கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் கண்டிப்பது மாணவனை தற்கொலைக்கு தூண்டுவதற்கு ஒப்பானது அல்ல - உச்சநீதிமன்றம்...



 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள புனித சேவியர் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த ஜியோ வர்க்கீஸ் என்ற ஆசிரியர், 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவனை கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இதனையடுத்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில், வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஆசிரியர் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கிற்கு எதிராக ஜியோ வர்க்கீஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பள்ளியின் நலன் கருதியும், மாணவனை திருத்தும் நோக்கிலும், ஒழுக்கம் தரும் வகையில் மாணவரை ஆசிரியர் கண்டித்துள்ளார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மேலும் , இதற்காக உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொண்டதற்காக ஆசிரியர் பொறுப்பாக முடியாது என்றும், ஆசிரியர் கண்டிப்பது மாணவனை தற்கொலைக்கு தூண்டுவதற்கு ஒப்பானது அல்ல என்றும் தெரிவித்த  உச்சநீதிமன்றம், வர்க்கீசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்தது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...