கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி...



 தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.


அதன்படி வரும் 19-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து தற்போது ஜூலை 31-ஆம் தேதி வரை மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.


அதன்படி, தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் (ITI), தட்டச்சு-சுருக்கெழுத்து ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.


மேலும், பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம் பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TRUST Exam நவம்பர் 2025 - Hall Ticket Download செய்தல் தொடர்பாக DGE செய்திக்குறிப்பு

  TRUST Exam நவம்பர் 2025 - Hall Ticket Download செய்தல் தொடர்பாக DGE செய்திக்குறிப்பு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination...