கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆகஸ்ட் 1 முதல் சம்பளம், ஓய்வூதியம், EMI செலுத்துதலுக்கான புதிய விதிகள் – RBI அறிவிப்பு...

 


ஆகஸ்ட் 1 முதல் சம்பளம், ஓய்வூதியம், EMI செலுத்துதலுக்கான புதிய விதிகள் – RBI அறிவிப்பு...


ரிசர்வ் வங்கியானது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவால் இயக்கப்படும் NACH திட்டத்திற்கான புதிய விதிகளை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.


புதிய விதிகள்:

பொதுவாக நாம் நமது மாதாந்திர செலவுகளையும், கடன் தவணைகளையும் தனித்தனியாக குறிப்பிட்ட முறையில் செலுத்துவோம். தற்போது RBI மாதந்திர ஊதியம் பெறும் நபர்கள் இது போன்ற தங்களின் மாதந்திர கடன் தவணை மற்றும் செலவுகளை ஒரே தளத்தின் வழியாக செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (NACH) மூலம் செயல்படுத்த இருக்கிறது.


தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் என்பது நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் மொத்த கட்டணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் EMI செலுத்துதல், வட்டி, சம்பளம், ஓய்வூதியம் போன்ற பல பரிவர்த்தனைகளுக்கு பணத்தை செலுத்த உதவுகிறது. மேலும், மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, நீர் கட்டணம், காப்பீடு தொகை, நிதி முதலீடு போன்றவற்றையும் செய்ய உதவுகிறது.


NACH வாரத்தின் அனைத்து நாட்களிலும், ஆகஸ்ட் 1, 2021 முதல் செயல்பட இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் அறிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து வசதிகள் பற்றிய அனைத்து நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களும் RBI ஆல் தனித்தனியாக அறிக்கையாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



________________


💢 *விடுமுறை நாட்களிலும் இனி சம்பளத்தை வரவு  வைக்கலாம்- ரிசர்வ் வங்கி 


💸ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளத்தை வரவு வைக்கும் வகையில் விதிமுறைகளில் RBI மாற்றம் செய்துள்ளது.


💸 *வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வார இறுதி நாட்கள், விழா கால மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வரவு வைக்கலாம்* என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. வங்கிகளின் வாயிலாக முக்கியமான பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்வதற்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள், வங்கி விடுமுறை நாட்களில் அனுமதி இல்லாமல் இருந்தது. இப்போது ஆர்டிஜிஎஸ் எனப்படும் இணையதள பரிமாற்றங்கள், ஐஎம்பிஎஸ் என்ற மொபைல் வழி பணப் பரிமாற்றங்களை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ள முடியும். அதே நேரத்தில் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் எனப்படும் பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கிரெடிட் செய்வது குறித்த பணப்பரிமாற்றங்களை வங்கி அலுவலக நேரத்தில் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இதில் இப்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.


💸அதன்படி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் எனப்படும் பணப்பரிமாற்ற முறையில் 24 மணி நேரமும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இந்த நடைமுறை அமலுக்கு வரும் போது வங்கிகளின் வாயிலாக சம்பளம் தரும் நிறுவனங்கள் இனி சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் வங்கி விடுமுறை நாட்களிலும், பண்டிகை விடுமுறை நாட்களிலும் கூட வங்கிகளில் ஊழியர்களின் சம்பளத்தை வரவு வைக்க முடியும். அதே போல வங்கி கடன்களுக்கான EMI தொகையையும் இனிமேல் விடுமுறை நாட்களில் செலுத்துவதற்கும் இதன் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. சம்பளம் தவிர பொதுத்துறை நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோரின் பென்ஷன் தொகையையும் விடுமுறை தினங்களில் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...