கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Award லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Award லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேசிய நல்லாசிரியர் விருது NTA 2026 - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு



தேசிய நல்லாசிரியர் விருது National Teachers' Awards 2026 - விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை - 6


ந.க. எண். 035316/ஐ/இ1/2026, நாள். 13.07.2026


பிறப்பிப்பவர்: முனைவர் ச.கண்ணப்பன்


பொருள்


பள்ளிக் கல்வி விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய கால தேசிய நல்லாசிரியர் விருது 2026 அவகாசம் நீடித்து வழங்குதல் - தொடர்பாக


பார்வை


1. Joint Secretary (Inst. & Trng.), Ministry of Education, Department of School Education & Literacy New Delhi, D.O.No.1-13/2026-NAT, Dated.15.06.2026


2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 035316/9/1/2026, न. 18.06.2026.


3. Director, Government of India, Ministry of Education, Department of School Education and Literacy, New Delhi, Lr.No.1-3/2026-NAT, Dated 10.07.2026


பார்வை 1 மற்றும் 2-ல் காணும் கடிதத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கான விண்ணப்பத்தினை http://nationalawardstoteachers.education.gov.in ஆசிரியர்களின் என்ற  இணையதளம் வாயிலாக 13.07.2026க்குள் முழுமையாக பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்டத் தேர்வுக் குழுவினை அமைத்து 21.07.2026க்குள் இணையதளம் வாயிலாக உரிய விதிமுறைகளை பின்பற்ற ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியினை முடித்திட தெரிவிக்கப்பட்டிருந்தது.


தற்போது பார்வை 3-ல் கண்ட அரசுக் கடிதத்தில் 2026ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக முழுமையாக பதிவேற்றம் செய்ய 17.07.2026ம் தேதிவரையும், மாவட்ட அளவில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்டத் தேர்வுக் குழுவினை அமைத்து இணையதளம் வாயிலாக உரிய விதிமுறைகளை பின்பற்ற ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியினை 21.07.2026 முதல் 26.07.2026க்குள் முடிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது, எனவே இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் பணியினை துரிதப்படுத்துமாறும், குறிப்பாக கன்னியாகுமரி. நாமக்கல், பெரம்பலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒரு ஆசிரியர் கூட முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதால் இம்மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் இதன்மீது தனிக்கவனம் செலுத்தி ஆசிரியர்கள் முழுமையாக விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் முழுமையான அளவில் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கையினை உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிப்பதுடன், பிற மாவட்டங்களில் பகுதியாக விண்ணப்பப் பதிவேற்றம் செய்துள்ள ஆசிரியர்களை முழுமையான அளவில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மேலும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தேர்வுக்குழு ஆசிரியர்களைத் தேர்வு செய்து மாநிலத் தேர்வுக்குழுவிற்கு அனுப்பும் பணியினை 26.07.2026 மாலை 5.00 மணிக்குள் முடித்திடுமாறும் தெரிவிக்கப்படுகிறது.


இணைப்பு - பார்வை 3-ல் காணும் கடித நகல்


பள்ளிக்கல்வி இயக்குநர்


பெறுநர்: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்



மாவட்ட வாரியாக விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களின் விவரம்


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



‘அன்பாசிரியர்’ விருது குறித்த தகவல்கள்

 


‘அன்பாசிரியர்’ விருது குறித்த தகவல்கள் 


ஆசிரியர்களுக்கு அன்பின் அழைப்பு.


‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் ராம்ராஜ் காட்டன் இணைந்து வழங்கும் ‘அன்பாசிரியர்’ விருது ஏழாம் ஆண்டாக வழங்கப்படவிருக்கிறது.


கல்விச்சூழலில் புத்துணர்வோடு புதிய முன்னெடுப்புகளைச் செய்துவரும் ஆசிரியப் பெருமக்களைப் பாராட்டிக் கவுரவிக்கும் நல்முயற்சி.


ஆர்வமுள்ள ஆசிரியர்கள் வரும் 2026 ஜூலை 12-ஆம் தேதிக்குள் விரைந்து பங்கேற்கவும்.


இணைப்பில் க்யூஆர் கோடு தரப்பட்டுள்ளது. அதனை ஸ்கேன் செய்தால் விண்ணப்பம் வரும். அதிலுள்ள விவரங்களைப் பூர்த்திசெய்து அனுப்புங்கள்.


ஆசிரியர்களுக்கு முன்னதான வாழ்த்துகள்.


மாற்றத்திறனாளிகள் சேவைக்கான Award பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு



மாற்றத்திறனாளிகள் சேவைக்கான விருது பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவையாற்றிய நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, சுதந்திர தின விழாவில் முதலமைச்சரால் வழங்கப்படவுள்ள மாநில விருதுக்காக https://awards.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு


புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2026

 


அகர முதல்வர்களுக்கு சிகர விருதுகள்!


புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2026


விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது



கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது



 கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது


7 தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை வென்றவர் கவிஞர் வைரமுத்து


திரைத் துறையில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளவர்


தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் இந்த விருதை காணிக்கை ஆக்குகிறேன்: வைரமுத்து



ஏற்கனவே 1975இல் எழுத்தாளர் அகிலன், 2002இல் ஜெயகாந்தன் ஆகியோர் ஞானபீடம் விருது பெற்றுள்ளனர்.


ஞான பீட விருது (Jnanpith Award ) என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஆகும். இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு சைனக் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது.


ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. 1954 -ல் இதைத் தோற்றுவித்தவர் சாந்திபிரசாத் ஜெயின் என்பவர். இந்தியாவின் முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான டாக்டர். இராஜேந்திரபிரசாத் இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுவழங்கி பெருமைப்படுத்த ஒரு அமைப்பு வேண்டும் என்று பல தொழில் முனைவோரிடம் கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக உருவானதே பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக்கழகம்.


இந்த விருது, இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன சரசுவதி சிலையை உள்ளடக்கியது. 1961ல் இந்த விருது நிறுவப்பட்டது. 1965ல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குருப்பிற்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார்.


1982 வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பைப் பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகபட்சமாக, இந்தி மொழி எழுத்தாளர்கள் பதினொரு முறையு இந்த விருதைப் பெற்றுள்ளார்கள்.


2015 ஆம் ஆண்டில் பரிசுத் தொகையானது இந்திய மதிப்பில் 11 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மொத்தமுள்ள அங்கீகரிக்கப்பட்ட இருபத்தைந்து மொழிகளில் இதுவரை மொத்தம் பதினைந்து மொழிகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தி மொழிகளில் இதுவரை பதினொரு விருதுகளும், கன்னடம் மொழிகளில் எட்டு விருதுகளும், வங்காள மொழியில் இதுவரை 6 விருதுகளும், மலையாளத்தில் 6 விருதுகளும், குஜராத்தி , மராத்திய மொழி, ஒடியா மொழி, உருது போன்ற மொழிகளில் தலா நான்கு விருதுகளும், தெலுங்கு மூன்று விருதுகளும், அசாமிய மொழி, பஞ்சாபி மொழி, மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் இரண்டு விருதுகளும், காஷ்மீரி மொழிகளில், கொங்கணி மொழி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒரு முறையும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரையில் ஐம்பத்தி ஏழு நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஏழு நபர்கள் பெண்கள் ஆவர். ஆஷா பூர்ணாதேவி இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆவார். 1965 ஆம் ஆண்டில் புரோதம் புரோதிசுருதி (பொருள்: முதல்சத்தியம்) எனும் வங்காள புதினத்திற்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.


இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருது, இந்திய அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட 22 பட்டியலிடப்பட்ட மொழிகளில் ஏதேனும் ஒன்றிலும், 2013 முதல் ஆங்கில மொழியிலும் சிறந்த படைப்பு இலக்கிய எழுத்துக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருது ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் அறிவின் தெய்வமான வாக்தேவியின் (சரஸ்வதி) வெண்கலப் பிரதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது . இந்த கலாச்சார அமைப்பு பாரதிய ஞானபீடத்தால் நிதியுதவி செய்யப்படுகிறது.


ஞானபீட விருது பற்றி



ஞானபீட விருது 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, முதல் விருது 1965 இல் வழங்கப்பட்டது. 1982 வரை, இந்த விருது சில குறிப்பிட்ட படைப்புகளுக்காக வழங்கப்பட்டது; பின்னர், இலக்கியத்திற்கான ஒரு எழுத்தாளரின் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக இது வழங்கப்பட்டது. அதன் பின்னர், இந்த விருது பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது, இருப்பினும் சில ஆண்டுகளில் இது இரண்டு எழுத்தாளர்களுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. ஞானபீட விருதைப் பெற்றவர்களில், இந்த விருதை வென்ற முதல் பெண்கள் ஜி. சங்கர் குருப் மற்றும் ஆஷாபூர்ணா தேவி ஆகியோர் அடங்குவர். 2018 ஆம் ஆண்டில், ஞானபீட விருதைப் பெற்ற முதல் ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் ஆனார்.


பின்னணி

ஞானபீட விருதை சாஹு சாந்தி பிரசாத் ஜெயின் நிறுவினார் . அவர் 1944 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு ஆராய்ச்சி மற்றும் கலாச்சார நிறுவனமான பாரதிய ஞானபீடத்தின் நிறுவனர் ஆவார் . இந்திய எழுத்தாளர்களின் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடும் ஒரு விருதை நிறுவ அவர் விரும்பினார்.


முதல் ஞானபீட விருது 1965 ஆம் ஆண்டு ஜி. சங்கர் குருப்புக்கு வழங்கப்பட்டது . இது மலையாளத்தில் அவர் எழுதிய "ஓடக்குழல்" என்ற கவிதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டது. அதன் பின்னர், இந்த விருது இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரவீந்திரநாத் தாகூர், பிரேம்சந்த், ஆர்.கே. நாராயண் மற்றும் அருந்ததி ராய் ஆகியோர் அடங்குவர்.


ஞானபீட விருதுக்கான தேர்வு செயல்முறை

முதலாவதாக, பல்வேறு ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், சங்கங்கள், அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றால் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மொழிக்கும், மூன்று சிறந்த இலக்கிய அறிஞர்கள் மற்றும் விமர்சகர்களைக் கொண்ட ஒரு மொழி ஆலோசனைக் குழு உள்ளது. அவர்கள் படைப்புகள்/ஆசிரியர்களை முன்மொழிவுகள் அல்லது பிற எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்பட்டவை மூலம் பரிசீலித்து, நிறுவப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஆசிரியரின் இலக்கிய படைப்பாற்றலை மதிப்பிடுகின்றனர்.

பல்வேறு மொழி ஆலோசனைக் குழுக்களால் வழங்கப்படும் பரிந்துரைகள், ஒரு தேர்வுக் குழுவின் முன் வைக்கப்படுகின்றன, இது பரிந்துரைகளை ஒப்பிட்டு மதிப்பீடு செய்து, அந்த ஆண்டிற்கான விருது வென்றவரைத் தேர்ந்தெடுக்கிறது.


ஞானபீட விருதுகளின் பட்டியல் (1965-2025)

