கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான(Schools Opening) வழிகாட்டு நெறிமுறை(Standard Operating Procedures) விரைவில் வெளியீடு...



 தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு 50 சதவீத மாணவர்களுடன் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளைத் திறக்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். இன்னும் 2 நாட்களில் இது முடிவு செய்யப்பட்டுவிடும்.


தனியார் பள்ளிகளில் 85 சதவீதம் கல்விக் கட்டணம் வசூலிக்கலாம். கரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் 75 சதவீதம்தான் வசூலிக்க வேண்டும். அதையும் செலுத்த முடியாதவர்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்க பரிசீலிக்கலாம் என உயர் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி பாடத்திட்டங்களை குறைப்பதற்கான வரைவு தயாராகிஉள்ளது என்றார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns