மெட்ரிக் பள்ளிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் எச்சரித்துள்ளார்.
தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பல பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூடியிருப்பதை பார்க்க முடிகிறது. 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கவும், ஒன்பதாம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல் பெறவும், பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்.
இதனால், ஒரே நேரத்தில் அதிக கூட்டம் உள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றாமல், பல பள்ளிகளில் மாணவர்கள் திரளாக நிற்பது தெரியவந்துள்ளது.எனவே, பள்ளிகளில் கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.