கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.07.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.07.2022 - School Morning Prayer Activities...

  திருக்குறள் :

பால்:பொருட்பால் 

இயல்:குடியியல் 

அதிகாரம்: பெருமை 

குறள் : 980 

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். 

பொருள்:
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.

பழமொழி :

When the bow is too bent, it breaks.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.


இரண்டொழுக்க பண்புகள் :

1. தோல்வி என்பது வெற்றியின் முதல் படி எனவே தோல்வி கண்டு துவள மாட்டேன்.

 2. கோபம் என் அறிவை மயக்கும் எனவே கோபம் பட மாட்டேன்.

பொன்மொழி :

தீமையை நன்மையால் வெல்லுங்கள்.
பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.
- புத்தர்

பொது அறிவு :

1.ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது ?

இரும்பு

 2. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது?

மியான்மர்.

English words & meanings :

quackery - false or dishonest medical practice. Noun. போலி மருத்துவம். பெயர்ச்சொல்

ஆரோக்ய வாழ்வு :

குர்குமின் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை/ குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுவதோடு, இரத்தத்தில் காணப்படும் அதிகப்படியான கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது.

NMMS Q : 18

"Gun" என்பது " Soldier " என்பதுடன் தொடர்புடையது எனில் "Needle" என்பது _______ தொடர்புடையது. 

விடை: Tailor

நீதிக்கதை

எல்லாம் நன்மைக்கே

ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்துவிட்டது. வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான். 

வழக்கம்போல் அமைச்சர், அரசே! எல்லாம் நன்மைக்கே! என்றான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய். காவலர்களே! அமைச்சரைச் சிறையில் கொண்டு போய் அடையுங்கள் என்று உத்தரவிட்டான். காவலர்களும் அமைச்சரை சிறையில் அடைத்தனர். அப்போதும் அமைச்சர், எல்லாம் நன்மைக்கே! என்றார். நாட்கள் பல கடந்தன. 

வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான். அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான். 

அங்கு வந்த கோவில் பூசாரி அரசனை முழுமையாகச் சோதித்தான். பின்பு, காளிக்கு எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும். இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோம் என்றான். அரசன்! அரண்மனைக்கு வந்ததும் உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டான். நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் சொன்ன அரசன், சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மையை அறிந்தேன் என்றான். 

அரசே என்னைச் நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்களைப் பிரியாமலிருக்கும் நான், என்னைச் சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன் என்றார் அமைச்சர். 

நீதி :
எது நடந்தாலும் நல்லதையே நினைத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

06.07.22

◆தமிழகத்தில் காலரா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

◆2213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி.

◆"கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறை துள்ளி எழுந்துள்ளது. உயர் கல்வித் துறை புதிய உத்வேகத்தோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

◆முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20% பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இதுவரை வந்த விண்ணப்பங்களில் தகுதியானோரை அலசி ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்திய கடற்படை இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது.

◆மிக கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வரலாற்றில் இல்லாத இயற்கைப் பேரிடருக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் உள்ளாகியிருக்கிறது.

◆தங்கள் ஆராய்ச்சி குறித்து பொய் கூறுவது நாசாவுக்கு இது முதல் முறை அல்ல என்று சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

◆சென்னை மாவட்ட சூப்பர் டிவிசன் ஹாக்கி: மத்திய கலால் வரி அணி வெற்றி.

◆விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் அரையிறுதி சுற்றுக்கு சானியா மிர்சா - மேட் பாவிக் இணை அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

◆கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில்  இங்கிலாந்து அணி அபார வெற்றி.


Today's Headlines

 ◆Precautionary measures to prevent the spread of cholera in Tamil Nadu are serious: Minister M. Subramanian informed.

 ◆ 2213 High Court allowed Tamil Nadu government to purchase new buses.

 Tamil Nadu Chief Minister M.K.Stalin said, "The school education sector has grown in leaps and bounds in the last one year. The higher education sector is running with new enthusiasm."

 ◆The Indian Navy said that 20% of the first batch of Agni soldiers may be women.  The Indian Navy has shared this information based on the screening of eligible candidates in the applications received so far.

 ◆Sydney, Australia has been hit by an unprecedented natural disaster due to floods caused by heavy rains.

 ◆China has strongly criticized NASA saying it is not the first time that it has lied about its research.

 ◆Chennai District Super Division Hockey: Central Excise team won.

 ◆Sania Mirza - Matt Pavic advance to semi-finals of Wimbledon tennis mixed doubles.

 ◆England won the 5th and last Test match between England and India which was postponed last year due to Corona fear.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...