கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-11-2021 - வியாழன் - (School Morning Prayer Activities)...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.11.21

திருக்குறள் :


கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின். 


பொருள் 


தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்


பழமொழி :

Hard work can accomplish any task.

 எறும்பு ஊற கல்லும் தேயும்.




இரண்டொழுக்க பண்புகள் :


1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும். 


2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்


பொன்மொழி :

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால் ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.


பொது அறிவு :


1. உலகின் மிகப் பெரிய மலர் இனம் எது? 


ரப்லேசியா அர்னால்டி. 


2. இந்திய அறிவியற் கழகம் அமைந்துள்ள நகரம் எது? 


பெங்களூர்.


English words & meanings :


Give it a shot - try it, முயற்சி செய்து பாருங்கள், 


in rain or shine - no matter what - என்ன நடந்தாலும்


ஆரோக்ய வாழ்வு :


விட்டமின் B - வலுவான நரம்புகள், ஆரோக்கிய இரத்த ஓட்டம். காணப்படும் உணவுப் பொருட்கள் - ஈரல், வாழைப்பழம், முருங்கை கீரை, உலர் பருப்பு, பேரீச்சம் பழம், தானியங்கள் ஆகியவற்றில் காணப்படும்


கணினி யுகம் :


Windows Logo+D (Display the desktop)


Windows Logo+M (Minimize all of the windows)


நவம்பர் 25


பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவுநாள்  


பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz,  ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.[2]


அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.




பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்


பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.


உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.


ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


நீதிக்கதை


கடவுளின் சிறப்பு:


கதை :

ராகவன் ஒரு பட்டதாரி. பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற அறிவாளி. ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் செல்கையில், அவன் பயணம் செய்த பேருந்து பழுதாகி ஒரு கிராமத்துக்கு அருகே நின்று விட்டது. இரவு நேரமாகி விட்டதால் மாற்று பேருந்துகள் மறுநாள் காலையில் தான் வரும் என்றும், அதுவரை பேருந்திலேயே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறும் பயணிகளிடம் நடத்துனர் கூறினார். 


ராகவனுக்கு அதிகமாக பசியெடுத்ததால், உறக்கம் வரவில்லை. உணவு ஏதாவது கிடைக்குமா என அருகிலிருந்த கிராமத்தை நோக்கி நடந்த ராகவனை வழிமறித்த விவசாயி ஒருவர், விவரத்தைக் கேட்டறிந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவனுக்கு அன்புடன் உணவு படைத்த விவசாயி, சார், உணவருந்துவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்வது எங்கள் வழக்கம். நீங்களும் நன்றி கூறி விட்டு சாப்பிடத் தொடங்குங்கள் என்றார். 


ஆனால் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ராகவன், இறைவணக்கம் செய்ய மறுத்ததுடன் நிலத்தில் பாடுபட்டது நீ, நெல் விளைவித்தது நீ, என்னை உணவருந்த அழைத்தது நீ, அப்படியானால் நான் உனக்குத் தான் நன்றி கூற வேண்டும். இறைவனுக்கு நன்றி தேவையில்லை என்றான். 


விவசாயி வியப்புடன் ராகவனை பார்த்துக்கொண்டே, நெல் விளைந்த நிலம் இறைவன் படைத்தது. நெல் வளர மழை பெய்யச் செய்தது இறைவன் தான். மலர்ந்து, காய்த்து, கனிந்து, முற்றி தானியமானது அவன் செயலே. நான் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டுள்ளேன். நீங்கள் அருந்தும் குடிநீர் அவன் தந்தது. அத்தகைய இறைவனுக்கு நன்றி கூற மறுத்தால், உங்களுக்கு மனிதநேயமே இல்லை எனப் பொருள். இதை நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், படித்து என்ன பயன்? என்று கூறினார். 


இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த ராகவனின் கைகள் தாமாகவே குவிந்து, இறைவனுக்கு நன்றி கூறின. 


நீதி :

அனைவரையும் மதித்து வாழ வேண்டும்.


இன்றைய செய்திகள்


25.11.21


◆மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி கண்மாயில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.


◆நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் கிராமப்புற மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


◆தொலைத்தொடர்பு கருவிகள், ஏவுகணைகளுடன் நவீன தொழில்நுட்பத்தில் ‘ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்’ போர்க் கப்பல்: சர்வதேச தரத்துக்கு இணையாக உள்நாட்டில் வடிவமைப்பு.


◆நாடு முழுவதும் ரேசன் கடைகளில் ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஓப்புதல் வழங்கி உள்ளது.


◆ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் நேற்று தொடங்கியது.


◆சாம்பியன் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி.



Today's Headlines


🌸  A 13th century AD land donation inscription has been found near Perungudi near Madurai Airport.


 🌸  The Minister of Medicine and Public Welfare has said that additional students will be included in the 7.5% reservation for rural students in the current medical student admission.


 🌸  ‘INS Visakhapatnam warship in modern technology with telecommunications equipment and missiles: in-house design in line with international standards.


 🌸  The Union Cabinet has approved the extension of the scheme of providing free food grains to the poor in ration shops across the country for a further 4 months.

 

 🌸 The Junior World Cup kicked off in Odisha yesterday.


 🌸 Champions League Football: Manchester United win.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns