கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CBSE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CBSE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு 2024 - 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை வெளியீடு (CBSE Public Examination 2024 - Class 10th and 12th Exam Time Table Released)...

 


சிபிஎஸ்இ பொதுத்தேர்வு 2024 - 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை வெளியீடு (CBSE Public Examination 2024 - Class 10th and 12th Exam Time Table Released)...


10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு...


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் மார்ச் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், பிப்ரவரி 15 முதல் மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.



>>> Click Here to Download CBSE Secondary School (10th) Examination Date Sheet 2024...



>>> Click Here to Download CBSE Senior Secondary School Certificate (12th) Examination Date Sheet 2024...



மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) : சிபிஎஸ்இ அறிவிப்பு (Central Teacher Eligibility Test - CBSE Announced)...

 



மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) : சிபிஎஸ்இ அறிவிப்பு (Central Teacher Eligibility Test - CBSE Announced)...


மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில், "நாடு முழுதும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் டிசம்பர் முதல் ஜனவரி வரையில் நடத்தப்படும். தேர்வில் பங்கேற்க விரும்புவோர் https://ctet.nic.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 24 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்...




தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் - சி.பி.எஸ்.இ அறிவிப்பு...



 தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் - சி.பி.எஸ்.இ அறிவிப்பு.


சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட  4 நகரங்களில்  தேர்வு நடத்தப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக தற்போது 19 மாவட்டங்களாக அதிகரிப்பு.


சென்னை,கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய  நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்.

கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோர்களை இழந்த 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வு & பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு - CBSE அறிவிப்பு(Exemption from payment of examination & registration fees for 10th and 12th Standard students, who lost their parents due to corona infection in the current academic year - CBSE Announced)...

 கொரோனா தொற்று பாதிப்பால்  பெற்றோர்களை இழந்த 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வு & பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நடுவண் மேல்நிலைக்கல்வி வாரியம் (CBSE) அறிவிப்பு...




2021 - 22ஆம் கல்வியாண்டில் இரண்டு பருவங்களாக பொதுத்தேர்வு - CBSE- திட்டம்...

 


கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 2020 - 21 கல்வியாண்டில் பெரும்பாலான நாட்கள் மாணவர்களுக்கு பள்ளி பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடந்தது. அதே நேரத்தில் இரண்டாவது அலையின் தாக்கத்தினால் சிபிஎஸ்இ உட்பட பெரும்பாலான மாநிலங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளின் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.


இந்நிலையில் 2021 - 22 கல்வியாண்டில் இரண்டு பருவங்களாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக பிரத்யேக திட்டத்தை சிபிஎஸ்இ ம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.


அதன்படி இரண்டு பருவங்களாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. நவம்பர் - டிசம்பரில் முதல் பருவமும், மார்ச் - ஏப்ரலில் இரண்டாவது பருவத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. பாடத்திட்டத்தை இரண்டு பருவங்களுக்கு 50 - 50 சதவிகிதமாக பிரித்து வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பொதுத்தேர்வை நடத்துவதற்கான சாத்தியத்தை உறுதிப்படுத்தவே இந்த ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது.


தனித் தேர்வர்களுக்கும் தேர்வு கூடாது’ 1,152 சிபிஎஸ்இ மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு...



 தனித் தேர்வர்களுக்கும் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்தக் கூடாது என 1,152 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.   கொரோனா 2வது அலையை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், தனித்தேர்வர்களும், கடந்த ஆண்டு குறைந்த மதிப்பெண் பெற்ற கம்பார்ட்மென்ட் பிரிவில் உள்ள மாணவர்களும் கட்டாயம் நேரில் தேர்வு எழுத வேண்டுமென சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதற்கு இந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இந்நிலையில், எந்த பள்ளியிலும் பதிவு செய்யாமல் தனியாக சிபிஎஸ்இ தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் மற்றும் கம்பார்ட்மென்ட் மாணவர்கள் 1,152 பேர் சார்பில் வக்கீல் அபிஷேக் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.



அதில், ‘தற்போதைய கொரோனா சூழலில் எப்போது நேரடி தேர்வு நடத்தப்படும் என்பதை தீர்மானமாக கூற முடியாது. நாங்கள் தேர்வு எழுதாமல் எந்த பல்கலைக் கழகத்திலும், கல்லூரியிலும் சேர முடியாது. இது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21ன் கீழ் எங்களின் படிக்கும் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே, எங்களையும் பள்ளி மாணவர்களாக கணக்கில் கொண்டு, நேரடி தேர்வை ரத்து செய்ய வேண்டும். மதிப்பெண் வழங்க குறிப்பிட்ட நடைமுறையை கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது...

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் ஜுலை 31ஆம் தேதி வெளியாகிறது...

 


CBSE +2 தேர்வு முடிவுகள் ஜுலை 31ஆம் தேதி வெளியாகிறது...


சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 31-ஆம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா தொற்றால் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மதிப்பெண் கணக்கீடு நடைபெற்று வருகிறது. சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான கொள்கையை சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்தது. அதில் 10ம் வகுப்பு , 11ம் வகுப்புகளில் தலா 30 சதவீத மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள் என கணக்கிட செய்வதாக அறிவித்துள்ளது.



கொரோனா தொற்றால் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மதிப்பெண் கணக்கீடு நடைபெற்று வருகிறது. சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான கொள்கையை சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரமாக இன்று தாக்கல் செய்தது. அதில் 10ம் வகுப்பு , 11ம் வகுப்புகளில் தலா 30 சதவீத மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள் என கணக்கிட செய்வதாக அறிவித்துள்ளது. 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள், பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் எழுதிய இடைத்தேர்தலில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு 40% வெயிட்டேஜ் மார்க் வழங்கப்படும். செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.எழுத்துத்தேர்வு மதிப்பீட்டில் மாணவர்கள் குறைந்த பட்சம் 32 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்று கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நிபுணர்கள் குழுவை அமைத்து பிளஸ் டூ மதிப்பெண் வழங்குவதற்கான வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் கடந்த கால செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டு மதிப்பெண் கணக்கிடப்படும் என்றும் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் விளக்கம் அளித்துள்ளார்.


12-ஆம் வகுப்பு தேர்வு ரத்து - மதிப்பெண் வழங்கும் திட்டம் - உச்சநீதிமன்றத்தில் CBSE தாக்கல்...

 12-ஆம் வகுப்பு தேர்வு ரத்து - மதிப்பெண் வழங்கும் திட்டம் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தாக்கல்...


💢மதிப்பெண் வழங்கும் திட்டம் குறித்து தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் விளக்கம்


💢10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் 30% வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.


💢11-ஆம் வகுப்பு பாடங்களில் 30% வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும் .


💢12-ஆம் வகுப்பு பாடங்களில் 40% வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்


💢செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்...



சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு மற்றும் 12-ம் வகுப்பு உள்ளீட்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க திட்டம்...

 CBSE 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு மற்றும் 12-ம் வகுப்பு உள்ளீட்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க திட்டம்...


3 மதிப்பெண்களையும் சேர்த்து வெயிட்டேஜ் முறை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை.



செய்முறை தேர்வு மதிப்பெண் ஜூன் 28க்குள் பதிவேற்ற சிபிஎஸ்இ உத்தரவு...

 


இன்னும் முடிக்கப்படாமல் உள்ள செய்முறை பயிற்சி தேர்வு உள்ளிட்ட பணிகளை, அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், வரும் 28க்குள், 'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.


பிளஸ் 2 தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் தேர்ச்சி குறித்த விபரங்களை இறுதி செய்யும் பணிகளில், சி.பி.எஸ்.இ., வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அனைத்து பாடங்களும் ஆன்லைன் வகுப்புகள் வாயிலாகவே நடந்து முடிந்துள்ள நிலையில், செய்முறை பயிற்சி தேர்வுகள் குறித்த பணிகளை அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப முடிப்பதில் ஆசிரியர்களுக்கு சிரமம் நிலவுகிறது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும், டில்லியிலிருந்து, சி.பி.எஸ்.இ., சார்பில், அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிகளில் செய்முறை பயிற்சி தேர்வு மற்றும் 'இன்டர்னல் அசெசஸ்மென்ட்' பணிகள் முடிக்கப்படாமல் இருந்தால், அவை அனைத்தையும் ஆன்லைன் வாயிலாக நடத்தி முடிக்க வேண்டும்.


சில பாடங்களுக்கு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படாமல் இருக்கக்கூடும். அப்படிப்பட்ட நிலையில், அந்த பள்ளி ஆசிரியரே இந்த தேர்வுகளை நடத்தலாம். இந்த நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைனில் உள்ளன. தாங்கள் அளிக்கும் மதிப்பெண் விபரங்களையும், அதற்கென உள்ள இணைப்பில் சென்று பதிவேற்ற வேண்டும். செய்முறை தேர்வு முடிந்ததும், காலதாமதம் ஏதும் இன்றி உடனடியாக மதிப்பெண்களை பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது சரியான மதிப்பெண்களை மட்டுமே குறிப்பிட வேண்டும். செய்முறை பயிற்சி தேர்வு உள்ளிட்ட பணிகளை, அனைத்து பள்ளிகளும், வரும் 28க்குள் இறுதி செய்து, அதற்கான மதிப்பெண்களை பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – சிபிஎஸ்இ செயலாளர் விளக்கம்...

 


சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி, அவர்கள் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு இறுதி முடிவுகள் குறித்த அறிவிப்புகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 



சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: 


கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பிரதமர் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்வதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, சி.ஐ.எஸ்.சி.இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.




இதன் பின்னர், மதிப்பீடு முறை குறித்து பல தரப்புகளில் இருந்தும் கேள்விகள் எழ தொடங்கியுள்ளது. இதனால் சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி, 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வின் அளவுகோல்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதனால் முடிவுகள் வெளியிட இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார். தேர்வு முடிவு அளவுகோல்களை தீர்மானிக்க சிபிஎஸ்இ 12 உறுப்பினர் குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவில் இணைச் செயலாளர் கல்வி, விபின் குமார், கேந்திரியா மற்றும் நவோதயா வித்யாலயா ஆணையர்கள் மற்றும் சிபிஎஸ்இ மற்றும் யுஜிசி பிரதிநிதிகள் உள்ளனர். குழு தனது அறிக்கையை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.




இந்த மதிப்பீட்டு அளவுகோலில் திருப்தி இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். மேலும், இது போன்ற சூழ்நிலைகளில் மாணவர்கள் தங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும், மதிப்பெண்களை மட்டும் வைத்து ஒருவரின் திறனை அளவிட முடியாது என்றும், மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு : கமிட்டி அமைத்தது CBSE...

 பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு : கமிட்டி அமைத்தது சி.பி.எஸ்.இ...


சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த முறையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்க குழு அமைப்பு


கல்வி அமைச்சகத்தின் இணைச்  செயலாளர் விபின் குமார் தலைமையில்  குழு அமைப்பு.


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும்முறை குறித்து முடிவெடுக்க, 13 உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.


கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை, மத்திய அரசு ரத்து செய்தது. பல்வேறு மாநிலங்களிலும், கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ள நிலையில், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி, பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக, பிரதமர் மோடி அறிவித்தார்.


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து ஆலோசனை நடத்த, மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலர் விபின் குமார் தலைமையில், 13 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. எந்த முறையில் மதிப்பெண் வழங்க வேண்டும் என்பது குறித்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க, கமிட்டிக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.




கொரோனா சூழலில் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து - பிரதமர் மோடி...

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு...


கொரோனா சூழலில் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து - பிரதமர் மோடி...


CBSE Class XII Board Exams cancelled. Class XII results will be made as per a well-defined objective criteria in a time-bound manner. Decision on Class 12 CBSE Exams has been taken in the interest of students: PM Narendra Modi...












12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யக் கோரும் வழக்கு 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...




 சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  



மூன்று நாளில் கொள்கை முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் கூறியதால் வழக்கு விசாரணையின்போது இத்தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.




சிபிஎஸ்இ, ஐசிஎஸ்ஐ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யக் கோரும் வழக்கு 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



மாநில அரசின் விதிகளை பின்பற்ற சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவு...



 மாநில அரசின் விதிமுறைகளையும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவுறுத்தியுள்ளது.



மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., செயலர் அனுராக் திரிபாதி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். இணைப்பு அந்தஸ்தை பெறும் போது, விதிகளை பின்பற்றுவதாக கையெழுத்திடும் பள்ளி நிர்வாகிகள், பின்னர், அதில் கூறப்பட்டவற்றை சரியாக கடைப்பிடிக்காமல் இருப்பது தெரிய வந்துள்ளது.




சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் இணைப்பு விதிகளை மட்டுமின்றி, மாநில அரசுகள் அமல்படுத்தும் விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு கடைபிடிக்க தவறும் பள்ளிகளின் இணைப்பு அந்தஸ்து, ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.




ஒவ்வொரு பள்ளியும், தங்களின் இணையதளத்தில் பல்வேறு அடிப்படை தகவல்களை, பெற்றோர் பார்க்கும்படி இடம் பெற செய்ய வேண்டும்.பள்ளியின் இணைப்பு அந்தஸ்து விபரம், பள்ளிக்கு வழங்கப்பட்ட குறியீட்டு எண், முழு முகவரி, பள்ளி முதல்வரின் பெயர், கல்வித்தகுதி, இ-மெயில் முகவரி, மொபைல் போன் உள்ளிட்ட தொடர்பு விபரங்கள் இடம் பெற வேண்டும்.




அரசு தரப்பில் பெறப்பட்ட கட்டட, சுகாதார, தீயணைப்பு சான்றிதழ்களின் நகல்கள், அறக்கட்டளையின் பதிவு சான்று, டி.இ.ஓ.,விடம் வழங்கிய சுய உறுதி சான்று, மாணவர்களுக்கான கட்டண விபரம், மூன்றாண்டுகளின் தேர்வு முடிவுகள், ஆண்டு கால அட்டவணையும், இணையதளத்தில் பார்க்கும் வகையில் இடம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஜூலை 15ம் தேதி CBSE பிளஸ் 2 தேர்வு?

 


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுகளை, ஜூலை 15ல் துவக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


கொரோனா காரணமாக பல மாநிலங்களில் இந்தாண்டு, 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப் பட்டு உள்ளது; பிளஸ் 2 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தொடர்பாக சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கிடையே சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு, பிளஸ் 2 தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது.இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு கூடி, பிளஸ் 2 தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யும். தேர்வு குறித்த அறிவிப்பு, ஜூன் 1ம் தேதி வெளியாகும். 


ஜூலை 15ல் துவங்கி, ஆக., 26க்குள் தேர்வு நடத்தி முடித்து, செப்டம்பரில் முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, இதில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு வட்டாரங்கள் கூறின. 


கோரிக்கை : 'ஆகஸ்டில் தேர்வுகள் முடிந்து, செப்டம்பரில் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில், உயர் கல்வியில் மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்படும். 'வெளிநாட்டு பல்கலைகளில் பயில்வதற்கான வாய்ப்பை மாணவர்கள் இழந்து விடுவர். அதனால், முன்னதாகவே தேர்வு நடத்த வேண்டும்' என, கல்லுாரி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...