கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-12-2021 - சனி - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.12.21

திருக்குறள் :


பால்: அறத்துப்பால்


இயல்: பாயிரம்


அதிகாரம்: வான்சிறப்பு


குறள் எண்:11

குறள்: வான் நின்று உலகம் வழங்கி வருதலால்

தான் அமிழ்தம் என்றுணரற்பாற்று.


பொருள்: மழைபருவம் தவறாது பெய்வதனால் தான் உலகம்

வளத்தோடு வாழ்கின்றது. எனவே அதை அமுதத்திற்கு

நிகராக என்ன வேண்டும்.


பழமொழி :

You may know by a hand full of the whole sack



ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்



இரண்டொழுக்க பண்புகள் :


1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன். 


2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.


பொன்மொழி :


தன்னம்பிக்கை மிக தேவையான ஒன்றாகும். நம் வாழ்வில் என்னதான் பல ஏமாற்றங்கள், தோல்விகள், சோகங்களை எதிர்கொண்டாலும் எந்த சூழ்நிலையிலும் தன்னமிக்கையை இழக்க கூடாது......அம்பேத்கர்



பொது அறிவு :


1. புல்லாங்குழலில் எத்தனை துளைகள் உள்ளன? 


9 துளைகள். 


2 .தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு? 


1076 கி.மீ.



English words & meanings :


Cat nap - a small sleep in the afternoon, கோழித் தூக்கம், 


I am spent - I am very tired, அதிக சோர்வு


ஆரோக்ய வாழ்வு :


பாய் உடல் சூட்டை உள்வாங்க கூடிய தன்மையுடையது.

பிறந்த குழந்தையை பாயில் உறங்க வைப்பதால் கழுத்தில் சுளுக்கு பிடிக்காது. குழந்தையின் முதுகெலும்பு சீர்படும்.


கணினி யுகம் :


Ctrl + 1 - Single-space lines. 


Ctrl + 2 - Double-space lines


டிசம்பர் 11


சுப்பிரமணிய பாரதி  அவர்களின் பிறந்தநாள்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.


பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[2] தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[3] இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.


பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.




பிரணப் குமார் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள்


பிரணப் குமார் முகர்ஜி (Pranab Mukherjee, வங்காள: প্রণব কুমার মুখার্জী, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5] சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.




பன்னாட்டு மலை நாள்

பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.[1]


மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.[2]


நீதிக்கதை


ஆப்பைப் பிடுங்கிய குரங்கு


மகத நாட்டில் சிவா எனும் தச்சன் வாழ்ந்து வந்தான். அவன் அவ்வூர் கோயில் வேலைக்காக மரங்களை அறுத்து கொண்டிருந்தான். 


மாலை வேளை நெருங்கவும் சிவா தான் பாதியில் அறுத்து கொண்டிருந்த மரத்தில் ஆப்பு ஒன்றை சொருகி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றான். 


அருகில் இருந்த மரத்தில் ஏராளமான குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒரு குரங்கு சிவா பாதி அறுத்து விட்டு சென்ற மரத்தின் மீது விளையாடியது. 


சும்மா இல்லாமல் அம்மரத்தின் மீதே அமர்ந்து கொண்டு அங்கே சொருகி வைத்திருந்த ஆப்பை அசைத்து ஆட்டிப் பிடுங்கியது. 


அச்சமயத்தில் அக்குரங்கின் கால்கள் ஆப்பு வைத்திருந்த பிளவில் மாட்டிக் கொண்டது. இரவு நெருங்கும் நேரம் ஆகவே ஒருவரும் உதவி செய்ய இல்லாமல் மாட்டிகொண்டு இறந்துபோனது. 


நீதி :

தனக்கு தகாத காரியங்களை செய்தல் ஆகாது!


இன்றைய செய்திகள்


11.12.21


★தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள், சட்டதிட்டங்கள் குறித்த இணையவழிக் கருத்தரங்கப் பயிற்சி நடைபெறுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.


★தமிழ்நாட்டுக்கான கல்விக் கொள்கை விரைவில் உருவாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


★தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையைப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


★உ.பி.யில் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசன திட்டத்தை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.


★ஒமைக்ரான் பரவல்அச்சம்: சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு: டிஜிசிஏ அறிவிப்பு.


★ஒமைக்ரானை அழிக்கும் தடுப்பூசி: ஃபைஸர்-பயோ என்டெக் ஆய்வில் நம்பிக்கையூட்டும் தகவல்.


★நிலவுக்கு செல்லும் நாசா திட்டத்துக்காக இந்திய வம்சாவளி மருத்துவர் உட்பட 10 பேர் தேர்வு.


★பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெற்றி.


★விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மராட்டிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சத்தீஷ்கரை வென்றது.



Today's Headlines


 🌸 The Government of Tamil Nadu has announced that an online seminar on Export, Import Procedures, and Bills will be conducted by the Tamil Nadu Entrepreneurship Development and Innovation Agency.


 🌸Education policy for Tamil Nadu will be formulated soon, said the Minister of School Education Anbil Mages Poyamozhi.


 🌸The government issued an order to write the initials also in Tamil while signing in school, college, and government documents.


 🌸 The Prime Minister today inaugurated a massive irrigation project connecting five rivers in UP, namely Kakara, Sarayu, Rapti, and Panganga Rohini.


 🌸Omegron spread fear: Extension of the ban on international passenger air traffic: DGCA announcement.


 🌸 Omegran Destroyer Vaccine: Promising Information in the Pfizer-Bio Endech Study.


 🌸 10 people, including a doctor of Indian descent, have been selected for the NASA mission to the moon.


 🌸Big Bash 20 Over Cricket: Melbourne Stars win.


 🌸Maratha team beat Chhattisgarh by 8 wickets in Vijay Hazare Cup ODI.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...