கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.07.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.07.2022 - School Morning Prayer Activities...

   

திருக்குறள் :


குறள் 987


பால் – பொருட்பால்

இயல் – குடியியல்

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால். விளக்கம்:


துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்



பழமொழி :

A man is known by the company he keeps.


 நம் நண்பர்களை வைத்தே நம்மை எடை போடுவார்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய்


 2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்


பொன்மொழி :


எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்


-சிசரோ



பொது அறிவு :


1.நமது நாக்கில் சுவை நரம்புகள் எத்தனை? 


3000 . 


2.பறவைகளில் மிக நீண்ட ஆயுளை உடையது எது? 


ஆந்தை.


ஆரோக்ய வாழ்வு :


சோயா சங்க் என்னும் மீல் மேக்கரில் காணப்படும் ஐசோ ஃப்ளேவோன்ஸ் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் ஆகியவை ஹாட் ஃப்ளாஷ், மனநிலை மாற்றங்கள் (மூட் ஸ்விங்) போன்ற மாதவிடாய் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.


மனதை அமைதியாகவும் புத்துணர்வாகவும் வைத்திருக்கச் செய்கிறது.


NMMS Q 28:


தேங்காயின் தாவரவியல் பெயர் : 


விடை: காக்கஸ் நியூசிபெரா


ஜூலை 20


அனைத்துலக சதுரங்க நாள் 


அனைத்துலக சதுரங்க நாள் (International chess day) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் வழிகாட்டலில் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.


1924 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதியன்று உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. இந்த நாளை அனைத்துலக சதுரங்க தினமாக கொண்டாடும் யோசனையை யுனெசுகோ முன்மொழிந்தது. இதன்படி சூலை 20 ஆம் நாள் அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையும் இந்நாளை அங்கீகரித்தது.



கிரிகோர் யோவான் மெண்டல்  அவர்களின் பிறந்த நாள்


கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.



மார்க்கோனி அவர்களின் நினைவுநாள்


மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.


நீதிக்கதை


நரியின் தந்திரம்


ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒரு கூட்டம் சேர்த்தது. எல்லா மிருகமும் வந்தது. முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டு, என் உடம்பை முகர்ந்து பார் எப்படி இருக்கு? ன்னு சொல் என்றது சிங்கம். குரங்கு வந்து முகர்ந்து பார்த்துவிட்டு வாசனை நல்லா இல்லீங்க கொஞ்சம் மோசமாத்தான் இருக்குன்னு சொல்லியது. 


சிங்கம் கோபமடைந்து என் உடம்பையா அப்படிச் சொல்றேன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு கீழே விழுந்துவிட்டது. அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டு. நீ வா வந்து பார்த்து சொல்லு என்றது. கரடி அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது. 


சிங்கத்தை முகர்ந்து பார்த்தது ஆகா! ரோஜாப்பூ வாசனை! ன்னு சொல்லுச்சு. பொய்யா சொல்றே? ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் கீழே விழுந்தது. அடுத்தப்படியா ஒரு நரியைக் கூப்பிட்டு. நீதான் சரியாச் சொல்லுவ! நீ வந்து சொல்லு என்றது. 


நரி குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்து மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்! என்று சொல்லி நரித் தந்திரமாக தப்பிக்கொண்டது. 


நீதி :

நரியின் தந்திரம் எல்லா மனிதர்களுக்கும் இருத்தல் வேண்டும்.


இன்றைய செய்திகள்


20.07.22


 💫அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 3.89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்.


 💫அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி; சான்றிதழ் சரிபார்ப்பில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பு: தமிழக பட்டதாரிகள் அதிர்ச்சி.


 💫நீட் விலக்கு குறித்த மத்திய சுகாதாரத் துறையின் கருத்துகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது.


 💫குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 99.18 சதவீத வாக்குகள் பதிவாகின. பிரதமர்  மற்றும் மாநில முதல்வர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள் இத்தேர்தலில் வாக்களித்துள்ளனர்.


 💫 வரலாறு காணாத வெப்ப அலை: போர்ச்சுக்கல், ஸ்பெயினில் 1000-ஐ தாண்டிய உயிரிழப்பு.


 💫அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழக என்சிசி மாணவர்கள் பதக்கப் பட்டியலில் 2-ம் இடம் பிடித்தனர்.


 💫உலக தடகள 100 மீட்டர் ஓட்டம்: ஜமைக்கா வீராங்கனை பிரேசர் 5-வது முறையாக 'சாம்பியன்'.


 💫உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் மைராஜ் கான் தங்கம் வென்று சாதனை.



Today's Headlines


 💫3.89 lakh students applied for admission in government arts and science colleges.


  💫Govt Polytechnic Lecturer Job;  Out-of-state participation in certificate verification: Tamil Nadu graduates shocked.


 💫 The Central Government has replied that the comments of the Central Health Department regarding NEET exemption have been sent to the Tamil Nadu Government.


  💫The presidential election was held yesterday.  In this, 99.18 percent of votes were recorded.  Prime Minister and State Chief Ministers, MPs, and MLAs have voted in this election.


 💫 Record heatwave: Death toll exceeds 1,000 in Portugal, Spain


 💫 Tamil Nadu NCC students stood 2nd in the medal list in the All India Shooting Competition.


 💫 World Athletics 100m: Jamaican Fraser wins 5th 'Champion'


  💫 Shooting World Cup: India's Mairaj Khan sets a record by winning gold

 



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...