கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அழகப்பா பல்கலைக்கழகம் ஆன்லைன் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு...



 காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைகழகத்தில் 2021-2022ம் கல்வியாண்டுக்கான முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் ஜூலை 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.



மாணவர் சேர்க்கை:

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு தயாராகி வருகின்றனர். கடந்த ஜூலை 19ம் தேதி 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழக முழுவதும் உள்ள தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பெறப்பட்டு விட்டது. தற்போது ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்க அரசு அறிவித்துள்ளது.


அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள பல்கலை மற்றும் கல்லூரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கை பணிகளும் தொடங்கப்பட்டு விட்டது. இந்த மாதம் இறுதி வரை முதுகலை மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2021-2022ம் கல்வியாண்டுக்கான முதுகலை மாணவர் சேர்க்கை குறித்து பல்கலையின் பதிவாளர் சி.சேகர் அவர்கள் அறிவித்துள்ளார். அதன்படி, இளங்கலையில் மாணவர்கள் அனைத்து செமஸ்டர்களிலும் பெற்ற 3ம் பகுதி மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.


முன்னதாகவே விண்ணப்பித்த மாணவர்கள் தற்போதும் விண்ணப்பிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் இணையத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு மதிப்பெண்களை உள்ளிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிக விவரங்களுக்கு admissions.alagappauniversity.ac.in/departmentsadmission  என்ற இணையதளத்தில் மற்றும், 04565-223111/113 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் - அரசாணை (நிலை) எண்: 125, நாள் : 21-05-2025 வெளியீடு

  G.O. (Ms) No. 125, Dated: 21-05-2025 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர...