கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய வாகனத்தை அழித்ததற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள், புதிய வாகனம் வாங்கும் போது பதிவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை : பிரதமர் மோடி...



 பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை செயல்படுத்தப்பட்டு இருப்பது நாட்டின் வளர்ச்சி பாதையில் ஒரு புதிய மைல் கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது தேசிய வாகன அழிப்பு கொள்கையை தொடங்கி வைத்த பிரதமர், இந்தக் கொள்கை வாகனத்துறைக்கும், புதிய இந்தியாவின் போக்குவரத்துக்கும் ஒரு புதிய அடையாளத்தை வழங்கப்போகிறது என்றார். மேலும் அவர் பேசியதாவது, தகுதியற்ற வாகனங்களை அறிவியல் ரீதியில் சாலைகளில் இருந்து அகற்றி, நாட்டின் வாகன எண்ணிக்கையை நவீனமயமாக்க இந்தக் கொள்கை மிகப்பெரிய பங்கு வகிக்கும்.


வாகன இயக்க நவீனமயமாக்கல் பயணம் மற்றும் போக்குவரத்து சுமையைக் குறைப்பதுடன் மட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவு உதவிகரமாக இருக்கும். நாட்டின் நகரங்களில் மாசைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, வளர்ச்சியை விரைவுபடுத்தும் நமது உறுதிப்பாட்டை இந்தக் கொள்கை பிரதிபலிக்கிறது. இந்தக்கொள்கை ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீட்டை ஈர்ப்பதுடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். 75வது சுதந்திர தினத்தை எட்டவுள்ள இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவையாகும், என்று கூறினார்.


இந்தக்கொள்கையின் ஒவ்வொரு வழியிலும் பொதுமக்கள் பெரும் பயனடைவார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பழைய வாகனத்தை அழிக்கும் போது ஒரு சான்றிதழ் வழங்கப்படுவது முதலாவது பயனாகும். இந்தச் சான்றிதழை வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் புதிய வாகனம் வாங்கும் போது, பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. இத்துடன், சாலை வரியில் அவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். இரண்டாவது பயன், பராமரிப்பு செலவு, பழுதுபார்ப்பதற்கான செலவு, பழைய வாகனத்தில் எரிபொருள் திறன் ஆகியவை இதன் மூலம் மிச்சமாகும். மூன்றாவது பயன் ஆயுளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. பழைய வாகனங்கள் மற்றும் பழைய தொழில்நுட்பங்களால் ஏற்படும் பெருத்த அபாயத்திலிருந்து விடுதலை. நான்காவதாக, நமது பூமியை மாசுபடுத்துவது குறையும், என்றார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns