கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-11-2021 - திங்கள் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.11.21

  திருக்குறள் :


பால்:பொருட்பால். 


இயல்: அரசியல். 


அதிகாரம்: தெரிந்து செயல் வகை.


குறள் எண் : 462 


குறள்

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்

கரும்பொருள் யாதொன்று மில்.


பொருள்:

தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் நம்மால் செய்ய முடியாத செயல் இன்று எதுவும் இல்லை.


பழமொழி :

where there is anger, there will be excellent qualities.



 கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. தனக்கு இல்லாத குணத்தையும் இயல்பையும் தகுதியையும் , இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை இயற்கை. 


2. நானும் அதை போலவே இல்லாதவற்றை இருப்பது போல் காட்டி பெருமை கொள்ள மாட்டேன்


பொன்மொழி :


நம் கனவுகளை பின்தொடரும் தைரியம் நமக்கிருந்தால், அதை நனவாக்க நம்மால் முடியும் : -----வால்ட் டிஸ்னி



பொது அறிவு :


1. உலகின் 17 பல்கலைக்கழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார்? 


டாக்டர். இராதாகிருஷ்ணன். 


2. தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எது? 


ஆனை முடி.








English words & meanings :



Debt - Money owed to another person, கடன், 


Bonus - getting extra money as a reward. வெகுமதி.

ஆரோக்ய வாழ்வு :


பொன்னாங்கண்ணி கீரை



இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து,இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், , சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.


உடல் பொன்போல பளபளப்பாகும் என்பதால் இப்பெயர். கீரைகளின் ராணி என்று சொல்லத்தக்க கீரை பொன்னாங்கண்ணி. பலப் பல‌ மருத்துவக் குணங்களை கொண்டது.



பலன்கள்

கண்பார்வைக்கு மிகவும் நல்லது.

சருமத்துக்கு மிகவும் நல்லது.

மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது.

ரத்தத்தைச் சுத்தீகரிக்கும்

உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

வாய் துர்நாற்றத்தை நீக்கும்.

இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

கணினி யுகம் :


Shift + L - Add a simple line, 


Shift + O - Add orthogonal line

நீதிக்கதை


மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!


ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.


விரல்களால் மணல் இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்! என்று எழுதினான். மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான். 


நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன். உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான். அங்கு ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி, இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுத ஆரம்பித்தான்.


இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்... நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏன் இப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா? என்றான். அதற்கு நண்பன், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்! என்று பதில் கூறினார்.


இன்றைய செய்திகள்


01.11.21


◆சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கிராமப்புற மாணவர்கள் எளிதில் வெற்றிபெற வாய்ப்புக்கள் அதிகம் என முதல் முயற்சியிலேயே இந்திய வனப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்றதுடன், தமிழகத்திலேயே முதலிடம் பெற்ற பழநி அருகேயுள்ள கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த திவ்யா தெரிவித்துள்ளார்.


◆சிலம்பப் பயிற்சியாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், மாணவர்களுக்கு வேலையில் 3% ஒதுக்கீடு என மாநில சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


◆நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 100% முதல் தவணை தடுப்பூசி போட நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.


◆ஆதார் எண் போல ஒவ்வொரு முகவரிக்கும் தனித்தனியாக மின்னணு முகவரி குறியீடு வழங்க மத்திய அரசு திட்டம்: வர்த்தக நிறுவனங்கள் இணைய வழியில் முகவரியை சுலபமாக  உறுதிப்படுத்த முடியும்.


◆உலக நாடுகளுக்கு உதவுவதற்காக அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடி தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க இந்தியா தயாராக இருப்பதாக ‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.


◆ரஷ்யாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா பாதிப்பு.


◆ஆப்கானிஸ்தான் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் என்று தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


◆14 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீர் மாணவி தங்க பதக்கம் வென்றுள்ளார்.


◆சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சத்யன்-ஹர்மீத் தேசாய் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.



Today's Headlines


 * Divya from Kalikkanayakkanpatti village near Palani, who passed the Indian Forest Service exam in the first attempt and acquired first place in Tamil Nadu, said that "rural students have a better chance of success in the civil service exams" 


 .* 1 Rs 1 lakh cash for silambam coaches, 3% quota for students in government jobs, said the state environment-climate change department and youth welfare and sports development minister.


  * 100% first dose vaccination will be given to Tamil Nadu people by the end of November: Health Minister Ma Subramanian


  * Federal Government Scheme to provide separate electronic address code for each address like reference number: Businesses can easily verify the address online.


 * At the G-20 summit, Prime Minister Modi assured that India was ready to produce 500 crore vaccine doses by the end of next year to help the world.


 * There is an uncontrolled spread of corona in Russia.


* The Taliban have warned of consequences if the world does not recognize the Afghan regime.


 * Kashmir student wins gold at World Kickboxing Championships for Under-14s


*  India's Sathyan-Harmeet Desai pair clinch the title at the International Table Tennis Championships.


 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...