கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய தலைமுறை ஆசிரியர் 2022 விருது - விண்ணப்பிக்க இணைப்பு - கடைசி நாள்: 20-06-2022 (Puthiya Thalaimurai Aasiriyar 2022 Award - Link to apply - Last Date: 20-06-2022)...




>>> புதிய தலைமுறை ஆசிரியர் 2022 விருது -  விண்ணப்பிக்க இணைப்பு (Puthiya Thalaimurai Aasiriyar 2022 Award - Link to apply)...


புதிய தலைமுறை ஆசிரியர் விருது’2022


மானுட மாற்றத்தின் ஆணிவேர்களான ஆசிரியர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஊடகத் துறையில் சமூக அக்கறையோடு திகழும் “புதிய தலைமுறை” குழுமம், "கனவு ஆசிரியர்" அமைப்போடு இணைந்து “புதிய தலைமுறை ஆசிரியர் விருது “ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிச்  சிறப்பித்து வருகிறது.


ஆசிரியர்களை மதித்து அவர்களின் நற்செயல்களை ஊக்கப்படுத்தும் சமூகம் தம்மைத்  தாமே சிறப்பித்துக் கொள்கிறது. அந்த வகையில் ஒரு மாணவனின் முழுமையான மேம்பாட்டிற்காகவும், சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் சிறந்த பங்களிப்பை ஆற்றி வரும் ஆசிரியர்களுக்கு உயர்ந்த விருதை வழங்கி உலகிற்கு அடையாளப்படுத்தும் முயற்சியே “புதிய தலைமுறை ஆசிரியர் விருது”.


அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் ஆகிய மூன்று வகைப் பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் இதற்குத் தகுதியானவர்கள், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் , தலைமை ஆசிரியர்களும் இதற்குப் பொருத்தமானவர்களே.

விருதுக்கான விண்ணப்பம் மற்றும் விருது பிரிவுகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விருதுக்குத் தகுதியானவர்களைப் பிறரும் பரிந்துரை செய்யலாம்.விண்ணப்பத்தோடு சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும். புகைப்படங்கள், வீடியோ குறுந்தகடுகள், ஊடக வெளியீடுகள்,சான்றிதழ்கள் இணைத்து தொகுத்து அனுப்பலாம்.


விருதுக்குத் தேர்ந்தெடுப்பவர்களைப் பற்றிய தரவுகள் அனைத்தும் தக்க சான்றுகளோடு ஒளி-ஒலிக் காட்சிகளாக “புதிய தலைமுறை” ஊடக குழுவினரால் தயாரிக்கப்பட்டு விருது வழங்கும் விழாவில் மேடையில் திரையிடப்படும். நடுவர்களாக சமூகத்தின் பல்துறை சாதனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. நடுவர்களின் முடிவே இறுதியானது. 


விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 20.06.2022

மேலும் தகவல்களுக்கு - 9840106949, 8056007208


>>> புதிய தலைமுறை ஆசிரியர் 2022 விருது -  விண்ணப்பிக்க இணைப்பு (Puthiya Thalaimurai Aasiriyar 2022 Award - Link to apply)...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...