கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அலைபேசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அலைபேசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Smartphones rule the world...

 


உலகை ஆளும் ஸ்மார்ட்போன்கள்...


Smartphones rule the world...


ஸ்மார்ட்போன்களின் சாம்ராஜ்யம்...


1. இது கடிகாரத்தை சாப்பிட்டது


2. இது டார்ச் லைட்டை உட்கொண்டது


3. இது தபால் அட்டைகளை சாப்பிட்டது


4. இது புத்தகங்களை முழுங்கியது


5. இது வானொலியை விழுங்கியது


6. இது டேப் ரெக்கார்டரை உட்கொண்டது


7. இது கேமராவை அழித்தது


8. இது கால்குலேட்டரை சாப்பிட்டது


9. இது அண்டை வீட்டாருடன் நட்பை துண்டித்தது


10. இது உறவையும் மறக்கடித்தது


11. இது நம் நினைவாற்றலை நுகர்ந்தது


12. தியேட்டர் இல்லை


நாடகம் இல்லை,


தொலைக்காட்சி இல்லை,


விளையாட்டு இல்லை, பாடல் இல்லை...


இதுவே வங்கி, இதுவே ஹோட்டல்,


இதுவே மளிகைக் கடை...


இதுதான் மருத்துவர், இதுதான் ஜோதிடர்...


இதுதான் உண்மையான சந்தை...


வெளியே போனால் எல்லாமே போனில் இருந்துதான்...


எல்லாமே ஸ்மார்ட்போன்களின் சாம்ராஜ்யம்...


ஒரு விரல் உலகை ஆளுகிறது...


அதே விரல் மனிதனின் வாழ்க்கையை ஆளுகிறது....


வாய் முடக்கப்பட்டுள்ளது...


உண்மைதான்... தொட்டால்தான் வாழ்க்கை...


ஆனால் யாரும் தொடர்பில்லை...


ஒன்னாக கூடி இருந்தாலும் இது சிணுங்கினால் போதும் ஒதுங்கி விடுவார்கள் தனியாக.....


பல குடும்பங்கள் கெட்டுப் போனதும் இதனால தான்.....


படித்ததில் பிடித்தது!!!


அலைபேசி சேவையை மாற்றும் காலக்கெடுவில் புதிய மாற்றம்...



அலைபேசி சேவையை மாற்றும் காலக்கெடுவில் புதிய மாற்றம்...


புதிய சிம் கார்டு வாங்கினால் அல்லது அது மோசடிக்காரர்களால் முடக்கப்பட்டிருந்தால், மற்றொரு மொபைல் போன் சேவை நிறுவனத்துக்கு மாறுவதற்கான கால அவகாசம், 10 நாளில் இருந்து ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.


ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவையில் இருந்து, நம் மொபைல் எண்ணை மாற்றாமலேயே வேறொரு சேவை நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் திட்டம், 'மொபைல் போர்டபிளிட்டி' என அழைக்கப்படுகிறது.


பழுதடைந்தது, தொலைந்தது என பல காரணங்களால் ஒருவேளை புதிய சிம் வாங்கியிருந்தால், மொபைல் போர்டபிளிட்டி செய்வதற்கு, 10 நாட்கள் காத்திருக்க வேண்டும்.


இந்நிலையில், மொபைல் போன் மோசடிக்காரர்கள், ஒரு குறிப்பிட்ட மொபைல் போனை 'ஸ்வாப்' எனப்படும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.


இந்த மோசடிக்காரர்கள், குறிப்பிட்ட நபரின் மொபைல் எண்ணுக்குள் நுழைந்து தகவல்களை திருடி, சேவை அளிக்கும் நிறுவனத்திடம், புதிய சிம் பெற்றுக் கொள்கின்றனர். அதை பயன்படுத்தி, அவர்கள் போர்டபிளிட்டி செய்து, வேறொரு சேவை நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்கின்றனர்.


இந்த தகவல்களை வைத்து, குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை திருடுகின்றனர். இந்த மோசடி தற்போது அதிகளவில் நடந்து வருகிறது.


இதைத் தடுக்கும் வகையில், மொபைல் ஸ்வாப் அல்லது புதிய சிம் வாங்கிய பின், மற்றொரு சேவை நிறுவனத்துக்கு மாறுவதற்கான காலத்தை குறைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.


மோசடிகளை தடுக்கும் வகையிலும், பயனாளிக்கு உதவும் வகையில், தற்போதுள்ள 10 நாட்கள் என்ற அவகாசத்தை, ஏழு நாட்களாக குறைத்து, 'டிராய்' எனப்படும் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


அலைபேசி சேவை கட்டணங்களின் விலை உயர்வு - இந்தியர்கள் ஆண்டுக்கு ரூ.47500 கோடி அதிகம் செலவிட வேண்டும்...



அலைபேசி சேவை கட்டணங்களின் விலை உயர்வு - இந்தியர்கள் ஆண்டுக்கு ரூ.47500 கோடி அதிகம் செலவிட வேண்டும்...


தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலைஉயர்வு குறித்து, கோடக் நிறுவன பங்குகள் வெளியிட்டுள்ள ஆய்வுக் குறிப்பின்படி இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.47,500 கோடி கூடுதல் சுமை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவை கட்டணங்களை அடுத்தடுத்து அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இதில் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் முதன்மையில் இருக்கும் ஜியோ நிறுவனம் நேற்று முன்தினம் (ஜூன் 27) முதலில் தங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது.


ஜியோ தனது ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 12 முதல் 27% வரையில் அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது. 

இந்த விலையேற்றம் ஜூலை முதல் அமலுக்கு வரும் என கூறியது. அதேபோல, ஏர்டெல் நிறுவனமும், தங்கள் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு கட்டணங்களை 11 முதல் 21% உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. 


இந்த கட்டண உயர்வு வரும் ஜூலை 3 முதல் அமலுக்கு வரும் என கூறியது. தொடர்ந்து, வோடஃபோன் ஐடியா நிறுவனமான VI நிறுவனமும் விலையேற்றத்தை அறிவித்துள்ளது. அடுத்தடுத்த காலாண்டுகளில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையில் கவனம் செலுத்தவும் உள்ளது என அறிவித்துள்ளது.  


இந்த விலையேற்றம் ஜூலை 4-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது. சமீப காலங்களில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 5G தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க பெரும் முதலீடுகளை செய்துள்ளன.


இப்போது வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையைப் பெற 71% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு பயனருக்கான சராசரி செலவை (ARPU) 15 முதல் 17% வரை அதிகரித்துள்ளன.


தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலைஉயர்வு குறித்து, கோடக் நிறுவன பங்குகள் ஆய்வுக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.47,500 கோடி கூடுதல் சுமையை இந்த விலை உயர்வு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெற்றோரின் அலைபேசி எண்ணை சரிபார்க்கும் பணியின் முக்கியத்துவம் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களின் தகவல்...


 பெற்றோரின் அலைபேசி எண்ணை சரிபார்க்கும் பணியின் முக்கியத்துவம் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களின் தகவல்...


Importance of Parent's Phone Number Verification - School Education Secretary's Voice Message...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




மாவட்டங்கள் மற்றும் கல்வி மாவட்டங்கள் வாரியாக அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களின் அலைபேசி எண்கள் - District & Educational District wise All BEO's Mobile Numbers...


 மாவட்டங்கள் மற்றும் கல்வி மாவட்டங்கள் வாரியாக அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களின் அலைபேசி எண்கள் - District & Educational District wise All BEO's (Block Educational Officer) Mobile Contact Numbers...



>>> Click Here to Download...


விவோ செல்போன் நிறுவனம் மீது ரூ.62,476 கோடி பணமோசடி விவகாரத்தின்கீழ் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது (The Enforcement Directorate has filed a charge sheet against Vivo Cell Phone Company in the Rs 62,476 crore money laundering case)...



விவோ செல்போன் நிறுவனம் மீது ரூ.62,476 கோடி பணமோசடி விவகாரத்தின்கீழ் அமலாக்கத்துறை  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது (The Enforcement Directorate has filed a charge sheet against Vivo Cell Phone Company in the Rs 62,476 crore money laundering case)...


இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கோடிக்கணக்கான பணம் அனுப்பப்பட்டதாக சீன தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான விவோவுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


கடந்தாண்டு, இந்த நிறுவனங்களில் நடத்திய சோதனையில், இந்தியாவில் வரி கட்டுவதை தவிர்க்க விவோ நிறுவனம் சீனாவிற்கு ரூ.62,476 கோடியை சட்ட விரோதமாக அனுப்பியதாக அமலாக்கத்துறை கூறியிருந்தது.


செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ இந்தியாவின் மீது பணமோசடி விவகாரத்தின்கீழ் அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


சீனாவை தலைமையிடமாகக் கொண்ட செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோவின் இந்தியக் கிளையான விவோ இந்தியாவின் (vivo india) மீது பணமோசடி விவகாரத்தின் கீழ் அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


கடந்த ஆண்டு அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், இந்தியாவில் வரிப்பணத்தைக் கட்டுவதைத் தவிர்க்க, விவோ நிறுவனம் சீனாவிற்கு ரூ.62,476 கோடியை சட்டவிரோதமாக அனுப்பியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இதில் பல சீனர்களும், இந்திய நிறுவனங்களும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.


இதுதொடர்பாக, லாவா இன்டர்நேஷனல் மொபைல் நிறுவனத்தின் இயக்குநர் ஹரி ஓம் ராய், சீனாவைச் சேர்ந்த அலியாஸ் ஆன்ட்ரூ மற்றும் 2 பட்டயக் கணக்காளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபர்கள் இந்தியாவின் பொருளாதார இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அமலாக்கத்துறை தனது விசாரணை ஆவணங்களில் தெரிவித்துள்ளது.


மேலும், லாவா நிறுவனம் விவோவுடன் இணையும் பேச்சுவார்த்தைகள் பத்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, சீன நிறுவனம் அல்லது, விவோ நிறுவனத்துடன் எந்த பண பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளவில்லை என லாவா நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


நமது அலைபேசியில் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் (Numbers to be stored in our mobile phone)...


நமது  அலைபேசியில் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் (Numbers to be stored in our mobile phone)...


1. அவசர உதவி அனைத்திற்கும் - *911*


2. வங்கித் திருட்டு உதவிக்கு *9840814100*


3. மனித உரிமைகள் ஆணையம் *044-22410377*


4. மாநகரபேருந்தில *அத்துமீறல்*  *09383337639*


5. காவல்துறை SMS : *9500099100*


6. காவல்துறை மீது ஊழல் புகாருக்கு SMS : *9840983832*


7. போக்குவரத்து விதிமீறல் SMS : *98400 00103*


8. காவலர் : *100*


9. தீயணைப்புத்துறை *101*


10.போக்குவரத்து விதிமீறல் *103*


11.விபத்து : *100, 103*


12. பிணியூர்தி: Ambulance *102, 108*


13.*பெண்களுக்கான* அவசர உதவி : *1091*


14.*குழந்தைகளுக்கான* அவசர உதவி :*1098*


15. அவசரக் காலம் மற்றும் விபத்து : *1099*


16.முதியோர்களுக்கான அவசர உதவி: *1253*


17.*தேசியநெடுஞ்சாலையில்* அவசர உதவி: *1033*


18.*கடலோர பகுதி* அவசர உதவி : *1093*


19. *ரத்த வங்கி அவசர* உதவி : *1910*


20.*கண் வங்கி* அவசர உதவி : *1919*


21. விலங்குகள் பாதுகாப்பு  *044-22354959/22300666*


22. நமது அலைபேசியில் *911* என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.


நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். *


*இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.*


23. பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது நடத்துநர் மீதி சில்லறையைக் கொடுக்காதது....


அல்லது குடித்து விட்டோ கைப்பேசி பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : *9383337639*


24. பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு....


Toll Free No :-


*180011400,, 94454 6474*


*72999 98002*


*72000 1800*


*044- 28592828*


25. மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- *044 – 26530504 / 26530599*


26 வாடகைத் தாய்களாகப் போய், தரகர்களிடம் ஏமாறும் பெண்கள்– *044- 26184392 / 9171313424*


27. ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: *044- 25353999 / 90031 61710 / 99625 00500*


28. தானியில் (ஆட்டோவில்) அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — *044-24749002 / 26744445*


29. சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றால் 95000 99100 ( SMS ).






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

திருச்சி ஆசிரியர் இல்லம் - தங்குவதற்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100/- மட்டும் - தொடர்பு எண்கள் & முகவரி (Trichy Teacher's Home - Rs.100/- per day only as accommodation rent - Contact Numbers & Address)...

 தமிழ்நாட்டின்  மையப்பகுதியான திருச்சியில் புதியதாக ஆசிரியர் இல்லம் கட்டப்பட்டுள்ளது.


🌟 ந.க.எண்.29500/ஐ/இ3/2012.  நாள்-04.07.2017


🌟 மேற்காணும் செயல்முறைகளின் படி ஆசிரியர்கள்/ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் குறைந்த செலவில் தங்கி பயனடைய ஏதுவாக திருச்சி மாவட்டத்தில் கீழ்க்காணும் முகவரியில் ஆசிரியர் இல்லம் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.


🌟 அறைகளில் தங்குவதற்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100/- மட்டும் வசூலிக்கப்படும் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.


🌟 முகவரி:

ஆசிரியர் இல்லம்,

பிளாக் எண்.36,

கஸ்தூரி மஹால் சாலை,

கோ.அபிஷேகபுரம்,

திருச்சிராப்பள்ளி,

(புதிய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்),

(கேம்பியன் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி எதிர் சாலையில்).



🌟 இல்லக் காப்பாளர் தொடர்பு எண் - 9487157922.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் - மாவட்ட மற்றும் மாநில அளவிலான அலுவலர்களின் தொலைபேசி எண்கள் பதிவேடு 2022 - தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு நிறுவனம் (TAMIL NADU STATE DISASTER MANAGEMENT AUTHORITY - STATE AND DISTRICT LEVEL AUTHORITIES TELEPHONE DIRECTORY 2022 - TAMIL NADU DISASTER RISK REDUCTION AGENCY)...


 TAMIL NADU STATE DISASTER MANAGEMENTAUTHORITY, 

TELEPHONE DIRECTORY 2022 - 

TAMIL NADU DISASTER RISK REDUCTION AGENCY

Ezhilagam, Chennai - 05.

www.tnsdma.gov.in


>>> தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் - மாவட்ட மற்றும் மாநில அளவிலான அலுவலர்களின் தொலைபேசி எண்கள் பதிவேடு 2022 - தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு நிறுவனம் (TAMIL NADU STATE DISASTER MANAGEMENT AUTHORITY - STATE AND DISTRICT LEVEL AUTHORITIES TELEPHONE DIRECTORY 2022 - TAMIL NADU DISASTER RISK REDUCTION AGENCY)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


உயர் கல்வித் துறை மண்டல இணை இயக்குனர்கள் மற்றும் அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களின் அலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளின் பட்டியல் 27-10-2022ஆம் தேதியின்படி (List of Phone Numbers & E-mail IDs of Regional Joint Directors of Higher Education Department and Principals of all Government Colleges as on 27-10-2022)...


