பள்ளிக்கல்வித் துறை, தேசிய சுகாதாரப் பணிகள் (NHM), மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் ஒருங்கிணைந்த செயல்முறை நடவடிக்கைகள்
செ.மு.க.எண். 4578/அமஇ2/2021, நாள்.: 10.02.2022
பொருள்: மாற்றுத்திறனாளிகள் நலன் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - உள்ளடக்கிய கல்வித் திட்டக்கூறு (தொடக்கநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை) செயல்படுத்துதல் - மாற்றுத்தினாளி மாணவ/மாணவியர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நடத்துதல் - பணிப்பொறுப்புகள் அனுமதித்து - ஒருங்கிணைந்த செயல்முறை ஆணை வழங்குதல் - தொடர்பாக.
பார்வை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநில திட்ட இயக்ககம், சென்னை - 6 அவர்களின் ந.க.எண். 314/ஆ5/ஒபக /IE/2021, நாள்: 16.12.2021.
ஆணை :
பார்வையில் காணும் கடிதத்தின்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிக்கு வர இயலாமல் அதிக அளவில் இயலாமையுடைய சிறப்புக் குழந்தைகளும் இல்லம் சார்ந்த கல்வி பெற்றிட, எட்டாம் வகுப்பு நிறைவு செய்த மாற்றுத்திறனுடைய மாணவ/மாணவியர்கள் (Children with Special Needs), ஒன்பது முதல் பன்னிரெண்டு வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை முழுமையாக பெறும் வகையில் கற்றலுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி , சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவ / மாணவியர்களுக்கு உள்ளடக்கிய கல்வி (Inclusive Education) வசதி செயல்படுத்தப்பட்டு அதன் வாயிலாக வழங்கப்படும் அனைத்து பயன்களையும் அவர்கள் பெற்றிட வழிவகை செய்திடும் வகையில், மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.