கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநில நல்லாசிரியர் விருதுக்கு(Dr.Radhakrishnan Award ) 385 ஆசிரியர்கள் தேர்வு - விருது பெறுவோர் பட்டியல் இன்று வெளியாகும்...

 மாநில நல்லாசிரியர் விருதுக்கு 385 ஆசிரியர்கள் தேர்வு - விருது பெறுவோர் பட்டியல் இன்று வெளியாகும்...


தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் ( 2021-2022 ) மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ள 385 ஆசிரியர்களின் பட்டியல் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப் .5 - ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஆசிரியர் தினவிழாவாக கொண்டாடப்பட்டு அந்த விழாவில் தொடக்க , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான ' டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.10 ஆயிரம் , வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.



அந்த வகையில் நிகழ் கல்வியாண்டுக்கான சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்ய மாவட்ட , மாநில அளவிலான குழுக்களை பள்ளிக் கல்வித்துறை நியமித்தது.




இதையடுத்து தொடக்க , நடுநிலைப் பள்ளிகளில் 171 ஆசிரியர்கள் ; உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் 171 ஆசிரியர்கள் ; மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 37 பேர் , ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் ; சமூகப்பாதுகாப்புத் துறை பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் ; மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் இருவர் என மொத்தம் 385 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். இந்தப் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 




முதல்வர் வழங்குகிறார் : 


இவற்றில் 5 ஆசிரியர்களுக்கு மட்டும் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கவுள்ளார். எஞ்சிய ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் , மக்களவை , சட்டப்பேரவை உறுப்பினர்களால் ஓரிரு நாள்களில் விருதுகள் வழங்கப்படவுள்ளன . இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியது : இதுவரை இல்லாத அளவுக்கு நிகழாண்டு இளைய தலைமுறை ஆசிரியர்கள் அதிகளவில் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். புதுமையான கற்பித்தல் , கல்விக்கான செயலிகள் வடிவமைத்தல் , பள்ளிகளில் சுற்றுச் சூழலை மேம்படுத்துதல் , மாணவர் சேர்க்கையை உயர்த்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர் என அவர்கள் தெரிவித்தனர்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...