கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உத்தர பிரதேச மாநிலத்தின் 2 அரசுப் பள்ளிகளில் 4,000 போலி மாணவர் சேர்க்கை கண்டுபிடிப்பு...

 உத்தர பிரதேச மாநிலத்தின் 2 அரசுப் பள்ளிகளில் 4,000 போலி மாணவர் சேர்க்கை கண்டுபிடிப்பு: இலவச சீருடை, காலணி உள்ளிட்டவற்றுக்கான நிதியில் ஊழல் 


💢உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக பல ஆண்டுகளாக புகார் உள்ளது. இதை சீர்செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


💢எனினும், அரசுப் பள்ளிகளில் ஊழல் தொடர்கின்றன. சமீபத்தில், மாநிலத்தின் பல அரசுப் பள்ளிகளில் ஒரே ஆசிரியர் பணியாற்றுவது போல் கணக்கு காட்டி பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


💢இந்நிலையில், தலைநகர் லக்னோவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


💢இதில், அவர்களது ஆதார் அட்டையை சரி பார்த்த போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.


💢வழக்கமாகவே, உ.பி. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குறைவு என்பதால் அதன் சேர்க்கைக்கு என உச்சவரம்பு நிர்ணயிக்கப் படவில்லை. இதன் பலனால், பெரும்பாலான பள்ளிகளில் போலியாக மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்காக அரசு இலவசமாக அளிக்கும் சீருடை, குளிருடை, காலுறை மற்றும் காலணி, புத்தகப் பை ஆகியவை ஒரு மாணவனுக்கு ரூ.1,200 மதிப்பிலான இப்பொருட்களால் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்தது தெரிய வந்துள்ளது.


💢இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உ.பி. அரசின் தொடக்க நிலைக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் அதன் ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள். இதற்கு அஞ்சி, ஆசிரியர்கள் போலியாக மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கிறார்கள். இது கடந்த ஆட்சிகளில் உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் நடை பெற்றதால் அதை ஆளும் அரசுகள் கண்டுகொள்ளவில்லை’’ எனத் தெரிவித்தனர்.


💢இந்த ஊழல் தெரிய வந்த பின்னர், உத்தரபிரதேச தொடக்கப் பள்ளிகள் இணையதளத்தில், லக்னோ மாவட்டத்தில் மட்டும் 22.95 லட்சம் என இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 15.8 லட்சம் எனக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைக்கு உட்பட்ட குறிப்பிட்ட இரண்டு பள்ளிகளில் தான் 4,000 போலி மாணவர் சேர்க்கைகள் நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பல பள்ளிகளில் போலி மாணவர் சேர்க்கை சில ஆயிரங்களாக உள்ளன. 1 முதல் 5-ம் வகுப்பு வரை கொண்ட இவை பிராத்மிக் (தொடக்கம்) பள்ளிகள் என்றழைக்கப்படுகின்றன.


💢இதுபோன்ற நிலையில், உத்தரபிரதேச அரசு பள்ளிகளில் வகுப்புகள் சரியாக நடத்தப்படுவதில்லை. ஆசிரியர்களும் அன்றாடம் பள்ளிக்கு வருவதில்லை. இதை தடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆசிரியர்களுக்கு செல்பி மூலம் மாநிலத் தலைமையகத்திற்கு வருகைப் பதிவு முறையை கொண்டு வந்தும் பலனில்லாமல் உள்ளது.


💢இதுபோன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர விரும்புவதில்லை. இன்னும் பல மாவட்டங்களின் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கையும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதிலும் பல கோடி ஊழல் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns