கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கேரளாவில் தமிழ் மொழியில் ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் – மாநில அரசு நடவடிக்கை...



 மொழி சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாளில் தமிழ் மற்றும் கன்னட மொழிகள் இடம் பெற கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள அரசின் இந்த செயல்பாடு பிற மாநிலங்களுக்கும் ஓர் முன்னுதாரணமாக திகழ்கிறது.


தமிழ்மொழி வினாத்தாள்:


கேரளாவில் மற்ற மொழிகள் பேசும் மாநிலத்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மலையாள மொழி தெரியாததால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மொழி சிறுபான்மையினர் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க திராவிட மொழிகளுக்கான சர்வதேச பள்ளியின் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த குழு மாநிலம் முழுவதும் மலையாள மொழி தெரியாத சிறும்பான்மையினர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தது. இவர்கள் அலுவலகங்கள், நிறுவனங்கள், கேரள அரசின் தேர்வுகள் போன்றவற்றை சந்திப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது என கருத்து தெரிவித்தனர்.


இதனால் அண்டை மாநிலத்தவர்களின் குறைகளை களையும் வகையில், மலையாளம் தெரியாத பிற மொழி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர்கள் மொழி தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அனைத்து அரசு தேர்வுகளும், அதற்கான அறிவிப்புகளும் தமிழ் மற்றும் கன்னட மொழியில் இருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள்களும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்ற பரிந்துரையை கேரள அரசுக்கு கோபாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்துள்ளது. அரசு இதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.


கேரள அரசின் இந்த நடவடிக்கை மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. தமிழ் மற்றும் கன்னட மாநில மக்கள் கேரள அரசுக்கு தனது நன்றியை தெரிவித்து வருகின்றனர். மற்ற மாநிலங்களிலும் இந்த முறை கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. கேரள அரசின் இந்த முயற்சியால் இனி வெளி மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மொழியால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தீரும் என அரசு தெரிவித்துள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns