கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாததால் அரசு பள்ளிகளில் TC இன்றி மாணவர் சேர்க்கை அதிகரிப்பு...



மாற்றுச் சான்றிதழ் இன்றி மாணவர்களை சேர்க்க, அரசு அனுமதித்து உள்ளதால், தனியார்பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்வது அதிகரித்துள்ளது.


அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, கடந்த கல்வி ஆண்டுக்கான கட்டணப் பாக்கியை வசூலித்து, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர்களை தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொண்டு உள்ளன.இதில், கடந்த ஆண்டு கட்டணம் செலுத்தாமல், பாக்கி உள்ளவர்களில் பலர், கட்டணத்தை செலுத்துவதற்கு பதில், வேறு பள்ளிகளுக்கு மாறி வருகின்றனர்.


பல மாவட்டங்களில், தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர், அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். 'கட்டணப் பாக்கி செலுத்தினால் மட்டுமே, மாற்றுச் சான்றிதழ்களை வழங்குவோம்' என, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கெடுபிடி காட்டுவதால், மாற்றுச் சான்றிதழ் வாங்காமலேயே, மாணவர்கள் பிற பள்ளிகளுக்கு மாறுகின்றனர்.


தமிழக அரசின் சார்பில், 2010ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளில் சேர்வதற்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என, கூறப்பட்டுள்ளது. இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை பயன்படுத்தி, தற்போது மாற்று சான்றிதழ் இன்றி, அரசு பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


இதனால், பல ஆயிரம் கட்டணப் பாக்கியில் இருந்து, பெற்றோர் தப்பித்துள்ளனர். அதேநேரம், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளோ, மாணவர்களிடம் கட்டணம் பெற முடியாமல், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 2 Expected Cut Off 2025

  TNPSC Group 2 / 2A Expected Cut Off 2025 : Know Category Wise Qualifying Marks for Preliminary Exam