கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 102 நாட்களுக்கு RT-PCR- ஆன்டிஜன் பரிசோதனைகளை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனாவின் சில இறந்த துகள்கள் உடலுக்குள் சில காலம் நீடித்திருக்கும் என்பதே இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. இவை நோயை பரப்ப முடியாது என்றாலும்,உண்மைக்கு மாறான பாஸிட்டிவ் முடிவை பரிசோதனையில் காட்டக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதே போன்று கொரோனாவில் இருந்து குணமடைந்த நபரிடம் அவசர நிலை இல்லாவிட்டால் ஆறுமாதம் கழித்தே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.