பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.11.21
திருக்குறள் :
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
பொருள்
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்
பழமொழி :
No one knows another's burden.
எருதின் நோய் காக்கைக்கு தெரியுமா?
இரண்டொழுக்க பண்புகள் :
1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன்.
2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.
பொன்மொழி :
பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு இணையானவன்.
- சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு :
1. மிகப்பெரிய தரைகடல் எது?
மத்தியத் தரைக்கடல்
2. தென்னிந்திய ஆறுகளில் மிக நீளமானது எது?
கோதாவரி
English words & meanings :
Tiny - very small, மிக சிறிய,
starving - very hungry, அதிக பசி
ஆரோக்ய வாழ்வு :
வேப்பம்பூ
இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும், அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக, மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.
சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து, காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும்.
கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன வெயிலால் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது.
கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.
குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `
அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.
கணினி யுகம் :
Alt + 0241 - ñ.
Alt + 0228 - ä
நவம்பர் 16
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.
உலக சகிப்புத் தன்மை நாள்
உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.
நீதிக்கதை
பிறந்தநாள் பரிசு
அன்று மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் கோலகாலமாக இருந்தது. மக்கள் தங்கள் பிறந்தநாள் போல, மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.
மறுநாள் சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.
பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தார். அவரை எல்லோரும் வியப்போடு பார்த்தனர்.
தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால், அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று எதிர்பார்த்ததால், அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.
தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தார். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.
அதனால் எல்லோரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தார். அதில் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்று இருந்தது.
அவையினர் கேலியாகச் சிரித்தனர். அரசர் கையமர்த்தி சிரிப்பை அடங்கியவுடன், தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவர் தரும் விளக்கம் பெரிதாக இருக்கும் என்றார். உடனே ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?
அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர்.
அவர் பழத்தின் சுவையைப் போல் இனிமையானவராகவும், அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்னும் புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்றார். அதற்காக தான் இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன் என்றார்.
அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்தநாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.
இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது, என உத்தரவிட்டார்.
அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றை எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.
இன்றைய செய்திகள்
16.11.21
★தமிழை ஆட்சி மொழியாகவும், திருக்குறளை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
★யுஜிசி நெட் தேர்வுக்கு பாடவாரியான தேர்வுகால அட்டவணை, ஹால் டிக்கெட்-களை தேசிய தேர்வுமுகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.
★பேரிடர் மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு என, சமச்சீரான இழப்பீடு வழங்க விதிகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
★நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி அவசியம்; தேவைப்பட்டால் பூஸ்டர் எடுக்கலாம்: ஐஎம்ஏ பரிந்துரை.
★டெல்லியை உலுக்கும் காற்று மாசு; அவசர கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
★கரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் என்பது மிகப்பெரிய ஊழல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
★உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மரியா சக்காரியை வீழ்த்தி ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
★முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி.
Today's Headlines
★ Chief Minister of Tamil Nadu MK Stalin has urged the Central Government to declare Tamil as the official language and Thirukurala as the national book.
★ The National Examinations Authority (NDA) has released the syllabus and hall tickets for the UGC NET examination.
★ The Chennai High Court has directed an order to the Tamil Nadu government to lay down rules to provide symmetrical compensation to those who were killed in disasters and road accidents.
★ Corona vaccine is essential for all diabetics; Booster can be taken if needed: IMA recommendation.
★ Air pollution shaking Delhi; The Supreme Court ordered the federal government to convene an emergency meeting.
★ The World Health Organization says the booster dose of the corona vaccine is the biggest scandal.
★ Spain's Bala Badosa advanced to the semifinals of the World Women's Tennis Championships after defeating Maria Zachary.
★ The Australian team won the T20 World Cup for the first time.
Prepared by
Covai women ICT_போதிமரம்