>>> உயர் கல்வித் துறை மண்டல இணை இயக்குனர்கள் மற்றும் அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களின் அலைபேசி எண்கள்  மற்றும் மின்னஞ்சல் முகவரிகளின் பட்டியல் 27-10-2022ஆம் தேதியின்படி (List of Phone Numbers & E-mail IDs of Regional Joint Directors of Higher Education Department and Principals of all Government Colleges as on 27-10-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட) மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்கள், புகார் அளிக்க அலைபேசி எண்கள் வெளியீடு (Details of the Consumer Grievance Redressal Forum (CGRF) & mobile numbers to lodge complaints of the Tamil Nadu Electricity Generating and Distribution Corporation (formerly known as the Tamil Nadu Electricity Board))...



தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட)  மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்கள், புகார் அளிக்க அலைபேசி எண்கள் வெளியீடு (Details of the Consumer Grievance Redressal Forum (CGRF) & mobile numbers to lodge complaints of the Tamil Nadu Electricity Generating and Distribution Corporation (formerly known as the Tamil Nadu Electricity Board))...


 தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

       4வது தளம், சிட்கோ தலைமை நிர்வாக அலுவலக கட்டிடம்,

 திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600 032.


  தொலைபேசி எண்கள் : ++91-044-2953 5806 / 2953 5816 

தொலைநகல் : ++91-044-2953 5893

மின்னஞ்சல்: tnerc@nic.in

இணையதளம்: www.tnerc.gov.in


தேதி: 02.06.2022                                                              


செய்திக்குறிப்பு


இந்தச் செய்திக் குறிப்பானது, தற்போது இருந்து வரும் பல நிலைகளைக் கொண்ட குறை தீர்க்கும் செயல்பாட்டு அமைப்பினையையும் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில்  (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட) ஒவ்வொரு வட்ட அலுவலகத்திலும் இயங்கிக்கொண்டிருக்கிற மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்களையும் பொதுமக்களுக்கு பரப்புவதற்காகவும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வெளியிடப்படுகிறது.



அத்தகைய வசதிகள் பின்வருமாறு பட்டியலிடப்படுகிறது:


1. தனி நபர் மின்தடை / பொதுவான மின்தடை/அவசர அழைப்பு :

நுகர்வோர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம், சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.


2. சேதமடைந்த மின்கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள/ சேதமடைந்துள்ள தெருவிளக்குப் பெட்டி/ மின் விநியோகப் பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் ஒயர்கள் மின் அமைப்பிலுள்ள பழுதுகள் முதலியன:

நுகர்வோர்கள் தங்கள் கைபேசியில் நிழல்படம் எடுத்து அவைகளை கீழ்காணும் “வாட்ஸ் அப்” எண்ணிற்கு அனுப்பலாம்.


வ.எண் மாவட்டங்கள் அழைப்பு எண்

1 சென்னை 9445850829

2 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் 9444371912

3 கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி 9442111912

4 சேலம், ஈரோடு,  நாமக்கல் 9445851912

5 மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை 9443111912

6 திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகர் 8903331912

7 திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் 9486111912

8 வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி 6380281341

9 விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் 9445855768


3. மற்ற வகை புகார்கள், அதாவது மின்மாற்றி / கம்பம்/ தெருவிளக்குப் பெட்டி/ மின்விநியோகப் பெட்டி, மின் அளவி பழுது, குறைவான / அதிகமான மின் அழுத்தப்புகார்கள், கேபிள் பழுது, தீப்பொறி, மின் அமைப்பில் தீ விபத்து, பட்டியிடல் புகார்கள், புதிய மின் இணைப்பு சம்பந்தப்பட்ட புகார்கள், மறு மின் இணைப்பு, மின் தரம், தாமத சேவை, சேவை குறைபாடு, மின்சாரம் தொடர்புடைய பிற புகார்கள் முதலியன:


புகார்கள் / குறைகளை மின்னகம் - மின்நுகர்வோர் அழைப்பு மையத்தை 94987 94987 என்ற எண்ணில்  தொடர்பு கொண்டு பதிவு செய்யாலாம். 


