கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு (Lockdown extended with Relaxations) - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (செய்தி வெளியீடு எண்: 457, நாள்: 16-07-2021)...

 


தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


 திரையங்குகள், மதுக்கூடங்கள் திறக்கத் தடை தொடரும். 


பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை...


புதுச்சேரி தவிர்த்து இதர மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்குத் தொடர்ந்து தடை.


மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களைத் தவிர்த்து இதர சர்வதேச விமான போக்குவரத்திற்குத் தடை.


திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல் சமூக கூட்டங்களுக்குத் தொடர்ந்து தடை.


பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்குத் தொடர்ந்து தடை நீட்டிப்பு.


திருமணங்களில் 50 நபர்களும், இறுதிச் சடங்குகளில் 20 நபர்களும் மட்டுமே அனுமதி.


பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, பாடப்புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப்பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.


தட்டச்சு - சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன், சுழற்சி முறையில் செயல்பட அனுமதி.


>>> செய்தி வெளியீடு எண்: 457, நாள்: 16-07-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aadhaar Correction - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்

ஆதார் திருத்தம் - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள் Aadhaar Correction - Required Documents, Terms and Limitations UIDAI (Uniq...