கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ICMR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ICMR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்தியாவிலேயே முதன் முறையாக அசாம் பெண் டாக்டருக்கு ‘இருவகை’ கொரோனா தொற்று : ICMR மூத்த விஞ்ஞானி தகவல்...



 இந்தியாவிலேயே முதன் முறையாக அசாம் பெண் டாக்டருக்கு ‘இருவகை’ கொரோனா தொற்று : ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானி தகவல்...

அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் மருத்துவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் உருமாறிய வைரசான டெல்டா, ஆல்பா உள்ளிட்ட வகையான வைரசுகள் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் மருத்துவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக இதுபோன்ற பாதிப்பு உறுதியாகி உள்ளது. 

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (ஆர்.எம்.ஆர்.சி) மூத்த விஞ்ஞானி டாக்டர் பி.போர்ககோட்டி கூறுகையில், ‘கொரோனா தொற்று எதிர்ப்பு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்ட போதிலும், உருமாறிய வைரஸ்களான டெல்டா, ஆல்பா போன்ற தொற்றுகளால் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

கடந்த மே மாதத்தில், ஆர்.எம்.ஆர்.சி.யின் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பெண் மருத்துவ நோயாளிக்கு இரட்டை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பிரிட்டன், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் சிலருக்கு இரட்டை நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது போன்று, இந்தியாவிலும் இந்த இரட்டை நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவில் இதுபோன்ற பாதிப்பு எவருக்கும் ஏற்படவில்லை. 

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுள்ளார். தற்போது இவர் உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவரும் (மருத்துவர்) கொரோனா வைரஸின் ஆல்பா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள், கோவிட் பராமரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தனர். தற்போது அந்த பெண் மருத்துவருக்கு லேசான தொண்டை வலி, உடல் வலி ஆரம்பத்தில் இருந்தது. இருந்தாலும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை’ என்றார்.


குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம் இருப்பதால் ஆரம்பப் பள்ளிகளை முதலில் திறக்க பரிசீலிக்கலாம் - ICMR...

 குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம் இருப்பதால் ஆரம்பப் பள்ளிகளை முதலில் திறக்க பரிசீலிக்கலாம் - ICMR...


கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இந்நிலையில்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா கூறியதாவது, இந்திய குழந்தைகள் கொரோனாவுக்கு எதிராக நல்ல எதிர்ப்பாற்றலை பெற்றுள்ளன. கொரோனா பாதிப்பு விகிதம் 5% குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடலாம் என தெரிவித்துள்ளார்.






கொரோனா வெருவிப் பரவலின் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கான மருத்துவ முறைகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது ICMR...

 


கொரோனா வெருவிப் பரவலின் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கான மருத்துவ முறைகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது ICMR...


*5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் தேவையில்லை..!


*6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, உடல்நிலை அடிப்படையில் முகக்கவசம் அணிவிக்கலாம்.


*12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.


*- ஐ.சி.எம்.ஆர்



>>> Click here to Download Guidelines for Management of COVID-19 in Children (below 18 years) Ministry of Health & Family Welfare Government of India...



கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ICMR-ன் முக்கிய அறிவுறுத்தல்...



 கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 102 நாட்களுக்கு RT-PCR- ஆன்டிஜன்  பரிசோதனைகளை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.



கொரோனாவின் சில இறந்த துகள்கள் உடலுக்குள் சில காலம் நீடித்திருக்கும் என்பதே இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. இவை நோயை பரப்ப முடியாது என்றாலும்,உண்மைக்கு மாறான பாஸிட்டிவ் முடிவை பரிசோதனையில் காட்டக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.




அதே போன்று கொரோனாவில் இருந்து குணமடைந்த நபரிடம் அவசர நிலை இல்லாவிட்டால் ஆறுமாதம் கழித்தே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...