கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (01-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 01, 2021



உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். கூட்டுத்தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பும், ஆதரவும் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கனிவான பேச்சுக்களின் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். எண்ணியது நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :  6


அதிர்ஷ்ட  நிறம்  :  அடர் நீலம்



அஸ்வினி : கலகலப்பான நாள்.


பரணி : ஆதரவு கிடைக்கும்.


கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 01, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவும், அன்பும் மனதிற்கு புதுவிதமான நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  வடக்கு 


அதிர்ஷ்ட  எண்  :  7


அதிர்ஷ்ட  நிறம்  :  காவி நிறம்



கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.


ரோகிணி :  முன்னேற்றமான நாள்.


மிருகசீரிஷம் :  புரிதல் ஏற்படும்.

---------------------------------------






மிதுனம்

நவம்பர் 01, 2021



வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய மனை மற்றும் அதை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :  9


அதிர்ஷ்ட  நிறம்  :  கருஞ்சிவப்பு 



மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.


புனர்பூசம் :  சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





கடகம்

நவம்பர் 01, 2021



ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத தனவரவுகள் மேம்படும். செய்கின்ற முயற்சிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த கவலைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். முயற்சிகளால் முன்னேறும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  தெற்கு


அதிர்ஷ்ட  எண்  :  8


அதிர்ஷ்ட  நிறம்  :  சந்தன நிறம்



புனர்பூசம் :  இன்னல்கள் குறையும்.


பூசம் :  ஆதரவு கிடைக்கும்.


ஆயில்யம் :  ஈடுபாடு அதிகரிக்கும்.

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 01, 2021



வியாபாரம் சம்பந்தமான மாற்றங்களில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுப்பது நல்லது. உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார ரீதியான பொருளாதார நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வரவுகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட  எண்  :  7


அதிர்ஷ்ட  நிறம்  :  வெளிர் பச்சை 



மகம் :  ஆலோசனைகளை கேட்கவும்.


பூரம் :  நெருக்கடிகள் குறையும்.


உத்திரம் :  எண்ணங்கள் மேம்படும்.

---------------------------------------





கன்னி

நவம்பர் 01, 2021



பழைய நினைவுகளின் மூலம் மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். வெளியூர் தொடர்புகளின் மூலம் ஆதாயம் மேம்படும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சஞ்சலங்கள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :  1


அதிர்ஷ்ட  நிறம்  :  வெளிர் நீலம்



உத்திரம் : குழப்பமான நாள்.


அஸ்தம் :  பொறுமை வேண்டும்.


சித்திரை :  ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------





துலாம்

நவம்பர் 01, 2021



வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :  2


அதிர்ஷ்ட  நிறம்  :  வெளிர் மஞ்சள் 



சித்திரை : அபிவிருத்தி உண்டாகும்.


சுவாதி :  புதுமையான நாள்.


விசாகம் :  வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

நவம்பர் 01, 2021



தொழில் முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் உண்டாகும். கலைநயம் மற்றும் கவித்துவமான சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். புத்துணர்ச்சியான நாள். 



அதிர்ஷ்ட  திசை  :  வடகிழக்கு


அதிர்ஷ்ட  எண்  :  3


அதிர்ஷ்ட  நிறம்  :  இளம் மஞ்சள்



விசாகம் :  லாபம் உண்டாகும்.


அனுஷம் :  பிரச்சனைகள் குறையும்.


கேட்டை :  தேவைகள் நிறைவேறும்.

---------------------------------------







தனுசு

நவம்பர் 01, 2021



எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். கடன் தொடர்பாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட  எண்  :  9


அதிர்ஷ்ட  நிறம்  :  நீலநிறம்



மூலம் :  மாற்றமான நாள்.


பூராடம் :  அனுகூலம் உண்டாகும்.


உத்திராடம் : சிக்கல்கள் குறையும்.

---------------------------------------





மகரம்

நவம்பர் 01, 2021



நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தெய்வீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் லாபம் உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :  1


அதிர்ஷ்ட  நிறம்  :  பொன் நிறம்



உத்திராடம் :  வாய்ப்புகள் கிடைக்கும்.


திருவோணம் : தன்னம்பிக்கையான நாள்.


அவிட்டம் :  லாபம் உண்டாகும்.

---------------------------------------






கும்பம்

நவம்பர் 01, 2021



மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். வாழ்க்கைத்துணைவருடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :  6


அதிர்ஷ்ட  நிறம்  :  பச்சை நிறம்



அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.


சதயம் :  அனுசரித்து செல்லவும்.


பூரட்டாதி :  சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 01, 2021



சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். பழமையான விஷயங்களின் மீது ஈடுபாடு ஏற்படும். புதிய நபர்களின் நட்பு மற்றும் அறிமுகம் ஏற்படும். தாய்வழி உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். ஒத்துழைப்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  கிழக்கு


அதிர்ஷ்ட  எண்  :  1


அதிர்ஷ்ட  நிறம்  :  இளம் மஞ்சள்



பூரட்டாதி :  ஈடுபாடு அதிகரிக்கும்.


உத்திரட்டாதி :  அறிமுகம் கிடைக்கும்.


ரேவதி :  ஆதரவுகள் மேம்படும்.

---------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு...

மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...