கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-11-2021 - புதன் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.11.21

  திருக்குறள் :


அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு. 


பொருள் 

பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.


பழமொழி :

A good beginning makes a good ending



நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்



இரண்டொழுக்க பண்புகள் :


1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன். 


2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.


பொன்மொழி :


குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்களை வரவேற்க கற்றுக்கொள். எந்த அளவு இதைச் செய்கிறாரோ, அந்த அளவுக்கு வேகமாக முன்னேறுவாய்.


- அரவிந்தர்


பொது அறிவு :


1. பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகம் எது?


கொற்கை




2. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?


ஞானபீட விருது


English words & meanings :


Effortless - very easy, அதிகம் உழைக்க தேவையில்லாத மிக எளிய, 


gigantic - very big, மிகவும் பெரிய


ஆரோக்ய வாழ்வு :


சீரகம் ஒரு மருத்துவ மூலிகை


சீரகம்=சீர்+அகம்..!


அகத்தைச் சீர்செய்யும் சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது.




சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.


திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.


மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.


சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப்பொருமல் போய்விடும்.


ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.


சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.


சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது.


செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.


உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.


திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.


சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.


கணினி யுகம் :


Alt + 0246 - ö. 


Alt + 0252 - ü


நவம்பர் 17


லாலா லஜபதி ராய் அவர்களின் நினைவுநாள்  


லாலா லஜபதி ராய் (1865 ஆம் ஆண்டு சனவரி 28)  ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.


நீதிக்கதை


பொய்


மேட்டுக்குப்பம் என்ற ஊரில் சுதன் என்பவனும், அவன் மனைவியும் பிறரை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள். தினந்தோறும் பத்துப் பேருக்கு அன்னதானம் அளிக்கிறேன் என்று பொய் சொல்லி காசுகளை வாங்குவான் சுதன். 


ஆனால், அவன் யாருக்கும் ஒரு பிடி சோறு கூட போட மாட்டான். அன்னதானம் வாங்குவதற்கு யாராவது வந்தால், அவர்களிடம் ஐயா! இப்பத்தான் பத்துப் பேர் வயிறார சாப்பிட்டுச் சென்றனர். நாளை வாருங்கள் வயிறார சாப்பிடலாம், என்று இனிமையாகப் பேசி அனுப்பிவிடுவான். 


பக்கத்து ஊரில் மகேன் என்பவன் இருந்தான். இவன் யாரையும் ஏமாற்றி விடுவான். சுதனைப் பற்றி கேள்விப்பட்டான் மகேன். சுதன் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்று மகேன் சுதன் வீட்டிற்கு சென்றான். ஐயா! உங்கள் அன்னதானத்தைப் பற்றி கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன், என்றான். 


ஆமாம், உண்மைதான். தினந்தோறும் பத்து பேருக்கு தலை வாழை இலையில் பதினாறு வகைக் கறிகளுடன் விருந்து பரிமாறுகிறேன். சற்று முன்தான் அவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட்டுச் சென்றனர். ஆனால், உங்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை, நாளை வாருங்கள் என்று சொல்லி வீட்டுக்குள் சென்ற சுதனிடம், யார் வந்தது? என்று மனைவி கேட்டாள். 


நம்மிடம் ஏமாற வெளியூரில் இருந்து வந்திருக்கிறான். நாளை வா! என்று சொல்லி விட்டேன். அவன் எத்தனை நாள் வந்தாலும் இதே பதில்தான், என்று சொல்லிச் சிரித்தான் சுதன். 


மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே சுதன் வீட்டுக் கதவை தட்டினான் மகேன். தூக்கக்கலக்கத்துடன் எழுந்த சுதன், கதவை திறந்தான். ஐயா! இன்று உங்கள் வீட்டு விருந்திற்கு முதல் ஆளாக வந்துள்ளேன். விருந்து தயாரானதும் எழுப்புங்கள், என்று சொல்லி அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான் மகேன். 


உள்ளே வந்த சுதன், மனைவியிடம், நேற்று வந்த வெளியூர்காரன் இன்று விடிகாலையிலேயே வந்து நம் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான். விருந்து சாப்பிடாமல் போக மாட்டான் போல இருக்கிறது, என்று கவலையுடன் சொன்னான். 


கவலை வேண்டாம், அவனிடம் என் மனைவிக்குக் காய்ச்சல். நாளை வா, என்று சொல்லி அனுப்பி வையுங்கள், என்றாள் அவள். மனைவி சொல்படி, பொழுது விடிந்ததும் மகேனிடம் சோகமான முகத்துடன் வந்த சுதன், என் மனைவிக்குக் காய்ச்சல் படுத்தப்படுக்கையாகக் கிடக்கிறாள். இந்த நிலையில் அவளால் சமைக்க முடியாது. நாளை வாருங்கள் கண்டிப்பாக விருந்து சாப்பிட்டுச் செல்லலாம், என்றான். 


மனைவிக்குக் காய்ச்சல் என்பதற்காக அன்னதானத்தை யாராவது நிறுத்துவார்களா? பதினாறு வகைக் கறிகளோடு, வடை, பாயசம் நான் செய்கிறேன், என்று சொல்லி சமையல் அறைக்குச் சென்று, சமைக்கத் தொடங்கினான். இதை எதிர்பாராத சுதனும், அவன் மனைவியும் திகைத்தனர். 


சிறிது நேரம் சென்றது. சுதனுக்கும், மனைவிக்கும் ஒரு யோசனை வந்தது அதன்படி, மகேன் சமையலை முடித்தான். அடுப்படியில் இருந்ததால் புகை படிந்து இருக்கிறீர். ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வாரும். வரும் போது வாழை இலைகளை அரிந்து எடுத்து வாரும், என்றான் சுதன். 


அவனும் ஆற்றிற்கு சென்று நீராடிவிட்டு, வாழை இலைகளுடன் வந்தான். அவன் வருவதை இருவரும் பார்த்தனர். உரத்த குரலில் அவள், வந்தவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட நாம் சத்திரமா நடத்துகிறோம். யாருக்கும் இங்கே சாப்பாடு கிடையாது என்று கோபத்துடன் கத்தினாள். நான் யாருக்குச் சாப்பாடு போடச் சொன்னாலும் நீ போட வேண்டும். எதிர்த்துப் பேசினால் தொலைத்து விடுவேன், என்று கத்தினான் சுதன். 


இப்படியே அவர்கள் இருவரும் சண்டை போட்டபடியே பார்த்தனர். இலைகளுடன் நின்றிருந்த மகேன் அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து சண்டை போட்டனர். சற்று நேரத்தில் அங்கே அவனைக் காணவில்லை. இவர்கள் சண்டையை நிறுத்திவிட்டு, அந்த ஏமாளி நன்றாக சமைத்து வைத்திருக்கிறான். எனக்குப் பசியாக உள்ளது நாம் சாப்பிடுவோம், என்றாள் சுதனின் மனைவி. 


இருவரும் சாப்பிட அமர்ந்தனர். பரண் மேல் ஒளிந்து இருந்த மகேன், அவர்கள் முன் குதித்தான். தங்களது திறமை அவனிடம் செல்லாது என்பதை இருவரும் அறிந்து, அவனுக்கு விருந்து போட்டு அனுப்பி வைத்தனர். 


நீதி :

ஏமாற்றுபவர்கள் ஒருநாள் ஏமாறுவார்கள்.


இன்றைய செய்திகள்


17.11.21


◆தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 4,000 கரோனா தடுப்பு உபகரணங்களை டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர், கொரிய தூதர் ஆகியோர் இணைந்து வழங்கினர். இவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் வழங்கப்பட்டன.



◆பணிக் காலத்தின்போது உயிரிழக்கும் பத்திரிகையாளர் குடும்ப நலநிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


◆விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


◆தமிழகத்தில் உள்ள அனைத்து வகைக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


◆கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வர, 20 மாதங்களுக்குப் பிறகு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 


◆நேபாளத்தில் நடைபெறும் கால்பந்து போட்டிக்கு விழுப்புரத்தைச் சேர்ந்த கால்பந்து அணியினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


◆இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷயா சென் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.



Today's Headlines


 🌸The President of TVS and the Korean Ambassador jointly distributed 4,000 corona prevention equipment to Tamil Nadu Government School students.  These were presented to the Minister of School Education Mr.Anbil Magesh Poiyamozhi.



 🌸The government has increased the family welfare of a journalist who dies during his working hours to Rs. 5 lakhs.


🌸 The Tamil Nadu government has canceled the announcement of setting up a petrochemical zone in the Nagapattinam district followed by the protests of farmers.  Delta farmers are happy with this.


 🌸The Department of Higher Education has stated that the semester examinations will be held only directly in all types of colleges in Tamil Nadu.


 🌸 As the corona spread is in control, the Central Government has given permission to foreign tourists to come to India after 20 months.


 🌸Villupuram football team has been selected for the football tournament to be held in Nepal.


 🌸PV Sindhu and Lakshaya Sen qualified for the second round of the Indonesian Masters Badminton Series

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Google Meet for the month of November - Student Learning Survey Project - District Wise School Wise Teacher & Student Name List

 November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் - மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக ஆசிரியர்கள் & மாணவர்கள் பெயர் பட்டியல் Go...