தோட்டம் இல்லாத இடங்களில் அரசு நிலம் தேர்வு செய்து அமைக்கப்படும்.


முதலமைச்சர் வெளியிட்ட 5 புதிய அறிவிப்புகள்

 


பொதுமக்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட 5 புதிய அறிவிப்புகள்


5 new announcements issued by Hon'ble Chief Minister of Tamil Nadu, Shri. M.K. Stalin, to the public, nutritional meal organizers, Anganwadi workers, Village Panchayat Secretaries and Part-time Teachers


முதல் அறிவிப்பு:


கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்' கீழ் ஏற்கெனவே 2 இலட்சம் வீடுகள் உருவாகும் நிலையில் மேலும் புதிதாக, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 இலட்சம் வீடுகள் கட்டப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


இரண்டாவது அறிவிப்பு:


கிராமப்புறப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குகின்ற ஊரகச் சாலைகளை மேம்படுத்துகிற 'முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ், 8 ஆயிரத்து 911 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 ஆயிரத்து 484 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புறச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிதாக ஆயிரத்து 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2,200 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


மூன்றாவது அறிவிப்பு:


ஏழை மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பாதுகாக்கும் 'சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்' கீழ், ஏற்கனவே 33 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற, திருமணமாகாத பெண்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்' கீழ் அளித்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாக 1 இலட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி இதற்கான விழா வரும் 04-02-2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)


அடுத்த அறிவிப்பு


இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் 2008-ல் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கினார். அந்தச் சாதனையின் தொடர்ச்சியாக சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி


குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 200 ரூபாயாகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும்; (மேசையைத் தட்டும் ஒலி) பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 100 ரூபாயும் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் மேற்கூறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


இந்த அறிவிப்புகள் மூலம் தற்போதுள்ள சிறப்புக் காலமுறை ஊதியப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும், இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள். (மேசையைத் தட்டும் ஒலி)


அடுத்த அறிவிப்பு:


அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளில் ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை காலமான மே மாதத்தில் ஏற்கனவே அவர்கள் கோரிய ஊதியம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.


அவர்களுடைய அடுத்த முக்கிய கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புறேன்.


அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும். (மேசையைத் தட்டும் ஒலி



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்... 


திராவிட மாடல் விடியல் ஆட்சியின் சாதனைகள்



 திராவிட மாடல் விடியல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களில் முக்கியமானவை - முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு


Important milestones of the Dravidian model Dawn Regime  (Vidiyal Government) - Chief Minister Stalin's announcement


ஆட்சிப் பொறுப்பேற்றதும் நான் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத்துக்குதான்! இந்தப் பயணங்களால் மாதந்தோறும் 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை ஒவ்வொரு மகளிரும் சேமிக்கின்றார்கள். இதன் மூலமாக 2021 மே மாதத்திலிருந்து இப்பொழுது வரை தோராயமாக 60 ஆயிரம் ரூபாய் வரை சேமித்திருக்கின்றார்கள். பெண்களுக்கான மிகப்பெரிய சமூகப் பொருளாதார பலத்தை இந்தத் திட்டம் வழங்கியிருக்கிறது. மேசையைத் தட்டும் ஒலி)


அடுத்து, கலைஞர் மகளிர் do திட்டம்! 95 கோடியே 31 இலட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குகின்றோம். இந்தத் திட்டத்தில் இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் 29 ஆயிரம் ரூபாயை கொடுத்திருக்கின்றோம். அந்தப் பெண்கள் எல்லோரும் எங்கள் அண்ணன் கொடுக்கின்ற மாதாந்திர சீர் என்று பெருமையுடன் சொல்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி


இந்த ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு 2 கோடியே 23 இலட்சம் குடும்பங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயை வழங்கினோம். தமிழ்நாடே மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடியது.


தமிழ்நாடு முழுவதும் 20 இலட்சத்து 59 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் தினமும் காலையில் சூடான, சத்தான, சுவையான உணவை சாப்பிடுகின்றார்கள். மேசையைத் தட்டும் ஒலி)


நான் முதல்வன் திட்டத்தில் 48 இலட்சத்து 65 ஆயிரம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. (மேசையைத் தட்டும் ஒலி)


புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் 12 இலட்சம் மாணவ, மாணவியர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலிடி


2003 முதல் 2021 வரை, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் 6 மாணவர்கள் மட்டுமே பயனடைந்திருக்கின்றார்கள். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் 385 மாணவர்களுக்கு 162 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் படிக்கின்றார்கள்.


அரசு ஊழியர்களுடைய 23 ஆண்டுகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கின்றோம். (மேசையைத் தட்டும் ஒலி) நாம் ஆட்சிக்கு வந்தபோது அரசு அகவிலைப்படியை இப்பொழுது வழங்கியிருக்கோம். ஊழியர்களுக்கு 17 விழுக்காடாக இருந்த விழுக்காடு எனுமளவுக்கு உயர்த்தி 58


2 இலட்சம் விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்புகள், மேசையைத் தட்டும் ஒலி)


14 புதிய உழவர் சந்தைகள் தொடக்கம்.


