கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMIS – ல் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் – CEO, DEO, BEO, HM உள்ளிட்டோர்க்கு அறிவுரைகள் – பள்ளிக் கல்வி ஆணையர் கடிதம்...

 


பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதத்தில் எந்த ஒரு நிலையிலும் தனிப்பட்ட முறையில் துறை சார்ந்த விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாகவோ அல்லது மாவட்டக் கல்வி அலுவலகங்கள் வாயிலாகவோ பெற்று தொகுக்கும் பணியினை ( data collection consolidation ) மேற்கொள்ளக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


* மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான விவரங்களைக் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை ( EMIS ) வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப அனைத்து நிலையிலும் ( பள்ளிகள் , வட்டாரக் கல்வி அலுவலகங்கள் , மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் வருவாய் மாவட்டக் கல்வி அலுவலங்கள் ) அவ்வப்போது ஏற்படும் விவரங்களை உடனுக்குடன் நிகழ்நிலையில் ( current updation ) வைத்திடும் பொருட்டு EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* 16.02.2021 அன்று கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையில் அனைத்து வகைப் பள்ளிகள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் சார்ந்த களஅளவில் உள்ள நேரிடைத் தகவல்கள் அனைத்தும் கிடைக்கப் பெறும் இயங்கு தளமாக உள்ளது.


* இவ்விணையதளத்தில் பள்ளிகளுடைய விவரங்கள் , மாணவர்களின் தகவல்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் என மூன்று முக்கிய பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தானியங்கி முறையில் எளிமையாக அறிக்கைகள் தயாரித்து வழங்க முடிவதுடன் , பள்ளி அளவில் பயன்பாட்டில் உள்ள 30 – க்கும் மேற்பட்ட பதிவேடுகள் எண் மயமாக்கப்பட்டு உள்ளன.


* ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் பணி நிர்ணயம் , பணி மாறுதல் , பதவி உயர்வு மற்றும் கலந்தாய்வு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 


* 10 , 11 மற்றும் 12 – ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத் தேர்விற்கான மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணியும் இதில் அடங்கும். 


* இவ்வாறான இணையதளத்தில் பள்ளிகள் , வட்டார அலுவலகங்கள் , கல்வி மாவட்டங்கள் மற்றும் வருவாய் மாவட்டங்கள் அளவிலான விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு இணையதளத்தினை நிகழ்நிலையில் ( current updation ) வைக்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 


* எனவே , இனி வருங்காலங்களில் பள்ளிகள், ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான அனைத்துப் புள்ளி விவரங்களையும் EMIS மூலம் பெற்று உரிய நடடிவக்கை எடுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. எக்காரணம் கொண்டும் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் மேற்படி விவரங்களை நேரடியாகப் பெறுவதைத் தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


>>> பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதம் ந.க.எண்: 028302/ எப்2 / 2021, நாள்: 10-06-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...