கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PENSIONERS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PENSIONERS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Months for Pensioners to submit life certificate


ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டிய மாதங்கள்


Months for Pensioners to submit life certificate



 💢 அரசாணை எண்.165 / நிதி [ஓய்வூதியம்] துறை தேதி 31.05.2023.


✅ ஓய்வூதியர்கள்  

வாழ்நாள் சான்றிதழ் 

அளிக்க வேண்டிய மாதங்கள்.

[Grace Period மாதம் உட்பட]:


🌎 ஓய்வுபெற்ற மாதம்:


💢ஏப்ரல் எனில் ஏப்ரல் & மே.


💢மே எனில் மே & ஜூன்.


💢 ஜூன் எனில் ஜூன் & ஜூலை. 


💢ஜூலை எனில் ஜூலை & ஆகஸ்ட். 


💢 ஆகஸ்ட் எனில் ஆகஸ்ட் & செப்டம்பர்.  


💢 செப்டம்பர் எனில் செப்டம்பர் & அக்டோபர்.


💢அக்டோபர் எனில் அக்டோபர் & நவம்பர். 


💢 நவம்பர் எனில் நவம்பர் &  டிசம்பர்.


💢டிசம்பர் எனில் டிசம்பர் & ஜனவரி.


💢ஜனவரி எனில் ஜனவரி & பிப்ரவரி.


💢பிப்ரவரி எனில் பிப்ரவரி & மார்ச்.


💢மார்ச் எனில் மார்ச் & ஏப்ரல்.


🌷இதனை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.


🌷பிற ஓய்வூதிய நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.


🌎குறிப்பு:

✅ஓய்வுபெற்ற மாதம் மற்றும் அதன் அடுத்த மாதம் [Grace Period] சேர்க்கப்பட்டுள்ளது.


✅அரசாணை பாரா 6 (ii)ன் படி 

ஓய்வூதியம் பெறுபவர் சேவை மற்றும் குடும்ப ஓய்வூதியம் [இரட்டை ஓய்வூதியம்] இரண்டையும் பெறும்போது, ​​மஸ்டரிங் மாதம், ஒவ்வொரு ஆண்டும் சேவை ஓய்வூதியதாரரின் ஓய்வு மாதமாக இருக்கும். 


💢இந்த கால அளவுக்குள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்காவிடில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்படும்.



அரசாணை (நிலை) எண். 165, நாள்: 31-05-2023 - ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் - ஓய்வூதியர் நேர்காணல் ( மஸ்டரிங் ) செயல்முறையை எளிதாக்குதல் - தமிழ்நாடு மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியம் தொடங்கும் மாதத்தில் வருடாந்தச் சேகரிப்பு - ஆணைகள் - வெளியிடப்பட்டது 


G.O. Ms. No. 165 Dt: May 31, 2023  - PENSION/ FAMILY PENSION – Simplification of mustering process - Tamil Nadu State Government Pensioners - Annual Mustering of Pensioners/Family Pensioners during the month of their retirement/commencement – Orders - issued



>>> Click Here to Download G.O. Ms. No. 165, Datedt:  31-05-2023...


Important Announcement Regarding Pensioners Identity Card...



 ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து முக்கிய அறிவிப்பு...


Pensioner ID card in Tamil Nadu: தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரு வகையை சார்ந்த அரசு ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது சார்ந்து முக்கியமான தகவல் வந்து வெளியாகி உள்ளது.


Pensioners Identity Card Latest Updates: ஓய்வூதியர் அடையாள அட்டை குறித்துக் வெளியாகி உள்ள அறிவிப்பு என்பது எந்த வகையினை சார்ந்த ஓய்வூதியர்களுக்கு  பொருந்தும். இதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும். இந்த அடையாளத்தை பெற விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் போன்ற விவரங்களை குறித்து தெரிந்துக்கொள்வோம்.


ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய அறிவிப்பு...


மத்திய மற்றும் மாநில அரசின் சார்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிவிப்புகளும், அவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிமுறை மாற்றங்கள் சார்ந்தும் தகவல்கள் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 


டிஓடி (DoT) ஓய்வூதியர்கள் அனைவரும் ஓய்வூதியர் அடையாள அட்டை (பென்ஷனர்ஸ் ஐடென்டிட்டி கார்டு - Pensioners Identity Card) பெற விண்ணப்பம் செய்வது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. 


ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகளை (Pensioners Identity Card) வழங்குவதாக பிஆர்.சிசிஏ (DoT தமிழ்நாடு சர்க்கிள் (Tamil Nadu Circle) அலுவலக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.


ஓய்வூதியர் அடையாள அட்டைக்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? 

ஓய்வூதியர்கள் அனைவரும் உரிய படிவத்தை பூர்த்தி செய்து அந்த படிவத்துடன் இரண்டு போட்டோ அனுப்பப்பட வேண்டும்.


ஒன்று அந்த படிவத்தில் ஒட்டப்பட வேண்டும் மற்றொன்று தனியாக ஒரு கவரில் போட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். 


இரண்டாவதாக பிபிஓ (PPO) நகல் அனுப்ப வேண்டும். 


மூன்றாவதாக ஆதார் கார்டு நகல் இணைத்து அனுப்ப வேண்டும். 


ஓய்வூதியர் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து கீழே கொடுக்கபட்டுள்ள விலாசத்தில் இருக்கக்கூடிய அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது ஸ்பீடு போஸ்ட் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிறுத்தப்படு உள்ளது. 


ஓய்வூதியர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? 


டிஓடி ஓய்வூதியர்கள் அனைவரும் ஓய்வூதியர் அடையாள அட்டை பெற பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் தேவையான அந்த மூன்று ஆவணங்களை கீழே காணக்கூடிய முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலம் சமர்ப்பிக்கலாம். 


ஓய்வூதியர் அடையாள அட்டை விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி எது?


CCA -Pension Office Address

Deputy Controller of Communication

Accounts (Pension), DOT Cell, 

Office of Principal CCA, 

Tamil Nadu Circle, 

TNT Complex, 1st Floor, 

No-60, Ethiraj Salai, 

Egmore,

Chennai-600008.



மாவட்ட கருவூல அலுவலர் தலைமையில் வருமான வரி பிடித்தம் தொடர்பாக நடைபெற்ற ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகளுக்கான கூட்டத்தின் முக்கிய விவரங்கள்...

 

மாவட்ட கருவூல அலுவலர் தலைமையில் வருமான வரி பிடித்தம் தொடர்பாக நடைபெற்ற ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகளுக்கான கூட்டத்தின் முக்கிய விவரங்கள்...


 இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கருவூல அலுவலர் தலைமையில் வருமான வரி பிடித்தம் தொடர்பாக ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்றது..


 முக்கிய விவரங்கள்:


1. ஓய்வூதியம் மாதம் 62500 கீழ்.... வருடத்திற்கு 7 லட்சத்து ஐம்பதாயிரம்  ரூபாய்க்கு கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு... புதிய திட்டத்தின் கீழ் வருமான வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

2. மாதம் ரூபாய் 62501 க்கு மேல்... வருடத்திற்கு ஏழு லட்சத்தி 50 ஆயிரத்து ஒன்றுக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.

3. இதன்படி மூன்று லட்சத்திற்கு மேல் ஆறு லட்சத்திற்குள் 5%

4. ஆறு லட்சத்துக்கு மேல் 9 லட்சம் வரை 10%

5. ஒன்பது லட்சம் முதல் 12 லட்சம் வரை 15 சதவீதம்

6. 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20 சதவீதம்

7. இவ்வாறு கூடிக்கொண்டே போகும்

8. அனைத்து ஓய்வூதியம் பெறும் அலுவலர்களும்.. பான் நம்பர்... ஆதார் நம்பர்.. ரேஷன் கார்டு.. உடனடியாக இணைக்கப்பட வேண்டும்.

9. இணைக்கவில்லை எனில் இந்த மாத ஓய்வூதியம் கிடைக்கப் பெறாது.

10. அனைவரும் "களஞ்சியம் ஆப்" டவுன்லோட் செய்து ஓய்வூதிய விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

11. மேலும் பான் நம்பரும் இணைத்துக் கொள்ளலாம்.

12. தெரியாத அலுவலர்கள் மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலை கருவூல அலுவலகத்தை அணுகி பான் நம்பரை இணைத்துக் கொள்ளலாம்.

13. குடும்ப ஓய்வூதிய காரர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

14. பான் எண் இணைக்க இந்த மாதம் பத்தாம் தேதி கடைசி நாள் ஆகும்..

15. வருமான வரி பிடித்தல் செய்வதற்கு இரண்டு முறைகள் உள்ளன ஒன்று  பழைய முறை.

16. புதிய முறை இரண்டாவது முறையாகும்.

17. புதிய முறையில் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியம்.+ அகவிலைப்படி + மருத்துவ படி.. இதன் கூட்டுத்தொகை மாதம் ஒன்றிற்கு ரூபாய் 62,500  க்கு மேல் இருப்பின் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.. வேறு எந்த கழிவுகளும் கிடையாது..

18. ரூபாய் 62,500 க்கு கீழ் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் இரண்டாவது முறையே சிறப்பானதாகும்...

19. மாதம் ரூபாய் 62,500 க்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் பழைய முறையா புதிய முறையா என்று ஆலோசித்து அதற்கேற்ப வருமான வரி பிடித்த முறையில் தேர்வு செய்து கொள்ளலாம்..

20. இந்த செய்தியை படிக்கும் ஓய்வூதியதாரர்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ பான் எண்ணை இணைக்காவிடில் உடனடியாக இணைக்க செய்யுங்கள்...


          நன்றி..


ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் (வாழ்நாள் சான்று) 2023 - ஓய்வு பெற்ற மாதம் - நேர்காணல் மாதம் - சலுகை காலம் விவரம் (Mustering for Pensioners / Family Pensioners (Lifetime Certificate) 2023 - Retired Month - Mustering Month - Grace Period Details)...


>>> ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் (வாழ்நாள் சான்று) 2023 - ஓய்வு பெற்ற மாதம் - நேர்காணல் மாதம் - சலுகை காலம் விவரம் (Mustering for Pensioners / Family Pensioners (Lifetime Certificate) 2023 - Retired Month - Mustering Month - Grace Period Details)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை - ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல் குறித்து செய்தி வெளியீடு எண் : 1246, நாள்: 27-06-2023 (Press Release No : 1246 - From Department of Treasuries and Accounts - On mustering for pensioners)...

 

>>> கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை - ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல் குறித்து செய்தி வெளியீடு எண் : 1246, நாள்: 27-06-2023 (Press Release No : 1246 - From Department of Treasuries and Accounts - On mustering for pensioners)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம் (NHIS)‌, அரசாணை எண்‌. 204, நிதி (மருத்துவக்‌ காப்பீடு) துறை, நாள்‌ 30-6-2022ல்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விவரங்கள் (New Health Insurance Scheme for Pensioners and Family Pensioners, G.O.Ms.No.204, Finance (Medical Insurance) Department, Dated: 30-6-2022 - Some important details)‌...

 ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌, 2022 (01-07-2022 முதல்‌ 30-6-2026 வரை)-க்கான அரசாணை எண்‌. 204, நிதி (மருத்துவக்‌ காப்பீடு) துறை, நாள்‌ 30-6-2022 அரசால்‌ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


அந்த அரசாணையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விவரங்கள்‌:


1. 01-07-2022 முதல்‌ 30-6-2026 வரைக்கான 4 ஆண்டு கால தொகுப்புக்கு ரூ. 5,00,000/-(ரூபாய்‌ ஐந்து இலட்சம்‌) அனுமதிக்கப்பட்டுள்ளது .


2. கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஒரு கண்ணுக்கு ரூ.30,000/-அனுமதிக்கப்பட்டுள்ளது.


3. பெண்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.50,000/- அனுமதிக்கப்பட்டுள்ளது.


4. United India Insurance Company, சென்னை, இந்த திட்டத்தை செயல்படுத்தும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. இத்திட்டம்‌ ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களுக்கு கட்டாயமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


6. இத்திட்டத்திற்காக ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களின்‌ ஓய்வூதியத்தில்‌ 01-07-2022 முதல்‌ மாதா மாதம்‌ ரூ. 497/- பிடித்தம்‌ செய்யப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


7. குறிப்பிட்ட சிறப்பு சிகிச்சைகளுக்கு ரூ. 10,00,000/- (ரூபாய்‌ பத்து இலட்சம்‌) அனுமதிக்கப்பட்டுள்ளது.


8. அரசாணையில்‌ தெரிவிக்கப்படாத மருத்துவமனைகளில்‌ (Non-Network Hospitals) அவசரமில்லாத சாதாரண சிகிச்சை மேற்கொண்டாலும்‌, நிர்ணமிக்கப்பட்ட தொகையில்‌ 75% திரும்பக்‌ கொடுப்பதாக (Reimbursement) தெரிவிக்கப்பட்டுள்ளது.


9. உள்‌ நோயாளியாக 24 மணி நேரம்‌ மருத்துவமனையில்‌ அவசியம்‌ சிகிச்சை பெற்று இருக்க வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


10. சிறுநீரக கோளாறு (Kidney Dialysis) மற்றும்‌ -கொரோனா நோய்‌ தொற்று-19 (Critical ICU Management) க்கு ரூ. 10,00,000/- (ரூபாய்‌ 10 இலட்சம்‌) வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


11. இத்திட்டத்தில்‌ 203 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவம்‌ மற்றும்‌ அறுவை சிகிச்சை ( 89 Additional Procedures) சிகிச்சையினை 1,221 மருத்துவமனைகளில்‌ செய்து கொள்ள பட்டியலிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


12. திருமணம்‌ ஆகாத மகன்‌ (25 வயது வரை மட்டும்‌), மன வளர்ச்சி குன்றிய மகன்‌/மகள்‌ 25 வயது முடிவுற்றிருந்தாலும்‌ அவர்களுக்கு திருமணம்‌ ஆகும்வரை இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயனடையலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது .


13. மாத வருமானம்‌ ரூ.7850/- க்குள்‌ வருமானம்‌ ஈட்டும்‌ திருமணம்‌ ஆகாத /விவாகரத்தான / விதவைமகள்கள்‌ இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயனடையலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


14. தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்‌ பெற்று வரும்‌ வெளி மாநிலங்களில்‌ வசிப்பவர்கள்‌ அவர்களின்‌ விருப்பத்தின்‌ பேரில்‌ இத்திட்டத்தில்‌ சேரலாம்‌ எனவும்‌, இத்திட்டத்தில்‌ சேர விருப்பம்‌ இல்லாதவர்கள்‌ இத்திட்டத்தில்‌ சேர விருப்பம்‌ இல்லை என விருப்பமனு அளிக்கலாம்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


15. பல்‌ மருத்துவம்‌ மற்றும்‌ அது தொடர்பான அறுவை சிகிச்சை இத்திட்டத்தில்‌ சேர்க்கப்பட்டுள்ளது.


16. ENT தொடர்பான மருத்துவம்‌ இத்திட்டத்தில்‌ சேர்க்கப்பட்டுள்ளது.


17. அரசு மருத்துவமனைகளில்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ சிகிச்சை பெறலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


18. புதியதாக ID Card 60 நாட்களுக்குள்‌ வழங்கப்படும்‌ எனவும்‌, அதுவரை பழைய ID Cardஐப் பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>>  ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (NHIS - 2022) நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை (G.O.Ms.No.204, Dated: 30-06-2022)...






 

ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (NHIS - 2022) நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை (G.O.Ms.No.204, Dated: 30-06-2022) வெளியீடு (THE GUIDELINES FOR IMPLEMENTATION OF NEW HEALTH INSURANCE SCHEME, 2022 FOR PENSIONERS (INCLUDING SPOUSE) / FAMILY PENSIONERS)...



>>> ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (NHIS - 2022) நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை (G.O.Ms.No.204, Dated: 30-06-2022) வெளியீடு (THE GUIDELINES FOR IMPLEMENTATION OF NEW HEALTH INSURANCE SCHEME, 2022 FOR PENSIONERS (INCLUDING SPOUSE) / FAMILY PENSIONERS)...





ஓய்வூதியதார்களுக்கான வாழ்நாள் சான்று - இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் / இ சேவை மையம் மூலம் பெறலாம் (Lifetime Certificate for Pensioners - Available through India Post Payments Bank / e Seva Centres) - அரசாணை வெளியீடு (G.O.Ms.No.136, Dated: 20-05-2022 - PENSION/ FAMILY PENSION - Simplification of mustering Process Inclusion of various options at the convenience of the Tamil Nadu State Government Pensioners for mustering and producing Life Certificate / Digital Life Certificate by utilizing the Door Step Services of the India Post Payments Bank (IPPB) from the year 2022 onwards)...



>>> ஓய்வூதியதார்களுக்கான வாழ்நாள் சான்று - இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் / இ சேவை மையம் மூலம் பெறலாம் (Lifetime Certificate for Pensioners - Available through India Post Payments Bank / e Seva Centres) - அரசாணை வெளியீடு (G.O.Ms.No.136, Dated: 20-05-2022 - PENSION/ FAMILY PENSION - Simplification of mustering Process Inclusion of various options at the convenience of the Tamil Nadu State Government Pensioners for mustering and producing Life Certificate / Digital Life Certificate by utilizing the Door Step Services of the India Post Payments Bank (IPPB) from the year 2022 onwards)...



ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியதார்களுக்கான வாழ்நாள் சான்று - ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பரில் -

1.நேரடியாகவோ/Direct Mustering (Physical Appearance)

2.Life Certificate through Post

3.Digital Life Certificate(DLC) through Jeevan Praman Portal by using Biometric Device

4.இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (India Post Payment Bank-IPPB)/ இ சேவை மையம் மூலம் பெறலாம் - அரசாணை வெளியீடு...

ஓய்வூதியர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறை...



ஓய்வூதியர் சில வழிமுறைகளை பின்பற்றுதல் நல்லது. ஓய்வூதியதாரர் கணவன் இறந்துவிட்டால் அரசுஆணைப்படி மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் (Family Pension) கிடைத்துவிடும். சிக்கல் ஏதுமில்லை. 


ஆனால் முன்பே மனைவி இறந்துவிட்டால் பிறகு கணவன் காலமானால் Lifetime arrears of pension & Family Security Fund Rs.50,000 பெற தாசில்தாரிடம் வாரிசு சான்று பெற்று தாக்கல் செய்யவேண்டும். 


இதைத்தவிர்க்க ஓய்வூதியர் உயிருடன் இருக்கும்போதே ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் முன்பு நேரில் ஆஜராகி இரட்டை பிரதிகளில் (In duplicate) Form A (Prescribed in G.O. Ms. 562-Finance, Dt.15.6.1987 & Nomination for Family Security Fund. ஆகிய இரண்டு வடிவங்களும் Nominee பெயர் Photo ஒட்டி நேரில் ஓய்வூதியதாரர் கையொப்பமிட்டு கொடுத்தால் அலுவலர் Nomination accepted என்று சான்றுடன் ஒரு படிவத்தை திருப்பி கொடுத்த உடன் இரண்டு படிவங்களையும் (Nominee for life time arrears Family Security Fund) ஓய்வூதிய புத்தகத்தில் ஒட்டிவைத்தால் ஓய்வூதியதாரரர் இறந்த பிறகு Nominee சிக்கலின்றி நிலுவைத் தொகைகளை பெறமுடியும்


ராமகிருஷ்ணன்

துணை ஆட்சியர் (ஓய்வு)சென்னை

TANSAF, Chennai - News Letter - April-May 2020

ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதிய விவரங்களை IFHRMS மூலம் ஆன்லைனில் பதவிறக்கம் செய்யும் முறை (Procedure for Download Pensioner Payslip & Pension Pay Drawn & Form 16 )...



 கருவூலம் மற்றும் கணக்குத் துறை

 

அனுப்புநர்

திரு.R.சுப்பிரமணியன்,எம்‌.காம்‌.,

ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலர்‌,

ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலகம்‌,

சென்னை: 600 035.


பெறுநர்

மாநிலத் தலைவர்,

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம்,

பிளாட்‌ எண்‌,1740, 

இ2, இரண்டாவது தளம்,

ஷாலோம் கட்டிடம், 

18-வது பிரதான சாலை,

அண்ணாநகர்‌ மேற்கு, சென்னை - 600 040.


ந.க.எண்‌, 7409/ 2021/ சி நாள்‌, 06-07-2021


அய்யா,

பொருள்:  ஒய்வூதியம்‌ - ஓய்வூதியர்கள்‌ தரவு தளம்‌- ஓய்வூதியம்‌ பெற்ற விவரங்கள்‌ பதிவேற்றம்‌- தொடர்பாக.


பார்வை : தங்கள்‌ சங்க கடிதம்‌ நாள்‌.26.04.2021


பார்வையில்‌ காணும்‌ கடிதத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள குறைபாடுகள்‌ IFHRMS-ல் சரிசெய்யப்பட்டுள்ளது எனும்‌ விபரம்‌ தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌ கீழ்காணும் வழிமுறைகளின்படி ஓய்வூதியர்கள்‌ Online-ல்‌ மாதாந்திர ஓய்வூதிய விபரங்களை பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. இவ்விபரங்களை அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும்‌ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Procedure for Download Pensioner Payslip & Pension Pay Drawn & Form 16 


1. Login - www.karuvoolam.tn.gov.in 


2. User Type — Pensioners 


3. Enter Pension Payment Order Number (Example: PPO No: A125456) 


4. Password — Pensioner Date of Birth (Ex: DDMMYYYY) 


5. Click Reports (Right Side Top Comer)


ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலர்‌,

ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலகம்‌,

சென்னை-35.


>>>  கடிதத்தை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஓய்வூதியதாரர்களுக்கான இணையதளம் ( Pensioners' Portal )...


 பென்ஷனர்கள் தங்கள் விவரங்களை பென்சனர் போர்ட்டலில் பதிவு செய்து கொண்டால் மாதாமாதம் கிடைக்கும் பென்ஷன் தொகை எவ்வளவு, டி ஏ எவ்வளவு போன்ற விஷயங்களையும் தங்களின் வாரிசுதாரர் பதிவு போன்ற விஷயங்களையும் எளிதாக வலைதளம் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் பார்த்துக்கொள்ளலாம். அதற்கான வலைதள விவரம்  கொடுக்கப்பட்டுள்ளது...

https://tnpensioner.tn.gov.in/pensionportal/

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...