மேலும், புகார்களை www.tangedco.gov.in   Reach us  Consumer’s Complaint என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக வலைய தள பக்கத்தில் பதிவு செய்யலாம்.


மேலும், புகார்களை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவகத்தில் பதிவு செய்யலாம். புகார்கள் தீர்க்கப்படவில்லையெனில் அடுத்த கட்டமாக உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோரை அணுகலாம். ஒவ்வொரு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரும் குறை தீர்க்கும் கூட்டத்தை அனைத்து கோட்ட அலுலகத்திலும் ஒவ்வொரு மாதமும் நடத்துகிறார்கள். குறைகளை இந்த குறை தீர்க்கும் கூட்டத்தின் போது மேற்பார்வை பொறியாளரிடம் சமர்ப்பிக்கலாம்.


மேற்கண்ட வழிகளில் குறை தீர்க்கப்படவில்லை என்றாலும் கூட,  அவைகளை மின்சார விதி 2003 ஷரத்துக்களின் படி ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திலும் ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். அனைத்து நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்களின் முகவரிகள் ஆணையத்தின் வலையதளம் www.tnerc.gov.in  Consumer Corner என்ற பக்கத்திலும், மேலும் www.tangedco.gov.in  Consumer Info  Consumer Guidance  Consumer Grievance என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக வலையதளத்திலும் உள்ளது.

மன்றம் குறைகளை தீர்க்கவில்லை என்றாலோ அல்லது மன்றத்தின் ஆணையினால் நுகர்வோர் திருப்தி அடையவில்லையென்றாலோ, அவராகவோ அல்லது அவருடைய சார்பாளர் மூலமாகவோ முப்பது நாட்களுக்குள் ஒழுங்கு முறை  ஆணைய அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள மேல் முறையீட்டு அதிகார அமைப்பான மின்சாரக்  குறை தீர்ப்பாளரிடமும் மேல்முறையீடு செய்யலாம்.  

மேல் முறையீட்டாளர் சம்பந்தப்பட்ட அனைத்து  நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் மற்றும் செயல்பாட்டு முறைகளின் விவரங்கள், நுகர்வோர்களின்  வழிகாட்டுதலுக்காக  www.tnerc.gov.in  Regulations  Final Regulations  Consumer Grievance Redressal Forum and Electricity Ombudsman என்ற பகுதியில் உள்ளது.


4. மின் திருட்டு, தவறான மின் உபயோகம் முதலியன:

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, என்கிற 4 கோட்டத்தின்  கட்டுப்பாட்டில் ஒவ்வொரு உதவி செயற்பொறியாளரின் தலைமையின் கீழும்  21 அமலாக்கக் குழுக்கள் மாநிலம் முழுவதும் செயல்பட்டுக்கொண்டுள்ளன.   இந்த அமலாக்கக் குழுக்களுக்கு கூடுதலாக இரண்டு பறக்கும் குழு /சென்னை மற்றும் உளவுத்துறை பிரிவுகள்  அமலாக்கத் துறையில் செயல்பட்டுக்  கொண்டிருக்கின்றன. அனைத்து 23  குழுக்களும் சென்னையிலுள்ள அமலாக்கப்பிரிவின் மேற்பார்வை பொறியாளரால் கண்காணிக்கப்படுகிறது.


இவை அனைத்தும் காவல்துறை தலைமை இயக்குனர் / லஞ்ச ஒழிப்பு / சென்னை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.


ஆகவே, நுகர்வோர்கள் இது சம்பந்தமான புகார்களை தமிழ்நாடு மின்உற்பத்தி  மற்றும் மின் பகிர்மான கழக அமலாக்கப்பிரிவிற்கு தெரிவிக்குமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  தொடர்புக்கு www.tangedco.gov.in  consumer info  enforcement .

