கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-12-2021 - வியாழன் - (School Morning Prayer Activities)...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.12.21

  திருக்குறள் :

பால்: பொருட்பால்


இயல்:அமைச்சியல்


அதிகாரம்:அவை அஞ்சாமை


குறள் எண் : 724


குறள்:

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்


பொருள்:

அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


பழமொழி :

Give and spend and God will send


இட்டார்க்கு இட்ட பலன்



இரண்டொழுக்க பண்புகள் :


1. பொய்யுரைத்தால் புகழும் கெடும் எனவே ஒரு போதும் பொய் கூற மாட்டேன்.


2. சோம்பினால் வளர்ச்சி கெடும் எனவே எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயல்வேன்.



பொன்மொழி :


நீங்கள் வாழ்க்கையில் தடுக்கி

விழ பல கால்கள் இருக்கலாம்…

ஆனால் ஊன்றி எழ ஒரு கை

உள்ளது என்பதை மறந்து

விடாதீர்கள் அது தான்

“நம்பிக்கை”._____ காந்தியடிகள்



பொது அறிவு :


1. பித்த நீரின் நிறம் என்ன? 


மஞ்சள். 


2. ஆசியாவின் நீண்ட மலைத்தொடர் எது? 


இமய மலைத்தொடர்.




English words & meanings :


Blue moon - a rare event, அரிதான நிகழ்வு, 


time is money - time is valuable, நேரத்திற்கு மதிப்பு அதிகம். 


ஆரோக்ய வாழ்வு :


சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். 



கணினி யுகம் :


Right SHIFT -  for eight seconds (Switch FilterKeys either on or off)


Left ALT+left SHIFT+PRINT SCREEN -  (Switch High Contrast either on or off)



டிசம்பர் 16

வெற்றி நாள்


வெற்றி நாள் (இந்தி: विजय दिवस Eng- Victory Day) 1971ல் இந்தியா வங்கதேச முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.


1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து  நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.



நீதிக்கதை


ஏழ்மையிலும் நேர்மை


ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யாததால், அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்று தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு வேண்டினர். 


இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்! என்றார். 


மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டும் என்றார். 


மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான். 


பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள். 


இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர், ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது. 


அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்! என்றாள். மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வந்தர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள். 


நீதி :

பொறுமை, நேர்மை இரண்டும் இருந்தால் எதிலும் நிச்சயம் வெற்றி பெறலாம்.


இன்றைய செய்திகள்


16.12.21


◆தமிழக அரசு விழாக்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்வர வேண்டும்: கலை பண்பாட்டுத்துறை அறிவுறுத்தல்.


◆டிசம்பர் 17-ல் வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதன் காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


◆சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சாலை பெயர்ப் பலகைகளில் வரலாற்று சின்னங்களின் புகைப்படங்கள் இடம்பெற உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


◆நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயமடைந்து பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி காலமானதாக விமானப் படை அறிவித்துள்ளது.


◆பருவநிலை மாறுபாடு தொடர்பான ஐ.நா. சபை வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.


◆கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், உலகின் பலநாடுகளுக்குப் பரவிவிட்டது. லேசான பாதிப்புதான் இருக்கும் என்று யாரும் எளிதாக நினைக்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.


◆ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா-தென்கொரியா இடையிலான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.


◆காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  இந்தியாவின் பூனம் யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.


◆உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் பிரனாய், அஸ்வினி மற்றும் சிக்கி ரெட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.


Today's Headlines


 🌸 Tamil Nadu government had to come forward to conduct folk art performances in  government festivals: Department of Arts and Culture adviced


🌸 The Chennai Meteorological Department has issued a warning to fishermen due to the formation of a new depression in the Bay of Bengal on December 17.


 🌸Corporation officials said that under the Singaraj Chennai 2.0 project, photographs of historical monuments will be displayed on road name plates.


 🌸The Air Force has announced that Captain Varun Singh, who was critically injured in a Nilgiris helicopter crash and was treated at a Bangalore hospital, has passed away  .


🌸 UN Convention on Climate Change,  India has voted against the draft resolution.


 🌸 The omicron virus, a variant of the corona virus, has spread to many parts of the world.  The World Health Organization (WHO) has warned that no one should take it lightly.


 🌸The league match between India and South Korea in the Asian Champions Trophy Hockey Tournament ended in a draw.


 🌸India's Poonam Yadav wins silver at Commonwealth Weightlifting Championships


 🌸Pranoy, Aswini and Sikki Reddy advance to the semi-finals of the World Championship Badminton Championships.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Impersonation in Govt School - Suspension of Teacher

  அரசுப் பள்ளியில் அரங்கேறிய ஆள்மாறாட்டம் - ஆசிரியர் பணியிடை நீக்கம் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை...