இடுகைகள்

ஆசிரியர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்...

படம்
 மதுரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.   வரும் 1-ம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. மதுரையில் இதுவரை 14 ஆயிரத்து 896 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், மேலும் 2 ஆயிரத்து 33 ஆசிரியர்கள் தாமதமின்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.   உடல் நல சூழலால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்கள், அதற்குரிய மருத்துவ சான்றிதழுடன் பள்ளிக்கு செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் ஆசிரியர் கழக விதிமுறைகள் - Parent Teacher Association(PTA) Rules..

படம்
  >>> பெற்றோர் ஆசிரியர் கழக விதிமுறைகள் - Parent Teacher Association(PTA) Rules..

பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணிக்கு செல்வது - விவரம் தெரிவித்தல் - சார்பு... முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் - ந.க.எண்: 2907ஈ5/2020, நாள் : 20.07.2021...

படம்
ஆசிரியர்கள் பணிக்கு செல்வது - விவரம் தெரிவித்தல் - சார்பு...  >>> கோயம்புத்தூர் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் - ந.க.எண்: 2907ஈ5/2020, நாள் : 20.07.2021...

ஆசிரியர்கள் அனைவரும் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 2927/2021(ஆ2), நாள்: 19.07.2021...

படம்
  >>> ஆசிரியர்கள் அனைவரும் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 2927/2021(ஆ2), நாள்: 19.07.2021...

ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி...

படம்
 தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 19-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து தற்போது ஜூலை 31-ஆம் தேதி வரை மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் (ITI), தட்டச்சு-சுருக்கெழுத்து ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. மேலும், பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம் பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பண

ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை...

படம்
 கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆசிரியர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.  இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை :  அரசு , அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துரிதமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரத்தை அதற்குரிய ஆவணங்களுடன் கல்வி மேலாண்மை தகவல் முகமை ( எமிஸ் ) தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் , போடாதவர்கள் எண்ணிக்கையை மாவட்டவாரியாக அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகள் தொகுத்து அதன் விவர அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். அதில் முதல் மற்றும் 2 - ஆவது தவணை தடுப்பூசி விவரங்களை தனியாக குறிப்பிட வேண்டும். இது தொடர்பாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , முதல்வர்களுக்கு உரிய வழிகாட்டு தல்களை வழங்க வேண்டும் . அதனுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும்.

கொரோனா களப்பணிக்கு சுய விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றலாம் - வீட்டு வசதித்துறை அமைச்சர் பேட்டி...

படம்
 கொரோனா களப்பணிக்கு சுய விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றலாம் - வீட்டு வசதித்துறை அமைச்சர் பேட்டி...

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்களை ஆன்லைனில் பதிய வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு...

படம்
 அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்களை ஆன்லைனில் பதிய வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு...

ஆசிரியர் பணியே கடினமானது - ஆய்வில் தகவல்...

படம்
 பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்றும் மற்றவர்களை விட ஆசிரியர்களே அதிகம் உழைக்கிறார்கள் என்றும் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.  எதிர்காலத் தலைவர்களை /தலைமுறையினரை உருவாக்கும் ஒரு நாட்டின் மிகப்பெரிய பொறுப்பை ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கைவிட ஆசிரியர்களின் பங்கு அதிகமானது. சிறு வயதில் குழந்தைகளை செதுக்கி அவர்களின் திறனுக்கேற்ப வடிவமைக்கிறார்கள். ஒரு நாட்டில் கல்வி சிறந்ததாக இருந்தால் அந்நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற பொதுவான கருத்தும் உண்டு. அத்தகைய ஆசிரியர்களின் பணி குறித்து யு.சி.எல். பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஆக்ஸ்போர்டு ரிவியூ ஆஃப் எஜுகேஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.    இதில் பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்று ஆய்வுகள், கணக்கெடுப்புகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ல் 9 பங்கு உழைப்பினை கொடுக்க வேண்டியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக 54% என்ற அளவில் இருந்த உழைப்பு தற்போது 94% ஆக அதிகரித்துள்ளது. ஆசிரியர்களை அடுத்து சு

ஆசிரியர்களுக்கு நியாயவிலை கடைகளில் பணி - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Teachers List...

படம்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலை கடைகளில் கொரானா வைரஸ் நிவாரண தொகை ரூபாய் 2000 முதல் தவணையாக 15.05.2021 முதல் வழங்கப்பட உள்ளது நியாயவிலை கடைகளில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தி வரும் குடும்ப அட்டைதாரர்கள் சமூக விதிகளை கடைபிடித்து பொருட்களை பெற்று செல்வதை   சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் செயல்படவும் இதுதொடர்பாக கண்காணிப்பு குழுவின் தலைவருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித புகார்களும் இடமளிக்காத வகையில் எவ்வித தொய்வும் இன்றி குரானா வைரஸ் நிவாரணத்தொகை வழங்கப்படுவது செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு பார்வையில் உள்ளபடி தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து நியாயவிலை கடைகளில் 15.05.2021 முதல் பணியாற்ற நியமித்து உத்தரவிடப்படுகிறது   அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி கோரானா பெருந் தொற்று இரண்டாவது அலை தொடங்கியுள்ள இச்சூழலில் பொதுமக்களுக்கு நிவாரண தொகையான ரூ 4000 அறிவிக்க

ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி - மற்ற மாவட்டங்களிலும், பல்வேறு வகையான கொரோனா தடுப்பு பணிகளில், ஆசிரியர்களை பணியமர்த்த, நடவடிக்கைகள் துவக்கம்...

படம்
 பள்ளி பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுமுறை கேட்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் உத்தரவை, துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரிப்பால், பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால், தங்களுக்கு விடுமுறை அளிக்கும்படி, அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்பட உள்ளதாக, இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதுபற்றி, தமிழக தலைமை செயலர், சுகாதார செயலர், பள்ளி கல்வி செயலர் ஆகியோர் ஆலோசனை நடத்தி, பள்ளி பணியில்லாமல் விடுமுறை கேட்கும் ஆசிரியர்களுக்கு, கொரோனா தடுப்பு பணி வழங்க அனுமதித்தனர். இதன்படி, முதல் கட்டமாக, துாத்துக்குடி மாவட்டத்தில், 24 ஆசிரியர்களுக்கு கொரானா தடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. அந்த மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவில், '24 ஆசிரியர்கள், துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா தடுப்புக்கான, 24 மணி நேர கட்ட

தமிழகத்தில் கடந்த ஒரு வருடமாக முறையான சம்பளமின்றி தவிக்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் - வாழ்வாதாரம் இழந்த 10 லட்சம் குடும்பங்கள்...

படம்
 

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2000 ,25 கிலோ அரிசி தெலுங்கானா அரசு அறிவிப்பு...

படம்
 

பள்ளியில் அதிக மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக கற்பித்தல் பணி செய்ய ஆசிரியப் பெருமக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்...

படம்
1.காலை எழுந்தவுடன் மூச்சு பயிற்சி முக்கியமாக ஆசிரியர்கள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நலம். 2.காலையில் பள்ளிக்கு செல்லும்முன் கடைசி அரைமணி நேரம் ஒய்வு எடுத்துவிட்டு மனது சந்தோசமாக வைத்துக்கொண்டு இறைவனை வணங்கிவிட்டு  பள்ளிக்கு செல்ல வேண்டும். 3.வகுப்பில் ஒவ்வொரு பாட வேளையின் கடைசி ஐந்து நிமிடம் மாணவர்களுக்கு நடத்தியது தொடர்பான கற்றல் பணி தந்துவிட்டு நாம் பேசாமல் குரலுக்கு ஓய்வு தர வேண்டும். 4.வகுப்பறையில் மிகவும் சத்தமாக பேசக்கூடாது. சரியான சத்தத்துடன் மட்டுமே பேச வேண்டும்.நமது கண்பார்வை வகுப்பு முழுவதும் இருக்க வேண்டும். 5.மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் மைக் மூலம் வகுப்பு எடுத்தால் நமது வாழ்நாள் நீடிக்கும்.கரும்பலகையில் எழுதும்போது சுண்ணக்கட்டி உடம்பிற்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 6.ஒவ்வொரு பாடவேளை முடியும்போது குரல்வலை வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு பாடவேளை முடியும்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும். 7.பள்ளிக்கு செல்லும்போது முகம் மலர்ந்து சந்தோசமாக செல்ல வேண்டும். 8.பள்ளி செயல்பாடு எதுவாக இருந்தாலும் வீட்டிலும்,வீட்டின் செயல்பாடு எத

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் மாநிலம் முழுமைக்கும் ஒரே நிறுவனம் தரமற்ற பொருட்களை வழங்கி பெரும் நிதி முறைகேடு –நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை...

