கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உங்களுக்கே தெரியாமல் உங்களின் அலைபேசி வேவு பார்க்கப்படுகிறதா? காட்டிக் கொடுக்கும் சில அறிகுறிகள்...



 செல்போன், கம்ப்யூட்டரில் என்னதான் வலுவான பாஸ்வேர்டுகளுடன் தகவல்களை பத்திரமாக வைத்திருந்தாலும், ஸ்பைவேர்கள் மூலம் அவற்றை எளிதாக திருடி விடலாம் என்பதை தற்போதைய பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த ஸ்பைவேர் சாப்ட்வேர் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாருடைய செல்போனையும் ஒட்டு கேட்கலாம், தகவல்களை திருடலாம். பெகாசஸ் ஸ்பைவேரால் சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், மால்வேர்கள் பிற உளவு சாப்ட்வேர்கள் மூலமாக செல்போனை ஹேக் செய்ய முடியும். அப்படி ஹேக் செய்து, உங்கள் வங்கி கணக்கு பாஸ்வேர்டு அறிந்து, அதன் மூலம் பணத்தையும் திருட முடியும். ஒருவேளை உங்கள் செல்போனில் இதுபோன்று ஹேக் செய்யப்பட்டாலோ, வேவு பார்க்கப்பட்டாலோ சில அறிகுறிகள் காட்டிக் கொடுத்திடும். அதன் மூலம், நீங்கள் உஷாராகி செல்போனை ரீசெட் செய்யலாம் அல்லது வேறு செல்போனை மாற்றி விடலாம். செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறது அல்லது வேவு பார்க்கப்படுகிறது என்பதை காட்டிக் கொடுக்கும் சில அறிகுறிகள் இதோ…



* வழக்கத்தை விட போன் பேட்டரி வேகமாக தீரும். அப்படி எனில், மால்வேர் அல்லது உங்கள் செல்போனில் தில்லுமுல்லு செய்வதற்கான மோசடி மென்பொருள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என அர்த்தம்.


* நீங்கள் டவுன்லோடு செய்யாத ஆப்கள் போனில் இருக்கும். அது, ஸ்பைவேர் அல்லது ஹேக்கர்களின் வேலையாக இருக்கும். உங்களுக்கே தெரியாமல் அந்த ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதன் மூலம் உங்கள் போன் வேவு பார்க்கப்படும்.


*போன் செயல்பாட்டு வேகம் திடீரென மிகவும் குறைந்துவிடும். மோசடி மென்பொருளான மால்வேர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் என்பதால் போனின் செயல்திறன் இப்படி குறையும்.


* மொபைல் இன்டர்நெட் டேட்டா வேகமாக தீரும்.


* போன் வித்தியாசமாக செயல்படும். வழக்கமான வெப்சைட்கள் வித்தியாசமாக தோன்றும். ஆப்கள் திடீரென செயலிழக்கும் அல்லது ஓபன் செய்ய முடியாது.


* வித்தியாசமான பாப்-அப் நோட்டிபிகேஷன்கள் வந்தபடி இருக்கும். செல்போன் திரையில் பாப்அப் மெசேஜ்கள் நிரம்பி வழியும். அதில், வரும் எந்த லிங்க்கையும் தொடாதீர்கள்.


* போட்டோ, வீடியோ கேலரியில் உங்களுக்கு சம்மந்தமில்லாத படங்கள் திடீரென சேமிக்கப்பட்டு இருக்கும். அது, ஏதோ தெரியாமல் நடந்திருக்கும் என அலட்சியமாக இருக்கக் கூடாது.


* நீங்கள் போனை பயன்படுத்தாத நேரத்திலும் திடீரென டார்ச் லைட் தானாகவே எரிய தொடங்கும்.


* அதிக நேரம் போனை பயன்படுத்தினால்தான் சூடாகும். ஆனால், நீங்கள் போனை எடுக்கும் போதே அது சூடாக இருந்தால், யாரோ ஹேக் செய்து இயக்குகிறார்கள் என அர்த்தம்.


* நீங்கள் செய்யாத போன் கால் அல்லது எஸ்எம்எஸ்.கள் உங்கள் லாக் அல்லது கால்ஸ் லிஸ்ட்டில் காணப்படும்.


- இதுபோன்ற அறிகுறிகள் உஷாராகி விடுங்கள். உடனே, உங்கள் செல்போனை ரீசெட் செய்திடுங்கள். அப்படி செய்தால், உங்கள் போனுக்குள் ஊடுருவிய கோல்மால் மென்பொருள்கள் அழிந்து விடும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...