புகார்களை ig@tnebnet.org  மற்றும் ceapts@tnebnet.org என்ற மின்னஞ்சல்கள் மூலமும் அனுப்பலாம்.


5. ஒழுங்கின்மை, கடமை புறக்கணித்தல், ஊழல், லஞ்சம் முதலியவை பற்றிய புகர்கள்:

இந்த வகையிலான புகார்களை உரிமம்தாரரின் மேலதிகாரிகளுக்கும், லஞ்ச ஒழிப்புப் பிரிவிற்கும் அனுப்ப வேண்டும்.  


6. செந்தர விதிகளில் (Codes and Regulations) மாற்றம் செய்வதற்கான பரிந்துரைகள்:

ஆணையத்தால் இயற்றப்பட்ட  விதிகளில், நுகர்வோர்கள் ஏதாவது மாற்றம்  செய்ய விரும்பினால், அந்த மாற்றத்தையும் அதற்கான  குறிப்பிட்ட கராணங்களையும் எழுத்து வடிவாக மின் வழங்கல் விதி பிரிவு 27 / மின்பகிர்மான விதி பிரிவு 51ன்  கீழ் ஏற்படுத்தப்பட்ட விதித்தொகுப்பு மீள்பார்வைக் குழு (Code Review  Panel) விற்கு அனுப்பலாம்.

அத்தகைய மாற்றமும், காரணங்களும் கொண்ட  விதித்தொகுப்பு மீள் பார்வைக் குழுவின்  கருத்துரு , உறுப்பினர் செயலராக உள்ள தலைப்பொறியாளர் / வணிகம் / தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் / சென்னை அவர்களுக்கு அனுப்பலாம்.


7.பொதுமக்களுக்கான செய்தி:

ஆகவே குறைகள்/ புகார்கள் மேற்கண்ட மின்சார உரிமைதாரரின்  பல நிலைகளைக் கொண்ட குறைகளைத்    தீர்க்கும் செயல்பாட்டு அமைப்புகளை நேரடியாக அணுகி மேலே விளக்கியுள்ளவாறு பயன்படுத்தி தங்களுடைய குறைகளையும்/ புகார்களையும் உரிய நேரத்திற்குள் நிவர்த்தி செய்து  பயனடையுமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



         செயலாளர்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்




உங்களுக்கே தெரியாமல் உங்களின் அலைபேசி வேவு பார்க்கப்படுகிறதா? காட்டிக் கொடுக்கும் சில அறிகுறிகள்...



 செல்போன், கம்ப்யூட்டரில் என்னதான் வலுவான பாஸ்வேர்டுகளுடன் தகவல்களை பத்திரமாக வைத்திருந்தாலும், ஸ்பைவேர்கள் மூலம் அவற்றை எளிதாக திருடி விடலாம் என்பதை தற்போதைய பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த ஸ்பைவேர் சாப்ட்வேர் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாருடைய செல்போனையும் ஒட்டு கேட்கலாம், தகவல்களை திருடலாம். பெகாசஸ் ஸ்பைவேரால் சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், மால்வேர்கள் பிற உளவு சாப்ட்வேர்கள் மூலமாக செல்போனை ஹேக் செய்ய முடியும். அப்படி ஹேக் செய்து, உங்கள் வங்கி கணக்கு பாஸ்வேர்டு அறிந்து, அதன் மூலம் பணத்தையும் திருட முடியும். ஒருவேளை உங்கள் செல்போனில் இதுபோன்று ஹேக் செய்யப்பட்டாலோ, வேவு பார்க்கப்பட்டாலோ சில அறிகுறிகள் காட்டிக் கொடுத்திடும். அதன் மூலம், நீங்கள் உஷாராகி செல்போனை ரீசெட் செய்யலாம் அல்லது வேறு செல்போனை மாற்றி விடலாம். செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறது அல்லது வேவு பார்க்கப்படுகிறது என்பதை காட்டிக் கொடுக்கும் சில அறிகுறிகள் இதோ…



* வழக்கத்தை விட போன் பேட்டரி வேகமாக தீரும். அப்படி எனில், மால்வேர் அல்லது உங்கள் செல்போனில் தில்லுமுல்லு செய்வதற்கான மோசடி மென்பொருள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என அர்த்தம்.


