கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.06.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.06.2022 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: மானம்


குறள் : 965

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.


பொருள்:

குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்


பழமொழி :

Measure thrice before you cut once


ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்



இரண்டொழுக்க பண்புகள் :


1. பெற்றோர் ஆசிரியர்கள் நான் நலம் பெறவே ஆலோசனை கூறுவர். கண்டிப்பாக அந்த அறிவுரைகள் படி நடக்க முயற்சி செய்வேன். 


2. நல்ல பண்புகள் கடை பிடித்து நல்ல செயல்கள் நாள் தோறும் செய்வேன்


பொன்மொழி :


வீழ்ந்தாலும் எழும் சூரியன் போல, படிப்படியாய் ஊன்றி மிதித்து முன்னேறு! ஒருநாள் நீயும் வெற்றியாளனே!


பொது அறிவு :


1.எந்த விட்டமின் ஈரலில் பாதுகாக்கப்படும்? 


விட்டமின் ஏ. 


2. மனித உடலில் கெட்டியான பகுதி எது? 


பற்களின் இனாமல்.


English words & meanings :


Identical - similar in every detail. Adjective. ஒத்த வேறு பாடு இல்லாத. பெயரடைச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


வாழைப்பூ நரம்புகளை வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைக் தணித்து புத்துணர்வைக் கொடுக்கும்.


NMMS Q 10


AB = 0; BC = 2; CD = 6 எனில் ABC இன் மதிப்பு என்ன? விடை: 0


ஜூன் 24


கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள்


கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சேரமான் காதலி  என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.


நீதிக்கதை


தவளையின் வெற்றி


வெகு காலத்திற்கு முன்பு சிறிய தவளைகள் பல ஒன்று சேர்ந்து ஒரு பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தன. மிகப்பெரிய கோபுரம் ஒன்றில் ஏறி அதன் உச்சியை அடைய வேண்டும் என்பது தான் பந்தயத்தின் இலக்கு. 


இந்தப் பந்தயத்தைப் பார்ப்பதற்காகவும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் அந்த பெரிய கோபுரத்தைச் சுற்றி மிகப்பெரும் கூட்டம் கூடி விட்டது. 


போட்டி ஆரம்பமாகி விட்டது. உண்மையிலேயே அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவருக்குக் கூட அந்த சிறிய தவளைகளால் கோபுரத்தின் உச்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. 


கூட்டத்திலிருந்தவர்கள் பேசிக்கொண்டனர். வழி மிகவும் கடினமானது. 


இந்தச் சிறிய தவளைகளால் நிச்சயமாக உச்சியை அடைய முடியாது. 


வெற்றிபெற ஒரு சிறிய வாய்ப்பு கூட அவற்றுக்குக்கிடையாது. கோபுரத்தின் உயரம் மிகவும் அதிகம். 


பார்வையாளர்களின் இத்தகைய பேச்சைக்கேட்ட அந்த சிறிய தவளைகள் ஒன்றன்பின் ஒன்றாக கோபுரத்தின் மேலே ஏற முடியாமல் சரிய ஆரம்பித்தன. ஒரு ஜான் ஏறினால் ஒரு முழம் சறுக்கியது. தொடர்ந்து உற்சாகத்துடன் இருந்த ஒரு சில தவளைகள் மட்டும் மேலும் அதிக உயரத்திற்கு ஏறிக் கொண்டிருந்தன. 


கூடியிருந்த கூட்டம் தொடர்ந்து கூக்குரலிட்டது. 


இது மிகவும் கடினமான விஷயம். உங்களில் ஒருவரும் உச்சியை அடையப்போவதில்லை. 


உற்சாகமாக இருந்த அந்த சிறிய தவளைகளில், சில மிகவும் சோர்வடைந்து தங்கள் முயற்சியைக் கைவிட்டு விட்டு கீழ் நோக்கி இறங்கத் தொடங்கின. 


ஒரே ஒரு தவளையைத் தவிர அனைத்து தவளைகளும் தங்கள் முயற்சியை கைவிட்டு விட்டன. அது மட்டும் தொடர்ந்து மேலே மேலே ஏறிக்கொண்டே இருந்தது. அது தன் முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை. அது மிகுந்த பிரயத்தனத்துடன் கோபுரத்தின் உச்சியை சென்றடைந்தது. 


மற்ற அனைத்துத் தவளைகளும் அந்த ஒரு தவளையால் மட்டும் எப்படி கோபுரத்தின் உச்சியை அடைய முடிந்தது என்பதைத் தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாக இருந்தன. 


போட்டியில் கலந்து கொண்ட தவளைகளில் ஒன்று, வென்ற தவளையிடம் உனக்கு மட்டும் கோபுரத்தின் உச்சியை அடைவதற்கு உண்டான பலம் எங்கிருந்து வந்தது? என்று கேட்டது. 


வெற்றி பெற்ற தவளை கூறியது இவர்கள் சொல்வது எதுவும் என் காதில் விழவில்லை என் எண்ணம் முழுதும் உச்சியை அடைவது மட்டுமே...


இன்றைய செய்திகள்


24.06.22


🔆 தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி தென்னூரில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு வங்கி என்ற முன்னோடித் திட்டம்  தொடங்கப்பட்டது.


🔆கடலூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்.


🔆தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை கரோனா வேகமாக பரவி வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.


🔆போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாரிசுகள் தொழிற்கல்வி கூடங்களில் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.


🔆மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடகா விண்ணப்பம் நிராகரிப்பு - மேலாண்மை ஆணைய கூட்டம் தள்ளிவைப்பு.


🔆அசாம் வெள்ளத்தில் 89 பேர் உயிரிழப்பு - 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு.


🔆இலங்கை பொருளாதாரம் சீர்குலைவு; கச்சா எண்ணெய் வாங்க நிதி இல்லை - பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு.


🔆புரோ ஆக்கி லீக் தொடர்: வெற்றியோடு நிறைவு செய்தது இந்திய அணி.


🔆இலங்கைக்கு எதிரான முதல் டி20 : 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி வெற்றி.


Today's Headlines


🔆For the first time in Tamil Nadu, a pilot project called Breakfast Bank was launched at Subbaiah Memorial Middle School in Trichy Tennur.


🔆 Explosion at firecracker factory near Cuddalore: 3 got killed: Three got injured.


 🔆Health Minister Mr.M. Subramanian has warned that PA4 and PA5 corona are spreading rapidly in Tamil Nadu.


 🔆The Municipal Transport Corporation has announced that the heirs of the employees of the Transport Corporation can apply for admission under the reservation in the vocational halls.


🔆 Rejection of Karnataka application for construction of Meghathattu Dam - Postponement of Management Commission meeting.


 🔆Assam floods kill 89 people and  more than 55 lakhs people injured


 🔆Sri Lankan economic downturn;  No funds to buy crude oil  announced by P M Ranil Wickremesinghe


  🔆Indian team won the pro Hockey league.


 Indian women's team won the first T20 by 34 runs against Sri Lanka.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...