படம்

பிற தொழில்களைவிட ஆசிரியர் பணியே கடினமானது - ஆய்வு முடிவு...

படம்
பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்றும் மற்றவர்களை விட ஆசிரியர்களே அதிகம் உழைக்கிறார்கள் என்றும் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.  எதிர்காலத் தலைவர்களை/தலைமுறையினரை உருவாக்கும் ஒரு நாட்டின் மிகப்பெரிய பொறுப்பை ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கைவிட ஆசிரியர்களின் பங்கு அதிகமானது. சிறு வயதில் குழந்தைகளை செதுக்கி அவர்களின் திறனுக்கேற்ப வடிவமைக்கிறார்கள். ஒரு நாட்டில் கல்வி சிறந்ததாக இருந்தால் அந்நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற பொதுவான கருத்தும் உண்டு. அத்தகைய ஆசிரியர்களின் பணி குறித்து யு.சி.எல். பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஆக்ஸ்போர்டு ரிவியூ ஆஃப் எஜுகேஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்று ஆய்வுகள், கணக்கெடுப்புகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ல் 9 பங்கு உழைப்பினை கொடுக்க வேண்டியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக 54% என்ற அளவில் இருந்த உழைப்பு தற்போது 94% ஆக அதிகரித்துள்ளது. ஆசிரியர்களை அடுத்து சுகாதா

ஆசிரியர் காலிப்பணியிட தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன்...

படம்
 தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்தும் சில அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டு உள்ளார். அமைச்சர் அறிவிப்பு: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்தலாம் என்பது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் முதல்வர் கூறி இருந்தார்.  ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அட்டவணை அறிவிப்பு வெளியாகும் என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மேலும் பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாக மாற்றப்படும் என்பதா

பள்ளிகள் திறப்பு - மாணவர் சேர்க்கை - தேவையின் அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்கள் (நாளிதழ் செய்தி)...

 கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள் ஜனவரியில் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையில், கொரோனா ஊரடங்கால், தொழில்கள் நலிவுற்று, வருமானம் குறைந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் இருந்து மாற்றி, அரசு பள்ளிகளில் சேர்த்தனர். இதனால், அரசு பள்ளிகளில், இந்தாண்டு ஐந்து லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில், தேவையின் அடிப்படையில், ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது. இதற்காக, தமிழகம் முழுதும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சேகரிக்க, இணை இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, இதுகுறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. காலியிடங்களின் பட்டியல் வந்ததும், உபரியாக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் இருந்து, தேவைப்படும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் / ஆசிரியர்கள் - துறைத் தேர்வுகள் - எழுதத் தேவையான புத்தகங்கள்...

 தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் / ஆசிரியர்கள் - துறைத் தேர்வுகள் - எழுதத் தேவையான புத்தகங்கள்...  Tamilnadu Government Officers / Teachers - Department Examinations - Books to Download... List of Books Constitution Of India Fundamental Rules of Tamilnadu Tamil Nadu State and Subordinate Rules Travelling Allowance Rules-2005   ( Annexure I ) Tamil Nadu Budget Manual - Volume I (Pages  1-96 ,   97-218 ) Tamil Nadu Pension Rules, 1978 (Pages  1-80 ,   81-150 ,  151-270 ,  271-340  ) Tamil Nadu Treasury Code - Volume I (Pages  1-76 ,   77-150 ,  151-220 ,  221-296 ,  297-380 ,  381-423  ) Tamil Nadu Treasury Code - Volume II (Pages  1-102 ,   103-300 ,  301-357   ) Tamil Nadu Account Code- Volume I (Pages  1-88 ,   89-152 ) Tamil Nadu Account Code- Volume II (Pages  1-86 ,   87-175 ) Tamil Nadu Account Code- Volume III (Pages  1-88 ,   89-188 ,  189-288 ,  289-388 ,  389-511 ) Tamil Nadu Financial Code - Volume I (Pages  1-100 ,   101-190 ,  191-290 ,  291-400 ,  401-520 ,  521-641  ) Tamil

ஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு - தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை பெற தகுதிகள் சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

 ஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு - தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை பெற தகுதிகள் சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க எண்: 55001/ ஐஇ2/ 2020, நாள்: 30-11-2020... >>> பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> தேசிய ஆசிரியர் நலநிதி நிறுவனம் - கல்வி உதவித்தொகை - விண்ணப்பப் படிவம்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...