கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.07.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.07.2022 - School Morning Prayer Activities...

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பெருமை

குறள் : 978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பொருள்:
பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்

பழமொழி :

when you obey the superior, you instruct your inferior.


முன் ஏர் போன வழியேதான் பின் ஏறும் போகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோல்வி என்பது வெற்றியின் முதல் படி எனவே தோல்வி கண்டு துவள மாட்டேன்.

 2. கோபம் என் அறிவை மயக்கும் எனவே கோபம் பட மாட்டேன்.

பொன்மொழி :

உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு.
அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது.
உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை.
- புத்தர்

பொது அறிவு :

1. அனைத்து தரப்பு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தபிரிவு எது ? 

O பிரிவு. 

2. மிகக் கனமான மூளை உள்ள மிருகம் எது? 

பன்றி.

English words & meanings :

observant - good at noticing things around you. Adjective. பொருள்களைக் கூர்ந்து கவனிக்கிற, நுண்காட்சித் திறமுடைய. பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு :

மஞ்சளில் காணப்படும் மிக முக்கியமான பொருள் குர்குமின். குர்குமின் வீக்கம் போன்ற உடல் குறைபாடுகளை போக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. 

NMMS Q 16 :

A என்பவர் B யின் சகோதரி. C ஆனவர் B யின் தாய், C ன் தந்தை D. D- இன் தாய் E எனில் D க்கு A என்ன உறவு? 

விடை : பேத்தி

ஜூலை 04


குல்சாரிலால் நந்தா அவர்களின் பிறந்தநாள்



குல்சாரிலால் நந்தா (Gulzarilal Nanda; 4 ஜூலை 1898 – 15 ஜனவரி 1998) இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞரும் ஆவார். இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964 ல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966 ல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.

இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997ல் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.


மேரி க்யூரி அவர்களின் நினைவுநாள்




மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 71867 – ஜூலை 41934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம்பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.


நீதிக்கதை

வெள்ளை யானை பறந்தது

மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வைக் குறைந்து போனது. வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசினால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக மன்னன், அறிவித்த செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது. 

குருநாதா! வெள்ளை யானை கூட இருக்கிறதா? எனக் கேட்டான், மட்டி. தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன். 

குருவே! அந்த யானையைப் பிடித்து வர தைரியம் இருக்கிறதா? என்றான், முட்டாள். உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது! கோழையே! என்னால் முடியாத காரியம் எதுவும் இல்லை? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் நான் போக விரும்பவில்லை, என்றார்

குருவே! வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானையின் மேல் சுண்ணாம்பினால் வெள்ளை அடித்து விட்டால், கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்றான், மூடன். 

ராஜாவுக்கு சரியாகக் கண் தெரியததால்! நம் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாது! ஆளுக்கு ஒரு ஊர் பரிசாகக் கிடைக்கும் என்று மகிழ்ந்தார்கள். பலே, பலே! இப்போதுதான் உங்கள் மூளை நன்றாக வேலை செய்கிறது! எனப் பாராட்டினார், பரமார்த்தர். 

யானைப் பாகனிடம் சென்று, ஒருநாளைக்கு மட்டும் உங்கள் யானையை வாடகைக்குக் கொடுங்கள். தேவையான பணம் தருகிறோம். நீங்களும் கூடவே வரவேண்டும், என்று கேட்டதும் பணத்துக்கு ஆசைபட்டு சரி என்றான். 

நன்றாக இருட்டிய பிறகு, பானை பானையாகச் சுண்ணாம்பு எடுத்து அபிஷேகம் செய்வது போல, யானையின் மேல் ஊற்றி கொஞ்சம் சுண்ணாம்பை வாரி எடுத்து, பயந்து கொண்டே யானையின் வாயில் பூசிவிட்டனர் சீடர்கள். பரமார்த்தரும் வரி வரியாக வெள்ளை அடித்தார். 

குருவே! யானை கருப்பாக இருக்கும்போது தந்தம் வெள்ளையாக இருக்கிறது, அதுபோல யானை வெள்ளையாக இருந்தால், தந்தம் கருப்பாக அல்லவா இருக்க வேண்டும்? எனக் கேட்டான், பாகன். ஆமாம்! சொல்வதும் சரி! என்று அடுப்புக்கரியால் தந்ததில் தேய்த்தான், முட்டாள். இது தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்தது என்பதை அரசன் நம்புவதற்கு இரண்டு இறக்கைகள் கட்டினார்கள். 

யானையைப் பார்த்த குரு, அற்புதம்! இது இந்திர லோகத்து யானையேதான்! என்றபடி அதன் தும்பிக்கையைத் தொட்டுக்கும்பிட்டார். மறுநாள், அரண்மனைக்கு முன்னால் மக்கள் ஜே ஜே என்று இருந்தனர். வெள்ளை யானையைப் பார்ப்பதற்காக மந்திரிகள் புடைசூழ மன்னனும் வந்தான். 

வெளியில் கட்டிய யானையைப் பார்த்த அரசன், அதிசயமாக இருக்கிறதே! இந்த யானையை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்? என்று கேட்டான். தேவலோகம் வரை சென்று இதைப் பிடிக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்! என்றான் மூடன். 

தந்தம் மட்டும் கருப்பாக இருக்கிறதே? என்று மந்திரி கேட்டதும், அது வைரம் பாய்ந்த தந்தம்! அப்படித்தான் இருக்கும்! என்றான் முட்டாள். திடீரென்று பலத்த காற்று அடித்ததும். உடனே யானையின் இறக்கைகள் பிரித்துக்கொண்டு கீழே விழுந்தன. உடனே பலத்த மழையும் பெய்தது. 

மழை நீரினால் யானையின் மீது உள்ள சுண்ணாம்பு எல்லாம் கரைந்து, வெள்ளை யானை கருப்பாக மாறியது. இதைப் பார்த்த குருவும், சீடர்களும் பயத்தால் நடுங்கினர்! பரமார்த்தரின் சாயம் வெளுத்தது, வழக்கம்போல் தண்டனைக்கு ஆளானார்கள். 

நீதி :
பிறரை ஏமாற்றுவது மிக பெரிய பாவம் ஆகும்.

இன்றைய செய்திகள்

04.07.22

* கூட்டுறவு அங்காடியில் ‘கருப்புக்கவுனி அரிசி’ விற்பனை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

*ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம்: ஜூலை 11 முதல் 16 வரை அவகாசம்.

* கீழமை நீதிமன்ற உத்தரவுகளை வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு.

* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

* ஐரோப்பாவிலிருந்து குரங்கு அம்மை நோயை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

* 3000 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையை முறியடித்தார் பாருல் சவுத்ரி.

* வெஸ்ட் இண்டீஸ்- வங்கதேசம் இடையேயான முதல் டி20 மழையால் பாதியில் ரத்து.

Today's Headlines

* Cooperative Department Secretary Radhakrishnan advised that the sale of 'Black Kavuni Rice' should be increased in the cooperative store.

  * Correction in Teacher Eligibility Test Application: time given from July 11 to 16.

 * Lower Court orders should be uploaded on the website - High Court order.

 * 16,103 new cases of corona infection were confirmed across India in the last 24 hours.

  * The World Health Organization says coordinated action should be taken to eliminate monkey measles from Europe.

  Parul Chowdhury broke the national record in the 3000m run.

  T20 first match against West Indies-Bangladesh got cancelled due to rain.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Google Meet for the month of November - Student Learning Survey Project - District Wise School Wise Teacher & Student Name List

 November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் - மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக ஆசிரியர்கள் & மாணவர்கள் பெயர் பட்டியல் Go...