கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: மானம்


குறள் : 969

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.


பொருள்:

தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.


பழமொழி :

Good wares find a quick market.

உழுகிற மாடு உள்ளூரில் விலை போகாதா?


இரண்டொழுக்க பண்புகள் :


1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.


 2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.


பொன்மொழி :


எதிரி ஆயுதம் ஏந்தாத வரை விமர்சனம் என்பதே ஆயுதம்! அவன் ஆயுதம் ஏந்திவிட்டால், ஆயுதம் என்பதே விமர்சனம்! - கார்ல் மார்க்ஸ்


பொது அறிவு :


1.சாகும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும் உயிரினம் எது ? 


மீன். 


2. மண்டையோடும் அலகும் ஒரே எலும்பால் அமையப்பெற்ற பறவை எது? 


மரங்கொத்தி.


English words & meanings :


Knuckle - the bones where your fingers join the rest of your hand. noun. கைவிரல் கணுக்கள். பெயர்ச் சொல்


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2022 - School Morning Prayer Activities...



வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்த அளவை பராமரிக்கிறது. இது தமனிகளில் உள்ள அழுத்தத்தையும் குறைத்து நீரேற்றமாக வைத்திருக்கிறது.





NMMS Q 12


+' என்பது ' - ' மற்றும் ' × ' என்பது ' ÷ ' எனில், (8+5)×3 ; 


விடை: 1


நீதிக்கதை


எண்ணம் போல் வாழ்வு


ஒரு ஊரில் குமாரசாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் முட்டாள் என்றும், பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர். இதைக் கேட்டுக்கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கேட்டார்.


கடவுளை நினைத்து தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார் என்று அந்த முனிவர் கூறினார். குமாரசாமி கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு, கடவுள் அவர் எதிரில் தோன்றினார். பக்தனே, உனக்கு என்ன வரம் வேண்டும்? கடவுள் கேட்டார். தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார்னு அந்த முனிவர் சொன்னார். மன்னார்சாமி, என்ன வரம் வேண்டும், கேள் என்றார் கடவுள். அதான் கேட்டேனே வரம்... அதை கொடு... என்றார் மன்னார்சாமி.


இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் பிரத்யட்சம் செய்துவிட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும். அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும். என்ன செய்யலாம்? கடவுள் யோசித்தார். பக்தா, இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதையே வரமாகக் கொடுக்கின்றேன் பெற்றுக்கொள். அய்...யய்ய....யோ... நான் ஒன்றும் நினைக்கவே இல்லையே! அதான்... என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது? பலனை நோக்கிய உழைப்புதான் உயர்வைத் தரும்! எண்ணம் போல் வாழ்வும் கூட, மனதில் நல்லதை நினைப்போம் நல்வழி செல்வோம்.


இன்றைய செய்திகள்


28.06.22


◆ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையை நேற்று முதல்வரிடம் சமர்பித்தனர்.


◆தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், மாணவர்கள் 84.86 சதவீதம், மாணவிகள் 94.99 சதவீதம் என மொத்தம் 90.07 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


◆கரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக் கவசம்அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.


◆மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு ஒரே நாளில் சுமார் 96 டன் அளவிலான நிவாரண பொருட்கள் விமானப்படை விமானங்கள் மூலம் வழங்கப்பட்டன.


◆பாகிஸ்தான், சீனாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் சரியான பதிலடி கொடுக்க முடியும்: விமானப் படை தலைமை தளபதி சவுத்ரி உறுதி.


◆உக்ரைன் மீது போர் தொடுத்ததால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையால் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் ரஷ்யா, ஒரு நூற்றாண்டில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக தனது வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


◆உலக கோப்பை வில்வித்தை: இந்திய பெண்கள் அணிக்கு வெள்ளிப்பதக்கம்.


◆விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடக்கம்.



Today's Headlines


◆ The commission set to ban internet games including online rummy under the head of the retired Judge K. Chandru submitted its report to the Chief Minister yesterday.


 ◆ The results of Class 11 general examination in Tamil Nadu were released yesterday.  Of these, 84.86 percents were male students and 94.99 percent were female students, with a total pass rate of 90.07 percent.


  ◆ As the number of corona cases increases, the health department has warned that those who do not wear masks in public places across Tamil Nadu will be fined.


 ◆ About 96 tonnes of relief items were delivered by the air force to the flood-hit states of Assam and Meghalaya in a single day.


 ◆ If Pakistan, and China threaten us we can counter flow it: Air Chief Marshal Chaudhry assures.


◆ Russia, which has been hit hard by US and European economic bans due to its war on Ukraine, has failed to give up its foreign debt for the first time in a century.


 ◆ World Cup Archery: Silver medal for the Indian women's team.


 ◆ Wimbledon tennis started yesterday in London.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...