கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு : கமிட்டி அமைத்தது CBSE...

 பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு : கமிட்டி அமைத்தது சி.பி.எஸ்.இ...


சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த முறையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்க குழு அமைப்பு


கல்வி அமைச்சகத்தின் இணைச்  செயலாளர் விபின் குமார் தலைமையில்  குழு அமைப்பு.


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும்முறை குறித்து முடிவெடுக்க, 13 உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.


கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை, மத்திய அரசு ரத்து செய்தது. பல்வேறு மாநிலங்களிலும், கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ள நிலையில், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி, பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக, பிரதமர் மோடி அறிவித்தார்.


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து ஆலோசனை நடத்த, மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலர் விபின் குமார் தலைமையில், 13 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. எந்த முறையில் மதிப்பெண் வழங்க வேண்டும் என்பது குறித்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க, கமிட்டிக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...