2 கோடியே 56 இலட்சம் பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெற்றிருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி)


'இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48* திட்டத்தில் சாலை விபத்துக்குள்ளான 5 இலட்சத்துக்கும் அதிகமானோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு 483 கோடி ரூபாய்க்கு காப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. மேசையைத் தட்டும் ஒலி)


கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் கய உதவிக் குழுக்களுக்கு 1 இலட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி)


2 இலட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள். (மேசையைத் தட்டும்


22 இலட்சத்து 71 ஆயிரம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா. (மேசையைத் தட்டும் ஒலி)


4 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு. மெசையைத் தட்டும் ஒலி


மேசையைத் தட்டும் ஒலி)


8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு.


மேசையைத் தட்டும் ஒலி)


12 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பு.


தாயுமானவர் திட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 27 இலட்சத்து 55 ஆயிரம் பேருக்கு தேடி


ரேஷன் பொருட்கள்


5 ஆயிரத்தி 700 கோடி ரூபாய் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒதுக்கீடு.


சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வென்ற


200 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி, மேசையைத் தட்டும் ஒலி)


கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை. (மேசையைத்


தட்டும் ஒலி)


மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்.


சென்னையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்.


திருச்சி பஞ்சப்பூரில் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்.


முதல்வர் படைப்பகங்கள்.


38 மாதிரிப் பள்ளிகள்.


37 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்.


10 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள்


19 தோழி விடுதிகள்.


141 மினி ஸ்டேடியங்கள்.


பழங்குடியினர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஆயிரம் கோடி ரூபாயில் தொல்குடி திட்டம்.


ஆயிரம் கோடி ரூபாயில் அயோத்திதாசர் பெயரிலான ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்.


6 ஆயிரத்தி 45 கோடி ரூபாயில் வடசென்னை வளர்ச்சித் திட்டம்.


நெடுஞ்சாலைத் துறை மூலமாக, 24 ஆயிரத்தி 774 கிலோமீட்டர் நீள சாலைகள் 180 உயர்மட்டப் பாலங்கள்.


கிராமச் சாலைகள் மேம்பாடு,


20 ஆயிரத்து 484 கிலோ மீட்டர்


தூரத்துக்கு


121 தடுப்பு அணைகள்


101 அணைக்கட்டுகள்


மிக நீளமான, G.D. நாயுடு மேம்பாலம் (மேசையைத் தட்டும் ஒலி)


மிக நீளமான, வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்


87 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம், சுமார் 3 கோடி மக்கள் பயன்பெறும் 75 இலட்சம் வீட்டு இணைப்புகள். (மேசையைத் தட்டும் ஒலி)


விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட, முக்கியத் தலைவர்களுக்கு 23 மணிமண்டபங்கள் 70 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. (மேசையைத் தட்டும் ஒலி)


சென்னை வள்ளுவர் கோட்டம் சீரமைப்பு. (மேசையைத் தட்டும் ஒலி)


கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நினைவகம் சீரமைப்பு. (மேசையைத் தட்டும் ஒலி)


கீழடி அருங்காட்சியகம்.


பொருதை அருங்காட்சியகம். (மேசையைத் தட்டும் ஒலி)


கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம். (மேசையைத் தட்டும் ஒலி)


கலைஞர் நூற்றாண்டு பூங்கா.


கோவையில் செம்மொழிப் பூங்கா. (மேசையைத் தட்டும் ஒலி)


தொல்காப்பிய பூங்கா சீரமைப்பு.


39 கோடி ரூபாயில் சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட உத்தரவு.


10 கோடி ரூபாயில் தொன்மையான தேவாலயங்கள் புதுப்பிப்பு என்று


சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. சொல்வதற்கு நேரம்தான் இல்லை.


இந்த அரசைப் சாதனை செய்தால், பொறுத்தவரைக்கும், ஒரு அதை மிஞ்சுவதாக இன்னொரு சாதனை வரும்; அடுத்து அதை விஞ்சவதாக மற்றொரு சாதனை வரும். இப்படி சாதனைக்கு மேல சாதனைகளைப் படைப்பதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு. மேசையைத் தட்டும் ஒலி


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் பொறுப்பேற்று, இந்த அரசு பொறுப்பேற்று, இன்றோடு ஆயிரத்து 724 நாட்கள் ஆகிறது. இந்த ஆயிரத்து 724 நாட்களில், 8 ஆயிரத்து 685 நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். 15 ஆயிரத்து 117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு இருக்கிறேன்; சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அதிலேயும், 71 மாவட்ட மாபெரும் அரசு நலத்திட்ட விழாக்களில் பங்கேற்று, 44 இலட்சத்து 44 ஆயிரத்து 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். அதுமட்டுமின்றி, அடிக்கல் நாட்டியது, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தது என எல்லாவற்றையும் புள்ளிவிவரத்தோடு என்னால் சொல்ல முடியும்.


கடந்த 5 ஆண்டுகளில், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால், ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான்! (மேசையைத் தட்டும் ஒலி) மக்களுக்காக திட்டங்களைத் தீட்டினான்! (மேசையைத் தட்டும் ஒலி) மொத்தமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தான்! (மேசையைத் தட்டும் ஒலி) இவையெல்லாம் வெறும் புகழ்ச்சி இல்லை; எல்லாமே உண்மை! 



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> சிறந்த வாட்டர் ஹீட்டர்கள் விவரம்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

களஞ்சியம் செயலியில், தங்களது மின்னணு பணிப்பதிவேடு ESR ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Kalanjiyam News * களஞ்சியம் செயலியில், தங்களது மின்னணு பணிப்பதிவேடு ESR ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.