டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 18ஆம் தேதி நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு (The protest, which was scheduled to take place on the 18th, has been temporarily postponed following discussions between the TETOJAC coordinators and the Minister of School Education)...
நமது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நாளை மாலைக்குள் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் பேசி அரசாணைகள் 101 மற்றும் 108 ரத்து குறித்தும் மற்ற கோரிக்கைகள் குறித்தும் அறிவிப்பதாக கூறியுள்ளதால் 18.05.2022 அன்று நடைபெற இருந்த டிட்டோஜேக் ஆர்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மே 18-ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து இன்று(15.5.22) திருச்சியில் கலந்தாலோசனை கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் 101, 108 அரசாணைகள் ரத்து உள்ளிட்ட ஒரு சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாகவும், நிதி சார்ந்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்து, போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும், டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான திரு.வின்சென்ட் பால்ராஜ் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. அதில் அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து எடுத்த முடிவின் அடிப்படையில், மே 18ஆம் தேதி நடைபெற இருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் டிட்டோஜாக் மூலம் தீவிர போராட்டத்தை முன்னெடுக்கும். தமிழகம் முழுவதும் போராட்ட ஆயத்த கூட்டங்களை நடத்திய கூட்டணி நிர்வாகிகளுக்கு நன்றி...