ஆண்டு பெயர்  மொழி

1965 (முதல்) ஜி. சங்கர குருப் மலையாளம்

1966 (2வது) தாராசங்கர் பந்தோபாத்யாய் வங்காளம்

1967 (3வது) உமாசங்கர் ஜோஷி குஜராத்தி

குப்பளி வெங்கடப்பா புட்டப்பா 'குவெம்பு' கன்னடம்

1968 (4வது) சுமித்ரானந்தன் பந்த் இந்தி

1969 (5வது) ஃபிராக் கோரக்புரி உருது

1970 (6வது) விஸ்வநாத சத்யநாராயணா தெலுங்கு

1971 (7வது) பிஷ்ணு டே வங்காளம்

1972 (8வது) ராம்தாரி சிங் 'திங்கர்' இந்தி

1973 (9வது) டி.ஆர். பெண்ட்ரே கன்னடம்

கோபிநாத் மொஹந்தி ஒடியா

1974 (10வது) விஷ்ணு சாகாராம் கண்டேகர் மராத்தி

1975 (11வது) அகிலன் தமிழ்

1976 (12வது) ஆஷாபூர்ணா தேவி வங்காளம்

1977 (13வது) கே. சிவராம் கரந்த் கன்னடம்

1978 (14வது) சச்சிதானந்த வாத்ஸ்யாயன் இந்தி

1979 (15வது) பிரேந்திர குமார் பட்டாச்சார்யா அசாமி

1980 (16வது) எஸ்.கே. பொட்டேக்காட் மலையாளம்

1981 (17வது) அம்ரிதா பிரிதம் பஞ்சாபி

1982 (18வது) மகாதேவி வர்மா இந்தி

1983 (19வது) மஸ்தி வெங்கடேச ஐயங்கார் கன்னடம்

1984 (20வது) தகழி சிவசங்கர பிள்ளை மலையாளம்

1985 (21வது) பன்னாலால் படேல் குஜராத்தி

1986 (22வது) சச்சிதானந்த ரௌத்ரே ஒடியா

1987 (23வது) விஷ்ணு வாமன் ஷிர்வாட்கர் 'குசுமக்ராஜ்' மராத்தி

1988 (24வது) சி. நாராயண ரெட்டி தெலுங்கு

1989 (25வது) குர்ராத்துலைன் ஹைதர் உருது

1990 (26வது) விநாயக கிருஷ்ண கோகக் கன்னடம்

1991 (27வது) சுபாஷ் முகோபாத்யாய் வங்காளம்

1992 (28வது) நரேஷ் மேத்தா இந்தி

1993 (29வது) சீதகாந்த் மகாபத்ரா ஒடியா

1994 (30வது) யு.ஆர். அனந்தமூர்த்தி கன்னடம்

1995 (31வது) எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாளம்

1996 (32வது) மகாஸ்வேதா தேவி வங்காளம்

1997 (33வது) அலி சர்தார் ஜாஃப்ரி உருது

1998 (34வது) கிரிஷ் கர்னாட் கன்னடம்

1999 (35வது) நிர்மல் வர்மா இந்தி

குருதியல் சிங் பஞ்சாபி

2000 (36வது) மாமோனி ரைசம் கோஸ்வாமி அசாமி

2001 (37வது) ராஜேந்திர ஷா குஜராத்தி

2002 (38வது) ஜெயகாந்தன் தமிழ்

2003 (39வது) விந்தா கரண்டிகர் மராத்தி

2004 (40வது) ரெஹ்மான் ரஹி காஷ்மீர்

2005 (41வது) குன்வர் நாராயண் இந்தி

2006 (42வது) ரவீந்திர கேலேகர் கொங்கணி

சத்ய விரத சாஸ்திரி சமஸ்கிருதம்

2007 (43வது) ஓஎன்வி குருப் மலையாளம்

2008 (44வது) அக்லக் முகமது கான் 'ஷாஹ்ரியார்' உருது

2009 (45வது) அமர்காந்த் இந்தி

+ ஸ்ரீ லால் சுக்லா இந்தி

2010 (46வது) சந்திரசேகர கம்பாரா கன்னடம்

2011 (47வது) பிரதிபா ரே ஒடியா

2012 (48வது) ராவூரி பரத்வாஜா தெலுங்கு

2013 (49வது) கேதார்நாத் சிங் இந்தி

2014 (50வது) பாலசந்திர நேமடே மராத்தி

2015 (51வது) ரகுவீர் சவுதாரி குஜராத்தி

2016 (52வது) ஷங்கா கோஷ் வங்காளம்

2017 (53வது) கிருஷ்ணா சோப்தி இந்தி

2018 (54வது) அமிதவ் கோஷ் ஆங்கிலம்

2019 (55வது) அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி மலையாளம்

2021 (56வது) நீலமணி பூக்கன் அசாமி

2022 (57வது) தாமோதர் மௌசோ கொங்கணி

2023 (58வது) ராமபத்ராச்சாரியார் சமஸ்கிருதம்

+ குல்சார் உருது

2024 (59வது) வினோத் குமார் சுக்லா இந்தி

2025 (60வது) வைரமுத்து  தமிழ்


 ஞானபீட விருது பற்றிய தகவல்கள்

ஞானபீட விருது நாட்டின் மிக உயர்ந்த இலக்கிய விருதான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இந்த விருது இந்திய குடிமக்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் மற்றும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு மற்ற இந்திய மொழிகளுடன் சேர்த்து ஆங்கிலமும் பரிசீலிக்கப்படுகிறது.

வெற்றியாளருக்கு ரூ.11 லட்சம் ரொக்கப் பரிசும், இந்து மதக் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியின் வெண்கலப் பிரதியும் பரிசாக வழங்கப்படும்.

இந்த விருதை முதன்முதலில் 1965 ஆம் ஆண்டு மலையாள எழுத்தாளர் ஜி. சங்கர் குருப் தனது 'ஓடக்குழல்' (மூங்கில் புல்லாங்குழல்) நாவலுக்காகப் பெற்றார்.

இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் 1976 ஆம் ஆண்டு வங்காள எழுத்தாளர் ஆஷாபூர்ணா தேவி ஆவார்.

இந்த விருது வழங்கும் அமைப்பு 1944 ஆம் ஆண்டு தொழிலதிபரும் கொடையாளருமான சாஹு சாந்தி பிரசாத் ஜெயின் என்பவரால் நிறுவப்பட்டது.

ஞானபீட விருது பாரதிய ஞானபீடத்தின் கலாச்சார அமைப்பால் வழங்கப்படுகிறது.



Perasiriyar Anbazhagan Award 2025-2026 - DSE Proceedings



 பேராசிரியர் அன்பழகன் விருது 2025-2026ஆம் கல்வி ஆண்டில் சிறந்த தகுதியான பள்ளிகளை தெரிவு செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Perasiriyar Anbazhagan Award 2025-2026 - DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6. 

ந.க.எண் 081540/எம்2/இ2/2025 நாள்: 06.03.2026.


பொருள்: பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - பேராசிரியர் அன்பழகன் விருது 2025-2026ஆம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக்கோருதல் தொடர்பாக


பார்வை: 

1) இயக்குநர். செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களின் செய்தி வெளியீடு எண் 2156, நாள் 30.11.2022 

2) பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க எண் 081540/எம்2/இ2/2023 , நாள்  24.12.2025

3) அரசாணை (நிலை) எண் 45 பள்ளிக் கல்வி (ப.க. 5(1))த் துறை நாள் 24.02.2026 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 30.11.2022 நாளிட்ட அறிவிப்பின்படி "கற்றல்-கற்பித்தல், ஆசிரியர் நிறன் மேம்பாடு, தலைமைத்துவம். மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வை(3)ல் காணும் அரசாணையில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதிற்கு தருதியான பள்ளியினை தெரிவு செய்து விருது வழங்குதல் சார்ந்து பின்வரும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசுப் பொதுத் தேர்வுகள் / திறனறித் தேர்வுகளில் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு அன்றாட கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகள், வகுப்பறை கற்பித்தலில் தொழில்நுட்ப பயன்பாடு, கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் கலைத்திருவிழா, மன்ற எண்ணிக்கை, விளையாட்டுப் போட்டிகள். செயல்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு ஆகியனவற்றின் அடிப்படையிலும். பள்ளி வகுப்பறைகள் மாணவர்களின் கற்றலுக்கு ஏற்ற வகையில் இருக்கை வசதி மற்றும் தேவையான மின் மற்றும் மின்னணு சாதனங்களுடன் கூடிய ஆய்வகங்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானம் மற்றும் அவற்றின் பயன்பாடு போதுமான எண்ணிக்கையிலான கழிப்பறைகள் மற்றும் அவற்றின் முறையான பராமரிப்பு: பள்ளிவளாக தூய்மை. மாணவர்கள் உணவருந்த சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை.


