கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாளை (09-02-2022) முதல் TN-EMIS வாயிலாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் (Ennum Ezhuthum skills development Training for 1st to 5th Standard teaching Teachers through TNEMIS from Tomorrow (09-02-2022) onwards - Samagra Shiksha State Project Director's letter)...



>>> நாளை (09-02-2022) முதல் TN-EMIS வாயிலாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் (Ennum Ezhuthum skills development Training for 1st to 5th Standard teaching Teachers through TNEMIS from Tomorrow (09-02-2022) onwards - Samagra Shiksha State Project Director's letter)...


🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

🌟  எண்ணும் எழுத்து இயக்கம் - எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி பங்கேற்பாளர்கள்


அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள். பயிற்சியில் பங்கேற்பது எப்படி:   

TNEMIS-  வாயிலாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் தங்களது USER ID மற்றும் PASSWORD மூலமாக LOGIN செய்து செய்து இணையதளம் ONLINE மூலம் பயிற்சியில் பங்கேற்றல், தொடங்குதல்.


 எண்ணும் எழுத்தும் அடிப்படை பயிற்சி கால  அட்டவணை கட்டகம்.


 1) 09 .02.22 முதல் 12.02.22- கட்டகம் 1 


2) 14.02.22 முதல் 19.02.22- கட்டகம் 2,3 


3) 21.02.22 முதல் 25.02.22-கட்டகம் 4, 5 ,6 


4) 28.02.22 முதல் 05.03.22 கட்டகம் 6,7 


5) 07.03.22 முதல் 12.03.22 கட்டகம் 8,9 


6) 14.03.22 முதல் 19.03.22 கட்டகம் 10, 11 


7) 21.03.22 முதல் 25.03.22-கட்டகம் 12 


8) 28.03.22 -அனைத்துக் கட்டகங்களில் விடுபட்டோருக்கான பயிற்சி துவக்கம். 


9) 09.04.22- விடுபட்டோருக்கான பயிற்சி நிறைவு.


இதில் காணொலிகள், உரை வளங்கள்(Texts) பல விதமான செயல்பாடுகள் மற்றும் ஒப்படைப்பு (Assignment)(ஒவ்வொரு பயிற்சியிலும் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.) வடிவில் வழங்கப்பட்ட அனைத்துப் பாடங்களையும் ஆசிரியர்கள் படித்து கட்டகத்தை 100% நிறைவு செய்ய வேண்டியது அவசியம்.


 மிக கவனம் : ஒவ்வொரு கட்டகத்தின் முடிவில் ஆசிரியர்கள் ஒரு கொள்குறி வகை(Multiple choice) வினாடி-வினாவிற்கு விடை அளிக்க வேண்டும். மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெறவில்லை எனில் மீண்டும் பயிற்சி எடுத்துக்கொண்டு தேர்ச்சி பெறும் வரையில் பயிற்சியினை தொடர்தல் வேண்டும்.


 சான்றிதழ் : பயிற்சியில் பங்கேற்று சான்றிதழை EMIS தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறு வளமையத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து 100% இலக்கினை அடைய வழிவகை செய்ய வேண்டும்.


FLN (Foundational Literacy and Numeracy) எனப்படும் "எண்ணும் எழுத்தும்" பயிற்சியில் ஆசிரியர்கள் கலந்து கொள்வதற்கான அறிவிப்பு;


அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும்  நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் "எண்ணும் எழுத்தும்" என்ற தலைப்பின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி TNEMIS இணையதளத்தின் மூலம் கடிதத்தில் உள்ளவாறு நாளை முதல்(09-02-2022) வழங்கப்பட உள்ளது.


பயிற்சியில் கலந்து கொள்ளக்கூடிய அனைத்து ஆசிரியர்களும்,அவர்களின் Android செயலி Mobile Phone ல் TNEMISE இணையதளத்தில் ஆசிரியர்களின் Individual User ID, Password னை பயன்படுத்தி மேலே உள்ள கடிதத்தில் கூறியுள்ள கால அட்டவணைப்படி பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.


பயிற்சியில் கலந்து கொள்ளக்கூடிய ஆசிரியர்கள் TNEMIS  இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள 12 கட்டகங்களின் செயல்பாடுகளையும் கடித்த்தில் குறிப்பிடபட்டுள்ள தேதிக்குள் கூறியுள்வாறு முடிக்கப்பட வேண்டும்.

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...