கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Departmental Examinations-2021 : Revised Hall Ticket Published (Link Available)...

 


ஒரே நாளில் நடக்கும் இரண்டு தேர்வுகளுக்கு வெவ்வேறு மையங்கள் ஒதுக்கப்பட்டதை மாற்றுவது குறித்த கோரிக்கைகள் TNPSCக்கு தெரிவிக்கப்பட்டது. 


அதன்பேரில் இன்று (14.08.2021) மாலை புதிய மையங்கள் ஒதுக்கப்படும் என தெரிவித்திருந்ததது TNPSC. 


 புதிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள Revised Hall ticket வெளியிடப்பட்டுள்ளது.


மீண்டும் துறைத் தேர்வு எழுதக்கூடிய தேர்வர்கள் தங்களுடைய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து உங்களுடைய தேர்வு மையத்தை உறுதி செய்து கொள்ளவும்.


இந்த இணைப்பினை தொட்டு உங்களுடைய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


>>> Click Here...



அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளில் வெவ்வேறு தேர்வு மையங்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், குழப்பத்துக்கு தீர்வு வழங்கி உள்ளது TNPSC.


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான தேர்வு வரும் 16-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை டி.என்.பி.சி மூலமாக நடைபெற இருக்கிறது. ஆன்லைன் மூலமாக தேர்வு எழுத விண்ணப்பிக்கப்பட்டு வந்த நிலையில், தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் (நுழைவு சீட்டு) நேற்று வெளியிடப்பட்டது.


ஆனால், தேர்வு எழுதுபவர்களுக்கு பெரும் குழப்பமே ஏற்பட்டது.


அதாவது, தேர்வும் எழுதும் ஒரு சிலருக்கு காலையில் ஒரு தேர்வு மையமும், மாலையில் மற்றொரு தேர்வு மையமும் ஹால்டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இருவேறு தேர்வு மையத்துக்கு 70 முதல் 100 கிலோ மீட்டர் வரை தொலைவு இருப்பதாக தகவல் கூறப்பட்ட நிலையில், குழப்பம் எழுந்தது.


இந்த நிலையில், அரசு துறை பதவி உயர்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. சில நிர்வாக காரணங்களால் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஹால்டிக்கெட் சில திருத்தங்களுடன் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.


எனவே, திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை http://tnpsc.gov.in & https://apply.tnpscexams.in/dept-exam-otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம். தேர்வர்கள் ஒருமுறை பதிவின் வழியாக பிறந்த தேதி,விண்ணப்ப எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns