கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-11-2021 - சனி - (School Morning Prayer Activities)...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.11.21

 திருக்குறள் :


சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க் கணி. 


பொருள் 


ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்


பழமொழி :

Sadness and gladness succeed each other.

அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும்.


2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்



பொன்மொழி :


வெற்றியாளர்கள்

பரிசளிக்கப்பட்டவர்கள் அல்ல..

அவர்கள் கடினமான

உழைப்பால் வெற்றியை

பரிசாக பெற்றுக் கொண்டவர்கள்..!-----நீரஜ் சோப்ரா



பொது அறிவு :


1. இந்தியாவில் முதல் இரயில் பாதை போடப்பட்டு இணைக்கப்பட்ட நகரங்கள் எவை? 


மும்பை - தானே. 


2. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட் எது? 

PSLV- D2



English words & meanings :


Get on - having good relationships with others. மற்றவர்களோடு ஒத்து போதல். 


Make up - reconcile, சண்டைக்கு பிறகு சமாதானம் ஆகுதல்


ஆரோக்ய வாழ்வு :


விட்டமின் E - ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன் ஆகும். தோல் சுருங்காமல் பளபளப்பாக வைத்து இருக்க உதவும். இது முடிக்கு மிகவும் நன்மை பயக்க கூடியது. செல் வளர்சிக்கு உதவி புரிகிறது. காணப்படும் உணவுப் பொருட்கள் - உலர் பருப்புகள், கீரை, அவகடோ பழம், முட்டைகோஸ், புராக்கோலி, மிளகாய் தூள்.


கணினி யுகம் :


Windows Logo+F (Search for a file or a folder) 


NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)


நீதிக்கதை


அது காட்டை ஒட்டிய ஒரு கிராமம். இளைஞன் ஒருவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றான். அழகிய புள்ளிமான் அவனிடம் சிக்கிக் கொண்டது. மிரள மிரள விழித்து நின்ற அக்குட்டியை, அம்பு, வேலைப் பயன்படுத்தாமல், கைகளிலேயே தூக்கிவிட முடிந்தது.


அந்த மான் குட்டியின் அழகிலும், மருட்சியிலும் மயங்கிய அவன் அதனை வளர்க்க முடிவு செய்தான். வீட்டில் வளர்த்து வந்த அந்த மான் வளர்ப்புப் பிராணியாக செல்லமாக இருந்து வந்தது.


திடீரென ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. அது விலகி ஓட வாய்ப்பில்லை. காணாமல் போய்விட்டது அல்லது களவு போய்விட்டது.


இளைஞனுக்கோ ஆத்திரம். இந்த மானைக் களவாடியவர்களை எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உக்கிரமாக உருவெடுத்தது.


உடனே ‘கடவுளே எனக்கு தரிசனம் தா! என்று கடவுளைத் துதித்தான். கடவுளும் வந்தார்..!


“பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன?” என்று கடவுள் கேட்டார்.


அறிவாளி பக்தனாக இருந்தால், “நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்துச் சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு மீண்டும் கிடைக்க வேண்டும்” என்று கேட்டிருப்பான். ஆனால், அவன் கண்களைத்தான் கோபம் மறைத்து நிற்கிறதே!


“கடவுளே! நான் ஆசையாக வளர்த்த மானைக் காணவில்லை. அந்த மானைத் திருடியவன் யாராக இருப்பினும், அவனை என் முன்னே காட்டவேண்டும். அவனை என் ஆத்திரம் தீர அடித்துத் துவைக்க வேண்டும்” என்றான்.


வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தருபவராக இருந்தாலும் கடவுள் பக்தனின் இந்தக் கோரிக்கைக்குத் தயங்கினார்.


“பக்தா.. உன் மானை திருப்பித் தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே. உனக்கு நல்லதல்ல!” என்றார்.


“இல்லை. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் கள்ளனைப் பழிவாங்காமல் விடமாட்டேன். நீங்கள் வரம் தாருங்கள், வருவதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வரத்தில் வறட்டுப் பிடிவாதம் காட்டினான் இளைஞன்.


“சரி நீ கேட்கும் வரத்தைத் தருகிறேன். உன் மானைத் திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்துக் கொள்…” வரத்தைத் தந்த கடவுள் மறைந்து விட்டார்.


பக்தன் ஆவேசமாகத் திரும்பினான். அங்கே உறுமலுடன் நின்று கொண்டிருந்தது ஒரு முரட்டு சிங்கம். அதன் கண்களில் பசி தெரிந்தது.


பழிவாங்கும் கோபம் நொடியில் மறைய, இளைஞனுக்கு பயம் பிடித்துக் கொண்டது. கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓடத் தொடங்கிய அவன், அலறினான். “கடவுளே, என்னைக் காப்பாத்து!”


அதுதான் அவனது கடைசி வார்த்தைகள்.


கடவுள் சிரித்தார்.

நீதி - ஆத்திரம், கோபம் அறிவின் கண்ணை அடைத்து அழிவை நோக்கி அழைத்து சென்று விடும்



இன்றைய செய்திகள்


27.11.21


★ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.2 கோடி செலவினத்தில், தாட்கோ மூலம் தொழில் மேலாண்மைப் பயிற்சி அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


★தொடர் கனமழை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


★கரோனா காலத்தில் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 6 முக்கிய ரயில் நிலையங்களில் ரூ.50 ஆகஉயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் மீண்டும் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.


★டிசம்பர் 15-ம் தேதி முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து வழக்கமான முறையில் மீண்டும் தொடங்கும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


★உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்காவது நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா, இந்திய கடற் படையில் இணைக்கப்பட்டது.


★தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 எனும் புதிய வகை கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்த உலக சுகாதார அமைப்பின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.


★உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சத்யன் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


★ஒடிசாவில் நடந்த உலக கோப்பை ஆடவர் ஜூனியர் ஹாக்கி சி பிரிவில் நடந்த போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்று சாதனை படைத்து இருக்கிறது.



Today's Headlines


 ★ The Government has announced to provide business management training through TADCO at a cost of Rs. 2 crores to encourage Adithravidar and tribal youth entrepreneurs.


 ★ Red Alert has been issued for the coastal districts of Tamil Nadu including Chennai due to continuous heavy rains.


 ★ During the Corona period, the platform fare which was increased by Rs.50 at 6 major railway stations including Chennai Central has been reduced again to Rs.10.


 ★ The Ministry of Civil Aviation has announced that international flights will resume as usual from December 15.


 ★ The fourth domestically-built submarine, INS Vela, was attached to the Indian Navy.


 ★ A special meeting of the World Health Organization (WHO) was held yesterday to discuss in detail the discovery of a new type of coronavirus called B1.1.529 in South Africa.


 ★ Indian Sathyan advanced to the 3rd round of the World Table Tennis Championships.


 ★ Spain wins World Cup Men's Junior Hockey C in Odisha. 


 Prepared by

Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Jallikattu - Guidelines Released

ஜல்லிக்கட்டு போட்டி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Jallikattu Competition - Guidelines Released  ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்...