* நீங்கள் டவுன்லோடு செய்யாத ஆப்கள் போனில் இருக்கும். அது, ஸ்பைவேர் அல்லது ஹேக்கர்களின் வேலையாக இருக்கும். உங்களுக்கே தெரியாமல் அந்த ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதன் மூலம் உங்கள் போன் வேவு பார்க்கப்படும்.


*போன் செயல்பாட்டு வேகம் திடீரென மிகவும் குறைந்துவிடும். மோசடி மென்பொருளான மால்வேர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் என்பதால் போனின் செயல்திறன் இப்படி குறையும்.


* மொபைல் இன்டர்நெட் டேட்டா வேகமாக தீரும்.


* போன் வித்தியாசமாக செயல்படும். வழக்கமான வெப்சைட்கள் வித்தியாசமாக தோன்றும். ஆப்கள் திடீரென செயலிழக்கும் அல்லது ஓபன் செய்ய முடியாது.


* வித்தியாசமான பாப்-அப் நோட்டிபிகேஷன்கள் வந்தபடி இருக்கும். செல்போன் திரையில் பாப்அப் மெசேஜ்கள் நிரம்பி வழியும். அதில், வரும் எந்த லிங்க்கையும் தொடாதீர்கள்.


* போட்டோ, வீடியோ கேலரியில் உங்களுக்கு சம்மந்தமில்லாத படங்கள் திடீரென சேமிக்கப்பட்டு இருக்கும். அது, ஏதோ தெரியாமல் நடந்திருக்கும் என அலட்சியமாக இருக்கக் கூடாது.


* நீங்கள் போனை பயன்படுத்தாத நேரத்திலும் திடீரென டார்ச் லைட் தானாகவே எரிய தொடங்கும்.


* அதிக நேரம் போனை பயன்படுத்தினால்தான் சூடாகும். ஆனால், நீங்கள் போனை எடுக்கும் போதே அது சூடாக இருந்தால், யாரோ ஹேக் செய்து இயக்குகிறார்கள் என அர்த்தம்.


* நீங்கள் செய்யாத போன் கால் அல்லது எஸ்எம்எஸ்.கள் உங்கள் லாக் அல்லது கால்ஸ் லிஸ்ட்டில் காணப்படும்.


- இதுபோன்ற அறிகுறிகள் உஷாராகி விடுங்கள். உடனே, உங்கள் செல்போனை ரீசெட் செய்திடுங்கள். அப்படி செய்தால், உங்கள் போனுக்குள் ஊடுருவிய கோல்மால் மென்பொருள்கள் அழிந்து விடும்.


தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்களின் ( DEO PA's) - அலைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் as on 07-07-2021)...

 


தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்களின் ( DEO PA's) - அலைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் as on 07-07-2021)...


>>> Click here to Download All DEO PAs Cell Phone Numbers...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் ( DEO's) - CUG - அலைபேசி எண்கள்...

 


தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் ( DEO's) - CUG - அலைபேசி எண்கள் (2018ஆம் ஆண்டு)...


>>> Click here to Download All DEOs CUG Cell Phone Numbers...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களின் ( BEO's) - CUG - அலைபேசி எண்கள்...


 தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களின் ( BEO's) - CUG - அலைபேசி எண்கள் (2018ஆம் ஆண்டு)...


>>> Click here to Download All BEOs CUG Cell Phone Numbers...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...