கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மலர் கிரீடம் சூடிய மாவட்டக் கல்வி அலுவலர் - தென்காசியில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு மாற்றம் (Flower-crowned District Educational Officer - Transferred from Tenkasi to Gudalur in the Nilgiris District)...

 


மலர் கிரீடம் சூடிய மாவட்டக் கல்வி அலுவலர் சுடலை தென்காசியில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு மாற்றம்.


தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் திரு. சுடலை அவர்கள் சமீபத்தில் கடையம் பகுதியில் ஒரு பள்ளியில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார்.


அப்போது அவருக்கு மலர் மாலை, மலர் கிரீடம், பொன்னாடை என அமர்க்களமான வரவேற்பு அளிக்கப் பட்டிருக்கிறது.


தனது சிரத்தை மலர் கிரீடம் அலங்கரித்த ஆனந்தத்தில் அதை அகற்றாமலேயே தனது ஆய்வுப்பணியை மேற்கொண்ட மாவட்டக் கல்வி அலுவலர்  புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரல் ஆனது.


அதைத் தொடர்ந்து, கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு தென்காசி முதன்மைக் கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் சுடலை அவர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு மாற்றப்பட்டார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...