கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வுக்கு பின் புதிய ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி(New teachers will be appointed after teachers transfer counselling - School Education Minister )...

 ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வுக்கு பின் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.


இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவர் மேலும் கூறியது : 


தமிழக முதல்வர் அறிவித்தபடி செப்டம்பர் 1இல் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளதால் அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


 தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதற்காக ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு , முதல்வர் அறிவுரைப்படி காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படும்.


 இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுவதில் கவனமுடன் செயல்பட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...