கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (19-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

மே 19, 2022



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பாராத தனவரவின் மூலம் மேன்மை உண்டாகும். தவறிப்போன பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில மாற்றம் ஏற்படும். மனஉறுதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2 


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


பரணி : மேன்மை உண்டாகும். 


கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

மே 19, 2022



மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்வதில் கவனம் வேண்டும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கடன் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




கிருத்திகை : கருத்துக்களை தவிர்க்கவும். 


ரோகிணி : சேமிப்பு குறையும்.


மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------





மிதுனம்

மே 19, 2022



கடினமான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மிருகசீரிஷம் : காரியசித்தி உண்டாகும்.


திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும். 


புனர்பூசம் : புதுமையான நாள்.

---------------------------------------






கடகம்

மே 19, 2022



சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உதவி சாதகமாகும். வியாபார பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சிரமங்கள் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.


பூசம் : உதவி கிடைக்கும். 


ஆயில்யம் : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------





சிம்மம்

மே 19, 2022



குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். எதிர்காலம் தொடர்பான முடிவினை எடுப்பீர்கள். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


பூரம் : அறிமுகம் கிடைக்கும்.


உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------





கன்னி

மே 19, 2022



சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். போட்டி, பந்தயங்களில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




உத்திரம் : சாதகமான நாள்.


அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.


சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------





துலாம்

மே 19, 2022



குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும். சிறு தூர பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




சித்திரை : வெற்றி கிடைக்கும். 


சுவாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------





விருச்சிகம்

மே 19, 2022



சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை மேம்படும். தாய்மாமன் வழியில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். திருப்திகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




விசாகம் : மகிழ்ச்சியான நாள்.


அனுஷம் : ஒற்றுமை மேம்படும்.


கேட்டை : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------





தனுசு

மே 19, 2022



முக்கிய பணிகளை தாமே மேற்கொள்ள வேண்டும் என முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். அமைதியான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மூலம் : முடிவு பிறக்கும். 


பூராடம் : புரிதல் மேம்படும்.


உத்திராடம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------





மகரம்

மே 19, 2022



விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளை சமாளிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். பணிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : அலைச்சல்கள் ஏற்படும். 


திருவோணம் : வெற்றிகரமான நாள்.


அவிட்டம் : ஆதாயம் கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

மே 19, 2022



உறவினர்களை பற்றிய தெளிவு மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் உள்ள சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். நேர்மை வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




அவிட்டம் : தெளிவு மேம்படும். 


சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூரட்டாதி : சூட்சுமங்களை அறிவீர்கள்.

---------------------------------------





மீனம்

மே 19, 2022



மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசி தெளிவான முடிவினை எடுப்பீர்கள். உத்தியோகம் ரீதியான பொறுப்புகள் அதிகரிக்கும். பாசம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.


உத்திரட்டாதி : சோர்வு நீங்கும்.


ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UPS, NPS & CPS - Comparison

Comparison of UPS vs NPS vs CPS in Tamilnadu  UPS - Unified Pension Scheme Effect from 01.04.2025 for Central Govt Employees >>> Cl...