கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாலை 3:30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு...





 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு - மாலை 3:30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது..


 மாணவர்கள் மாஸ்க் போடாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலோ பள்ளியில் மாஸ்க் தர ஏற்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி...


மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும். 

* ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும். 

* 2 ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும். 

*விளையாட்டு நேரம் கிடையாது காலை 9.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை , வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் தொடக்கம் முதலே பாடம் நடத்தப்படாது. 

*மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும் 

* பெற்றோர்கள் , மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை ; மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்.

பள்ளி செல்லும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.


* ஒரு முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். கூடுதல் முகக்கவசத்தை தேவைக்காக பைக்குள் வைத்து இருக்க வேண்டும்.


* முகக்கவசம் அணிவதுடன் கண்ணாடி கவசத்தையும் அணிந்து இருக்க வேண்டும். சாப்பிடும்போது மட்டுமே அவற்றை அகற்ற வேண்டும்.


* கைக்குட்டை அல்லது துடைக்கும் தாள் போன்றவற்றை வைத்து இருக்க வேண்டும்.


* சிறிய சானிடைசர் பாட்டில் ஒன்றையும் எடுத்து வர வேண்டும்.


* தண்ணீர் பாட்டில், நொறுக்கு தீனிகள் போன்றவற்றை சொந்தமாக எடுத்து வர வேண்டும். மற்றவர்களுடன் பகிரக்கூடாது.


* பயன்படுத்திய முகக்கவசத்தை போடுவதற்கு தேவைப்பட்டால் தனி பை எடுத்து வரவேண்டும்.


* மாணவிகள் அதிகளவில் தலைமுடி வளர்த்து இருந்தால் அவை முகத்தில் படாதவாறு கட்டி இருக்க வேண்டும்.


முகத்தை தொடக்கூடாது


* பள்ளிகளில் இருக்கும்போது அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.


* ஒன்றாக அமர்ந்து எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. ஒன்றாக சேர்ந்து விளையாடக்கூடாது.


* எந்த பொருட்களையும் பங்கிட்டுக் கொள்ளக்கூடாது.


*நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கு தொடங்கும் வகுப்புகளை மதியம் 3.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.


40-45 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி மட்டுமே வழங்கப்படும். வகுப்பறையில் மேஜையின் ஒருமுனையில் ஒரு மாணவரும், மறுமுனையில் மற்றொரு மாணவரும் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும்; 


ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும்


ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும். விளையாட்டு நேரம் கிடையாது


காலை 9.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns