கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகளுக்கு வர மாணவர்களை கட்டாயப்படுத்தவில்லை – உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு அரசு பதில்...


 தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என கட்டாயம் இல்லை என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகளை தொடர உத்தரவிடக்கோரி அப்துல் வகாப் என்பவர் தொடர்ந்த வழங்கி விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் விளக்கமளித்துள்ளார்.




தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. முதலாவதாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படும்.


இதுவரை இருந்தது போல் அல்லாமல் பள்ளிக்கூடங்களில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பள்ளிக்கூடங்கள் ஷிப்டு முறையில் செயல்பட வேண்டும். வகுப்பறையில் பாதி அளவு மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.


சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மாணவர்களுக்கு தினமும் உடல் வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும். பள்ளிக்கூடத்தில் இருந்து மாணவர்கள் வீடு திரும்பியதுமே அவர்களுடைய ஆடைகளை துவைக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தொடக்கம் முதலே பாடம் நடத்தப்படாது; மாணவர்கள் உளவியல்ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும்



பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்


மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தப் படமாட்டார்கள் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்.


பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் - தமிழக அரசு.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Google Meet for the month of November - Student Learning Survey Project - District Wise School Wise Teacher & Student Name List

 November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் - மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக ஆசிரியர்கள் & மாணவர்கள் பெயர் பட்டியல் Go...