கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – சிபிஎஸ்இ செயலாளர் விளக்கம்...

 


சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி, அவர்கள் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு இறுதி முடிவுகள் குறித்த அறிவிப்புகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 



சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: 


கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பிரதமர் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்வதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, சி.ஐ.எஸ்.சி.இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.




இதன் பின்னர், மதிப்பீடு முறை குறித்து பல தரப்புகளில் இருந்தும் கேள்விகள் எழ தொடங்கியுள்ளது. இதனால் சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி, 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வின் அளவுகோல்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதனால் முடிவுகள் வெளியிட இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார். தேர்வு முடிவு அளவுகோல்களை தீர்மானிக்க சிபிஎஸ்இ 12 உறுப்பினர் குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவில் இணைச் செயலாளர் கல்வி, விபின் குமார், கேந்திரியா மற்றும் நவோதயா வித்யாலயா ஆணையர்கள் மற்றும் சிபிஎஸ்இ மற்றும் யுஜிசி பிரதிநிதிகள் உள்ளனர். குழு தனது அறிக்கையை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.




இந்த மதிப்பீட்டு அளவுகோலில் திருப்தி இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். மேலும், இது போன்ற சூழ்நிலைகளில் மாணவர்கள் தங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும், மதிப்பெண்களை மட்டும் வைத்து ஒருவரின் திறனை அளவிட முடியாது என்றும், மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...