பள்ளியின் பசுமைச் சூழல், பள்ளி காய்கறித் தோட்டம் மற்றும் அதன் பயன்பாடு நூலக பயன்பாடு ஆய்வக பயன்பாடு ஆகியவற்றையும் மதிப்பிட்டு விருதுக்குரிய பள்ளியை தெரிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விருதுக்கான குழு அமைத்தல்


சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருதுக்கான பரிந்துரைகளை வழங்கிட ஏதுவாக மாவட்ட / மாநில அளவில் பின்வரும் தேர்வு குழுவினை கீழ்கண்டவாறு அமைத்திட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்டத் தேர்வுக் குழு

  • முதன்மைக் கல்வி அலுவலர்
  • முதல்வர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 
  • தலைமையிடத்து மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)
  • தலைமையிடத்து மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)
  • மூத்த வட்டாரக் கல்வி அலுவலர்


மாநில தேர்வுக் குழு

  • பள்ளிக் கல்வி இயக்குநர்
  • தொடக்கக் கல்வி இயக்குநர்
  • இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
  • தொடக்கக் கல்வி இணை இயக்குநர்.(நிர்வாகம்).
  • பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டு  நலப்பணித் திட்டம்)



மேலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாவட்டத் தேர்வு குழு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அளவீட்டின் முறையின் அடிப்படையில் விருதுக்கு தகுதியான பள்ளிகளை 1:2 என்ற விகிதத்தில் தெரிவு செய்து மாநில மாவட்ட தேர்வு குழுவிற்கு பரிந்துரைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்வு குழு மற்றும் மாவட்ட தேர்வுக் குழுவின் பரிந்துரை பள்ளிகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் அடிப்படையில் பேராசிரியர் அன்பழகன் விருதுக்குரிய பள்ளிகளை மாவட்ட வாரியாக தெரிவு செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட தேர்வுக்குழு அரசு தொடக்க அல்லது நடுநிலைப் பள்ளிகளில் ஏதேனும் இரண்டு மற்றும் அரசு உயர்நிலை அல்லது மேல்நிலை பள்ளிகளில் ஏதேனும் இரண்டு என மொத்தம் ஒரு மாவட்டத்திற்கு தகுதியான 4 பள்ளிகளை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு படிவத்தின் விவரப்படி தேர்வு செய்து கருத்துருக்களை 13.03.2026 க்குள் அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.


இயக்குநர்


1) பார்வை(3)ல் காணும் அரசாணையின் நகல்

2) அடைவுத்திறன் மதிப்பீட்டு படிவம்


பெறுநர்


1) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகள்

2) அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)


நகல்


1) இயக்குநர். தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை 6.

2) அரசு செயலாளர், பள்ளி கல்வித் துறை தலைமைச் செயலகம். சென்னை 9


Environmental Awards 2024 - Website Address to apply



 சுற்றுச்சூழல் விருதுகள் 2024 : செய்தி வெளியீடு எண் 2545, நாள் : 25.10.2025


Environmental Awards 2024 - Website Address to apply



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Indulekha Bringha, Ayurvedic Hair Oil, 250ml+250ml, for Hair Fall Control, with Amla & Coconut Oil, with Comb Applicator (Pack of 2)

Offer Price: Rs.778


Bundle List Price: ₹1,998

Combo Price: ₹778

You Save: ₹1,220 (61%) 


Amazon வலைதள முகவரி இணைப்பு : 

https://amzn.to/47c2PH6


தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கலைமாமணி விருது பெற்றவர்கள்



 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கலைமாமணி விருது பெற்றவர்கள் பட்டியல் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


 List of Kalaimamani Awardees for the years 2021, 2022 and 2023 - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது

 மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது 


AWARD OF GANDHI ADIGAL POLICE MEDAL TO FIVE POLICE PERSONNEL FOR THEIR OUTSTANDING WORK IN PROHIBITION ENFORCEMENT




அன்பாசிரியர் விருதுகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு

 அன்பாசிரியர் விருதுகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 


Post by Minister Anbil Mahesh presenting the Anbaasiriyar awards


இந்து தமிழ் திசை மற்றும் ராமராஜ் காட்டன் நிறுவனங்கள் இணைந்து “அன்பாசிரியர்” விருது வழங்கும் விழாவை திருச்சியில் ஒருங்கிணைத்திருந்தது.


குழந்தைகளை சிந்திக்க வைத்து நல்ல மனிதர்களாக இந்த சமுதாயத்திற்கு வழங்கும் ஆசிரியப் பெருமைகளைப் பாராட்டி அன்பாசிரியர் விருதுகள் வழங்கினோம்.



விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 2025-26ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதிற்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சித்தலைவர்



 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 2025-26ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,அவர்கள் தகவல்



>>> அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ் வளர்ச்சித்துறையின் 73 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

 


தமிழ் வளர்ச்சித்துறையின் 73 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்


தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது (ரூ.2 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்க பதக்கம்), 2025-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது (ரூ.10 லட்சம் பரிசு ), இலக்கிய மாமணி விருது (ரூ.5 லட்சம் பரிசு), தமிழ்த்தாய் விருது (ரூ.5 லட்சம்), கபிலர் விருது (ரூ.2 லட்சம்) உட்பட 73 விருதுகளுக்கும் தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


இதற்கான விண்ணப்ப படிவத்தை பின்வரும் இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.tamilvalarchithurai.tn.gov.in/awards https://awards.tn.gov.in www.tamilvalarchithurai.tn.gov.in இத்தகவலை தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:


தமிழ்மொழி, பண்பாட்டு வளா்ச்சிக்கும் தொண்டாற்றுபவா்களுக்கும், தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. 2026 ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, நிகழாண்டுக்கான (2025) மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது, முத்தமிழறிஞா் கலைஞா் விருது, பெருந்தலைவா் காமராஜா் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, பேரறிஞா் அண்ணா விருது, தமிழ்த்தாய் விருது, இலக்கிய மாமணி விருது உள்ளிட்ட 73 விருதுகளுக்கும் தகைமையும் தொண்டறமும் பூண்ட தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தமிழறிஞா்கள் மேலே உள்ள இணையதளத்தில் 

விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து 'தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை 600008' என்ற முகவரிக்கு செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களோடு அனுப்ப வேண்டும்.


தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகங்களின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


கூடுதல் விவரங்களுக்கு 044- 28190412, 044- 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது

 சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, தேனி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கினார் முதலமைச்சர்



Perasiriyar Anbazhagan Award for Excellent Schools - G.O. (Ms) No: 34, Date : 12-02-2025 - Attachment: DSE Proceedings & Forms


சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது - அரசாணை (நிலை) எண்: 34, நாள் : 12-02-2025 வெளியீடு - இணைப்பு: பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 010421/ எம்2/ இ2/ 2025,  நாள்: 18-02-2025 & படிவங்கள்


Perasiriyar Anbalagan Award for Excellent Schools - Ordinance G.O. (Ms) No: 34, Date : 12-02-2025 Released - Attachment: Director of School Education Proceedings Rc.No : 010421/ M2/ E2/ 2025, Date: 18-02-2025 & Forms



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தெளிவான படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



"Perasiriyar Anbazhagan Award" for Best Schools - DSE Proceedings & Form



பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - "பேராசிரியர் அன்பழகன் விருது" - சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக்கோருதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 010421/ எம்2/ இ2/ 2025,  நாள்: 18-02-2025 &  படிவம் 



"Perasiriyar Anbazhagan Award" for Best Schools - Request for Selection and Referral of Eligible Schools - Regarding - Proceedings of Director of School Education Rc.No. : 010421/ M2/ E2/ 2025, Date: 18-02-2025 & Form



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Online Interview & Teaching Efficiency Test Dates for Best Science Teacher Award Applicants


 சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தோருக்கு Online Interview &Teaching Efficiency Test நடைபெறும் நாட்கள் அறிவிப்பு


Notification of Online Interview & Teaching Efficiency Test Dates for Best Science Teacher Award Applicants



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Sahitya Akademy Award to A.R Venkatachalapathy



ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது


Sahitya Akademi Award to A.R.Venkatachalapathy


2024ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்படுகிறது.


'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' ஆய்வு நூலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு.


எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு


"திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.


வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.


ஆளுநர் விருதுகள் Governor Awards 2024 : விண்ணப்பங்கள், பரிந்துரைகளை அனுப்பலாம் - தலா ரூ.5 இலட்சம் பரிசுத்தொகை...



ஆளுநர் விருதுகள்  Governor Awards 2024 : விண்ணப்பங்கள், பரிந்துரைகளை அனுப்பலாம் - தலா ரூ. 5 இலட்சம் பரிசுத்தொகை...


'சமூக சேவை', 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தலா நான்கு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


Applications invited for Tamil Nadu Governor Awards 2024 - Each Rs. 5 Lakhs Cash Award...


தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக "ஆளுநர் விருதுகள் 2024"-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அறிமுகப்படுத்திய இந்த விருதுகள், 'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பங்கள் தலைசிறந்த நிபுணர்கள் அடங்கிய குழுவால் பரிசீலிக்கப்படும். விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 09, 2024 மாலை 05:00 மணி.


'சமூக சேவை', 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தலா நான்கு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நிறுவனங்கள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் தொண்டு நிறுவனத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரொக்கப் பரிசும், விருதும் மற்றும் தனிநபர் பிரிவில் தேர்தெடுக்கப்படும் நபருக்கு ரூபாய் இரண்டு இலட்சம் ரொக்கப் பரிசும், விருதும் தமிழ்நாடு ஆளுநரால் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26, 2025) வழங்கப்படும்.



தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சுயமாக பரிந்துரைக்கலாம். ஓய்வு பெற்ற இந்திய மற்றும் தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள், அரசு செயலாளர்கள், அரசு இணை செயலாளர்கள், இந்திய அரசு, தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட இரு பிரிவுகளில் சிறந்த வகையில் பணியாற்றிய தகுதியான தனிநபர்கள் / நிறுவனங்களை பரிந்துரைக்கலாம். விண்ணப்பதாரர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்கள் அந்தந்தத் துறையில் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 10 வருட காலத்திற்கு சிறப்பான சேவையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.



விண்ணப்பங்களை, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இணையதளத்தில் (https://tnrajbhavan.gov.in/) வெளியிடப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து, awardsrajbhavantamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் அனுப்பிவைக்க வேண்டும்.



மேலும், விண்ணப்பத்துடன் துணை ஆவணங்களை இணைத்து, "ஆளுநரின் துணைச் செயலாளர் மற்றும் கணக்காயர், ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை, கிண்டி, சென்னை - 600 000'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:


“வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம்” Anna Award for act of bravery - அரசாணை மற்றும் நிபந்தனைகள் G.O.MS.NO. 333, Dated 12-02-1980...

 


“வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம்” Anna Award for act of bravery - அரசாணை மற்றும் நிபந்தனைகள்...


அண்ணா பதக்கம் 

Award for act of bravery


அரசாணை (நிலை) எண். 333, நாள் : 12-02-1980...

...

அண்ணா பதக்கம்

1.  G.O.MS.NO. 333,  Dated 12-02-1980...


>>> அரசாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அண்ணா பதக்கம்

i. இவ்விருது பதக்க வடிவில் இருக்கவேண்டும். “வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம்” என பெயரிடப்பட்டிருக்க வேண்டும்.


ii. இப்பதக்கம் வட்ட வடிவத்தில் தங்க முலாம் பூசிய வெள்ளியால் (3/3 விட்ட அளவில்) தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பதக்கத்திற்கான செலவு ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) ஆக இருக்க வேண்டும்.


iii. இப்பதக்கத்துடன் கூடுதலாக ரூ.1.00 லட்சத்திற்கான (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் விருதாளருக்கு வழங்கப்படவேண்டும்.


iv. இப்பதக்கம் எந்தவொரு குடிமக்களுக்கும் வயதினை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினைக் காப்பதில் அவர் ஆற்றிய வீர தீர செயலுக்காக வழக்கப்படவேண்டும்.


v. மாவட்ட ஆட்சித் தலைவர்களின் பரிந்துரைகள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்படும். பரிந்துரைகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் அரசுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.


பொது மக்கள் பிரிவில் மூவருக்கும், அரசு ஊழியர்கள் பிரிவில் மூவருக்கும் என ஆறு நபர்களுக்கு இப்பதக்கம் வழங்கலாம் என்பதற்கு அரசாணை (நிலை) எண்.734, பொது (பொது-1)த் துறை, நாள் 01.04.1986- ல் மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவின் போது வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-09-2026

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்